ஐந்து கர்மங்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
"தேவ யக்ஞம்" : தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள் யக்ஞங்கள் தொண்டுகள், பூஜைகள். யக்ஞம் என்றால் நெய் ஆஹுதி வளர்த்து என்று மட்டும் பொருள் கொள்ளல் வேண்டாம். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவதும் இவ்வகையைச் சேரும். "மனுஷ்ய யக்ஞம்" : இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன அடக்கம்.
"பித்ரு யக்ஞம்" : பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன "ப்ரம்ம யக்ஞம்" : பிரம்ம ஞானத்தை நோக்கிய பயணங்கள், வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல்.
"பூத யக்ஞம்" : என்ற ஐந்தாவது கர்மம், தெரியாமல் செய்த ஹிம்ஸைகளுக்கு பிராயச்சித்தமாக செய்யப்படுவது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் இதில் அடக்கம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது. |
No comments:
Post a Comment