கொசு தொல்லை தாங்க முடியலப்பா ..!!
.......................................................................
தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய் பரப்புவது கொசுக்களாகும். டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன.
இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.
இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது.
ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள்.
ஏடிஸ் இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.
மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம்.
கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.
குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது.
எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.
கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே
காரணமாக இருக்கிறோம்.
இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு குறைப்பது எப்படி ?
1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்.
2. " சுத்தம் " என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.
3. தெருக்களில், குளம், குட்டைகளில் கழிவு மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும்.
சரி என்ன தான் நாம் தற்காப்பு நடவடிக்கை செய்தாலும் .. கொசுவரத்தான் செய்கிறது .. கடிக்கத்தான் செய்கிறது.
அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசு வர்த்திச்சுருள், ALLOUT மற்றும் odomas cream களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!
கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தெடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட், ALLOUT ,odomas போன்றவற்றை ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால்,
அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு, அது முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கெள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக
பல ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.
கொசுவர்த்திச்சுருள் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.
மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்,
கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு கூட காரணமாக இருக்கிறதாம்.
இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது.
அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.
கொசு தொல்ல தாங்கமுடியல...
சரி… இதற்கு வேறு என்னதான் வழி..?
முதன்மையான ஒரே வழி–
கொசுவலையை பயன்படுத்துவது தான்.. நவீன கொசு விரட்டிகள் வருவதற்கு முன்பு ...
இந்த கொசுவலை நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பயன்பட்டு வந்தது தான்.
நம் முன்னோர்கள் வீட்டிலேயே கொசுவலையை தைத்து பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இன்று நாம் அதற்க்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை..
எது எதுக்கோ செலவு செய்கிறோம்... ஒரு கொசுவலையை நாம் வாங்கி வைத்துகொள்வதில்லை ..
நாம் கொசுவலையை பயன்படுத்தினால் கொசுவால் வரும் பல நோய்களை தவிர்க்கலாம்..
மின்சாரம் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் கொசுவலையால் பிரச்சனையில்லை..
இது ஆல்லாமல் சாம்பிராணி அல்லது காய்ந்த வேப்பிலையை போட்டு புகை மூட்டி கொசுக்களை விரட்டலாம்…
இல்லை இல்லை .. நாங்கள் good knight ,all out liquid ,coil தான் பயன்படுத்துவோம் என்று அடம்பிடிப்பவர்கள்...
குறைந்தது நீங்கள் பயன்படுத்தும் அறைகளில் காற்றோட்டம் இருப்பது போல் பார்த்துகொள்ளுங்கள் ...
கொஞ்சமாவது நீங்கள் விஷக்காற்றை சுவாசிப்பதை தவிர்க்கலாம். இல்லையென்றால் நீங்கள் கண்விழிக்கும் வரைக்கும் மருந்தின் வாடை உங்கள அறைகளில் வளம் வந்துகொண்டே இருக்கும்.
துணுக்கு :
.................
கோடாலி தைலம் (axe oil) போன்ற தைல வகைகளை கை,கால்களில் நமக்கு தாங்கக்கூடிய அளவில் தேய்த்து கொண்டால் ..
அந்த தைலத்தின் வாடை இருக்கும் வரை கொஞ்சம் நேரம் கொசு கடியில் இருந்து ஓய்வு எடுக்கலாம்..

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment