Sunday, 15 December 2013

நட்பு பற்றிய பொன்மொழிகள் :-

நட்பு பற்றிய பொன்மொழிகள் :-

* புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும். 

* புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம். 

* ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு. 

* நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை. 

* உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு. 

* உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன். 

* பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது. 

* சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன். 

* புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும். 

* காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான். 

* நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு. 

* நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய். 

* நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும்.

* நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை. 

* உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான். 

* எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக. 

* புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது. 

* உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய். 

* நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.

Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator