Thursday, 12 December 2013

அகங்காரம் அகன்று, ஞானம் வர அருள் செய்ய வேண்டும் பராபரமே






ஆகங்காரம் ஞானம் மாயை நமது வாழ்கையை எப்படி ஆளுகின்றது பற்றி ஒரு சிறிய பதிவு :-

முதலில் மாயை பிறகு நமது அகங்காரம் , கடைசியில் நமக்கு விடை எப்படி ஞானத்தை அடைவது.

"இந்த உலக வாழ்வே மாயம். இங்கு இருப்பதெல்லாம் மாயை." இப்படிப்பட்ட கருத்துகளோடு சிலர் ஆன்மீகத்தில் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் ஞானம் அடைவதற்காக குடும்பத்தை விட்டுவிடுதலே முதல் படி என்றும் பிரச்சாரமும் செய்தார்கள்.

முதலில் இது எனக்கு புரியவில்லை. கடமையை விடுத்து சன்னியாசம் கொள்வது மாயையா? அல்லது கடமையை ஒழுங்காக செய்வது மாயையா?? இது குறித்த குழப்பம் இன்னும் சில இடங்களில் இருக்கிறது.

எது மாயை என்ற சிந்தனை அதிகமாகி அது பற்றி என் நண்பர்களுடன் விவாதித்த போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் இந்த உலகம் மாயை அல்ல. இதில் இருப்பவர்களும் மாயை அல்ல. நம் உறவுகள் மாயை அல்ல. நம் குடும்பம் மாயை அல்ல. எல்லாமே நிஜம்.

ஆனால் நம் அகங்காரத்தின் பொருட்டு இவற்றின்பால் ஏற்படும் உணர்வுகள்தான் மாயை.

அளவுகடந்த / விடமுடியாத - காதல், காமம், பயம், ஆசை, பேராசை, பாசம் போன்ற உணர்வுகள் - மாயை

நம் பிறப்பின் நிமித்தமும், வளர்ப்பின் நிமித்தமும் நமக்கு ஏற்படும் உறவுகளும், கடமைகளும், அதை நிறைவேற்ற அகங்காரம் விடுத்து நாம் செய்யும் கர்மங்களும் - நிஜம்.

நமக்கு ஏற்படும் வியாதிகள் நிஜம். அதை நினைத்து நாம் வருந்துவதும் உழல்வதும் பயப்படுவதும் மாயை.

நமக்கு விதிக்கப்பட்ட கடமைகள் நிஜம். ஆனால் அதை நினைத்து கோபப்படுவது மாயை.

மனிதன் வாழ்வில் உணர்வுகள் இல்லாமல் வாழ முடியுமா?? நிச்சயம் முடியாது.

ஆனால் அந்த உணர்வுகள் எதற்காக, எவ்வளவு வெளிப்படவேண்டும் என்ற தேவையான வரையரைக்குள் இருந்தால் அது நிச்சயம் மாயையாக இருக்காது.

உணர்வுகளின் அளவுகள் தீவிரமாகும்போது அவை நம் நரம்பு மண்டலத்தில் செயல் பட ஆரம்பிக்கிறது. அதில் ஏற்படும் அழுத்தம் உடல், மன வியாதியாக பரிணமிக்கிறது.

எனவே மாயை என்பது நமக்கு வியாதியாகவும், மன அழுத்தமாகவும் மாறி நம் வாழ்வின் நோக்கத்தை சிதைத்து விடுகிறது.

ஒவ்வொரு வாழ்வின் நோக்கமும் ஞானம் அடைவதே... அதை நமக்கு மறக்கடிப்பதே இந்த மாயையின் நோக்கம்.

இந்த மாயையில் இருந்து நாம் விடுபட்டு ஞானத்தை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சுய அகங்காரம் (ஈகோ) அற்ற நிலையில் ஞானம் எளிதில் வெளிப்படும். நம் அகங்காரமும் அதன் விளைவுகளும்தான் ஞானத்தை நம்மிடம் இருந்து மறைக்கும் திரை.

முதலில் எது அகங்காரம் என்று வரையறை செய்வோம்.

1) நான் வேறு / மற்றவர்கள் வேறு என்ற வேறுபடுத்தும் உணர்வே அகங்காரம்.

2) எந்த காரணத்தால் சுகமும், துக்கமும் நம் மனதைப் பாதிக்கிறதோ அதுவே அகங்காரம்.

3) ஒரு செயல் செய்ததால் ஏற்படும் விளைவுகளை எண்ணி ஏற்படும் உணர்வுகளும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள்தாம்.

4) நான் என்ற அகங்கார நிலையில் செய்யும் செயல்கள் கர்மாவை உண்டு பண்ணும். அதாவது நம் நரம்பு மண்டலங்களில் ஒருவித நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

உண்மையைக் கூறினால் நம் அகங்காரம்தான் நம் அடையாளம். அது இருப்பதால்தான் நம்மால் இந்த உலகில் வாழ முடிகிறது. 

நான் வாழ்கிறேன், நான் செய்கிறேன், என்னால்தான் நடந்தது, நான் தான் செய்யவேண்டும், என்னால்தான் முடிந்தது, என் மூலம்தான் நடக்க வேண்டும், நான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன் என்ற உணர்வுகள் எல்லாம் அகங்காரத்தின் வெளிப்பாடுகள். 

இந்த உணர்வுகள்தான் நம்மைப்பற்றி நமக்குள் / சமூகத்தில் ஒரு உயர்ந்த அபிப்பிராயம் /அந்தஸ்து / மரியாதை தரும்நிலையில் வைத்திருக்கின்றன.

ஆனால் ஞானம் வேண்டுமெனில் மேல் கூறிய "நான் " என்பதை விட்டு ஒழிக்கவேண்டும்.அ தை விட்டுத்தான் ஆகவேண்டும். இந்த அகங்காரத்திரை விலகினால்தான் ஞான தரிசனம் கிடைக்கும். அதற்கு குருவின் உதவி கண்டிப்பான ஒன்று. இதனால் நாம் யார் என்ற கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்கும். ஞானம் இதைவிட சிறப்பாக நம்மை வாழ வைக்கும்.

நமது பிராத்தனை கடவுளிடம் எப்படி இருக்க வேண்டும் என்றால் "கடவுளே உடனடியா இந்த மாயை விலகி ,அகங்காரம் அகன்று, ஞானம் வர அருள் செய்ய வேண்டும் பராபரமே " என்று இருக்க வேண்டும்.























Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator