மார்கழியின் சிறப்பு;
----------------------------
சூரியனின் இயக்கம் அயனம் எனப்படும். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர்.தட்சிணாயனத்தின் கடைசி மாதமே மார்கழியாகும்.
பொதுவாக கடவுள்களுக்கு 6 மாதங்கள் என்பது ஒரு பகலாகவும்,6 மாதம் ஒரு இரவாக இருக்கும் என புராணங்கள் கூறுகின்றன.தட்சிணாயன காலம் இரவாகும்.மார்கழி மாதம் கடவுள்களுக்கு அதிகாலை நேரமாகும் அதனால்தான் மார்கழி மாதம் கடவுள் பூஜைகளும்,பஜனைகளும் நடக்கின்றன.
மார்கழி மாதத்தை சைவர்கள் கடவுள் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
மார்கழியின் பனிக் குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே இது பீடை மாதம் என்று சிலர் தவறாக திரித்து கூறி விட்டனர். உண்மையில் அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி மாதம். பீடு என்றால் சிறப்பு பெருமை என்ற அர்த்தமும் உண்டு.எனவே பீடு உடைய மாதம் மார்கழி என்றனர். அதுவே மருவி பீடை மாதம் என்றாகி விட்டது.
கடவுகளின் அதிகார நேரமாகிய மார்கழியில் நாமும் அதிகாலை எழுந்து கடவுளை தரிசிப்பது மிகவும் சிறப்பாகும்.மேலும் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து கடவுளை வணங்கி வாசலில் கோலமிடுவது மிகவும் சிறப்பாகும்.மார்கழியில் கடவுளை வணங்கினால் வீட்டில் லஷ்மி கடாச்சமும்,செல்வமும் பெருகும் என்பது உண்மையாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari

No comments:
Post a Comment