சகோதரிகளே உங்களுக்கான Sunday Special Recipe
முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், மாங்காய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், தனியாதூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலாதூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
முள்ளங்கியை தோல் சீவி துருவுங்கள். எண்ணெயைக் காய வைத்து முள்ளங்கியைச் சேர்த்து நன்கு வதக்கி, அதில் கொடுத்துள்ள தூள்களை சேர்த்து சுருள கிளறி இறக்குங்கள்.
கோதுமை மாவுடன் நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையுங்கள்.
சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து சிறிது பூரணத்தை உள்ளே வைத்து நன்கு மூடி, சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போடுங்கள்.
இருபுறமும் எண்ணெய்-நெய் கலவை ஊற்றி சுட்டெடுங்கள்.
குறிப்பு:
ஸ்டஃப் செய்யும் சப்பாத்திகளை திரட்டும்போது, மாவை கிண்ணம் போல செய்து பூரணத்தை உள்ளே வைத்து தேய்க்கும்போது, பூரணம் சிறிது வெளியே வர வாய்ப்புண்டு.
அதற்கு பதிலாக, ஒரு சப்பாத்திக்கு உரிய மாவை எடுத்து, அதை இரு உருண்டைகளாக்கி, இரு மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டுங்கள்.
ஒரு சப்பாத்தியின் மேலே பூரணத்தை மெல்லிய அடுக்காக பரப்பி, அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடுங்கள்.
இம்முறையில் பூரணம் வெளியே வராது.
செய்து பார்த்துவிட்டு comment கொடுக்கவும்

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment