இன்று ஏகாதசி......
(ஷட்திலா ஏகாதசி)
மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். இது பற்றிய விவரங்கள் புலஸ்திய மகரிஷியால் கூறப்பட்டது.
ஒரு முறை தால்ப்யர் என்ற முனிவர், புலஸ்தியரை தரிசித்து, ''மகரிஷியே! பிரம்மஹத்தி, பசுவைக் கொன்ற பாவம்... அடுத்தவர் பொருட்களைத் திருடிய பாவம் போன்றவை தீர என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து சொல்லுங்கள்!'' என வேண்டினார்.
புலஸ்தியர் பதில் சொல்லத் தொடங் கினார்: ''தால்ப்யரே! மாசி மாத ஆரம் பத்தில், பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி கைகளில் ஏந்த வேண்டும். அதனுடன் எள் & பருத்திக்கொட்டை ஆகிய வற்றைச் சேர்த்து, தூய்மையான ஓர் இடத்தில் (வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அல்லது மாட்டுக் கொட்டகையில் ஒரு பக்கமாக) வைக்க வேண்டும். அந்தக் கலவை, பௌர்ணமி வரை காயாமல் ஈரப் பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத் தும் விலகும்!'' என்ற புலஸ்தியர், ஷட்திலா ஏகாதசி பூஜை முறை யைப் பற்றியும் கூறினார்.
''பூசணிக்காய், தேங்காய், கொய்யாப் பழம், கொட்டைப் பாக்கு & ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் ஸ்வாமியை பூஜை செய்ய வேண்டும். வேத வல்லுநர் ஒருவரை மகா விஷ்ணுவாக பாவித்து, அவருக்குத் தண்ணீர்ச் சொம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், கறுப்புப் பசு ஆகியவற்றை தான மாகக் கொடுக்க வேண்டும். எள்ளை அரைத்து உடலில் பூசிக் கொள்வது, அரைத்த அதே எள்ளுடன் நீராடு வது, எள்ளை தானமாகக் கொடுப்பது, எள்ளை வைத்து ஹோமம் செய் வது, எள்ளையும் நீரையும் சேர்த்து தானமாகக் கொடுப்பது, எள் கலந்த உணவை உண்பது என ஆறு வகையாக எள்ளை உபயோகிப்பதால், இது 'ஷட் திலா' (ஷட்&ஆறு; திலம்&எள்) எனப்படுகிறது. இந்த பூஜையை முறைப்படி செய்தால், நீங்கள் சொன்ன பாவங்கள் எல்லாம் விலகும்!'' என்றார் புலஸ்தியர்.
இப்படிப்பட்ட ஏகாதசி நாளில் பெருமாளை வணங்கி எல்லா நன்மைகளையும் பெறலாம்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment