ப்ளம்ஸ் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்
பழம் வாங்கலையோ… பழம் …. பிளம் பழம்
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் அக்ரிலை ஆய்வு நிறுவனம் செய்த ஒரு ஆய்வானது பிளம், பீச் பழங்களில் புற்றுநொயைத் தடுக்கும் மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். பினோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருட்களான குளொரோஜெனிக் மற்றும் நியோ குளேராஜெனிக் அமிலம் போன்ற இராசாயனங்கள்தான் புற்றுநோய் அணுக்களை அழிக்கிறது.
இந்த இராசாயனங்கள் பழவகைகள் யாவற்றிலும் காணப்படுகின்றன.
இருந்தாலும் பிளம்பழத்தில் கூடுதலாக இருக்கிறது என்கிறார்கள். எமது நாட்டில் பயிரிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கொம்பிலக்ஸ்களில் விற்பனையாகின்றன.
மென்மையான வட்டமான வழவழப்பான தோலையுடைய சதைப்பிடிப்பான இனிய பழம் இது.
மஞ்சள், வெள்ளை பச்சை, சிகப்பு,ஊதா கலர்களில் இருக்கும். பச்சை நிறத்தை அண்டிய வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும்.
தேனீக்கள் தேன் உண்ண முயலுகையில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது.
Autum காலத்தில் இலைகளை உதிர்த்து Early Spring ல் பூக்களைக் கொடுக்கும்.
பெரிய பழம் 3-6 செ.மீ அளவிருக்கும். முற்றிய பழத்தின் மேலே வெள்ளை படர்ந்தது போல இருக்கும்.
மரம் 5-7 மீற்றர் உயரம் வரை வளரக் கூடியது. ரோசேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியல்பெயர் பிருனஸ்சலிசினா.
உலரவைத்த பிளம்ஸ் ப்ருனே Prunes என அழைக்கப்படும். வடஅமெரிக்க, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் இயற்கையில் காணப்பட்டது.
ரோமானியர்கள் வடக்கு ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தினர்.
இதில் பெரும்பாலும் நான்கு வகை இருக்கிறது.
யூரோப்பியன் பிளம்,
ஜப்பானிய பிளம், Damsons and mirabeels
Cherry plums.
ஐரோப்பிய இனத்தை விட ஜப்பானிய இனப் பிளம் பெரியதாக இருக்கும்.
ஜப்பானிய பிளம், சைனீஸ் பிளம் என்றே அழைக்கப்பட வேண்டும்.
ஏனெனில் ஜப்பான் 200-300 வருடங்களுக்கு முன்பிருந்தே சைனாவில் இருந்து இறக்குமதி செய்தது. சைனா 1000 வருடங்களாகவே பயிரிட்டு வந்திருக்கிறது.
ஜப்பான் உலக நாடுகளுக்குப் பரப்பியதால் ஜப்பானிய பிளம் எனப் பெயர் வந்தது.
ஜப்பானிய பிளம் ஏற்றுமதியில் கலிபோனியா பிரபல்யமான இடத்தை வகிக்கிறது.
நேரடியாக பழத்தை உண்பதுடன் கான்களில் கிடைக்கும். ஜூஸ், ஜாம், சிரப் தயாரித்துக் கொள்வார்கள்.
பிளம் யூசிலிருந்து பிளம் வைன், பிரண்டி தயாராகும்.
ஆசியாவில் 'பிக்கிள்ட் பிளம்' ஒரு வகையாகத் தயாரிக்கப்படுகிறது.
சாலட்டாக தயாரித்தும் உண்ணலாம்.
காபோஹைதிரேட் கூடுதலாக உள்ளது. குறைந்தளவு கொழுப்பு உள்ளது. எடை குறைப்பிற்கு ஏற்ற உணவு.
விற்றமின் C அதிகஅளவில் இருப்பதால் தடிமன் சளியை அண்டவிடாமல் தடுக்கும் என்கிறார்கள்.
நார்சத்தும் அதிக அளவில் இருக்கிறது.
100 கிராமில் உள்ள சத்துகள்
காபோஹைதிரேட் 13.1 கிராம், கொழுப்பு 0.62 கிராம்,
Fiber 2.2 கிராம்.
நீர்ப்பிடிப்பு 84 சதவிகிதம்,
Energy 55 kcal,
புரொட்டின் 0.8 கிராம்.
விற்றமின் சீ 5 மிகி
B1 0.02 மிகி.
B2 0.3 மிகி.
B6 0.10 மிகி. Vitamin E 0.7>
Vitamin A 18 ug ,
Potassium- K 172mg,
Calcium-ca 4 mg.
பிளம் சாலட் செய்வது பற்றி தெரிந்து கொள்வோமா.
தேவையான பொருட்கள்
பிளம் பழம் – 2 பச்சை ஆப்பிள் – ½ கிரேப்ஸ் விதையில்லாதது – 5-6 துளசி இலை – 6-7 தேன் – 2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜீஸ் – 1 டேபிள் ஸ்பூன் சால்ட், பெப்பர்பவுடர் – சிறிதளவு
செய்முறை
பழங்கள், துளசி இலைகளைக் கழுவி எடுங்கள.;
பிளம்,ஆப்பிளை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள். கிரேப்ஸ் முழுதாகப் போட்டுக்கோள்ளலாம்.
துளசி இலைகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
லெமென் சாற்றுடன், உப்பு. பெப்பர் பவுடர், தேன் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு தட்டில் பழங்களைப் போடுங்கள். கலந்து எடுத்த சாற்றை மேலே ஊற்றி பிரட்டிவிடுங்கள்.
வெட்டி எடுத்த துளசி இலையை தூவி விடுங்கள்.
புதிய சுவையில் சாலட் தயாராகிவிட்டது.
ஹெல்த்துக்கும் உகந்ததாகும்.
..... |
No comments:
Post a Comment