அப்படியா...!!
ஆங்கிலம் "வணிகத்தின் மொழி', இலத்தீன் "சட்டத்தின் மொழி', கிரேக்கம்
"இசையின் மொழி', ஜெர்மன் "தத்துவத்தின் மொழி', பிரெஞ்சு "தூதின் மொழி'. தமிழோ "இளமையின் மொழி' என்று கூறியவர் தனிநாயக அடிகளார். "சதுரகராதி' என்னும் நூலின் மூலம், அகராதித் துறைக்கு முன்னோடியாக விளங்கியவர் வீரமாமுனிவர். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அவர் எழுதிய "பரமார்த்த குரு கதை' நகைச்சுவை நயம் மிக்கதாகும்.
வண்ணத் தொலைக்காட்சியில் முதன்மை நிறங்கள் இவையாகும். சிவப்பு, பச்சை, நீலம் ஆகும். இவை மூன்றையும் கலந்தால் வெண்ணிறம் கிடைக்கும். நீலமும் சிவப்பும் கலந்தால் வாடாமல்லி நிறம் கிடைக்கும். மஞ்சளும் நீலமும் கலந்தால் வெளிரிய பச்சை கிடைக்கும். பச்சையும், சிவப்பும் வெவ்வேறு விகிதத்தில் கலந்தால் பசும் மஞ்சளும் செம்மஞ்சளும் கிடைக்கும். கணவன் மனைவியாகப் போகிறவளுக்கு சூட்டப்படும் மாங்கல்யம் காலைப்போல அமைந்திருக்கும். இதற்குக் காரணம் கணவனின் பாதத்தை மனைவி நெஞ்சில் சுமக்க வேண்டுமென்பதற்காகத்தானாம்.
அலமாரி, கிராம்பு, சாவி, ஜன்னல், பரங்கிக்காய் இச்சொற்கள் போர்த்துக்கீசிய சொற்கள் ஆகும். ஆஸ்திரேலியாவில் உள்ள ஜிப்ஸிபாயிண்ட் என்ற ஓட்டலில் ஒரு கங்காருவை பிலியர்ட்ஸ் விளையாட பழக்கி உள்ளார்கள். அது பிலியர்ட்ஸ் ஆடி, களைப்படைந்தால் "லாஞ்சில்' உட்கார்ந்து "ஹாய்'யாக ஓய்வெடுக்கிறதாம்.
"பாபா பிளாக் ஷீப்' என்ற பாட்டை அறியாத ஆங்கிலவழிப் பள்ளிச் சிறார்கள் இருக்க முடியாது. இப்பாடல் உண்மையில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட பாடல் அல்லவாம். 1275ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு கம்பளிக்கு அதிக வரிவிதித்ததைக் கேலி செய்து எழுதி, பாடப்பட்ட பாடலாம். பூஜ்யம் என்றால் மதிப்பற்றது என்று பொருள் அல்ல. பூஜிக்கத் தகுந்தது என்றும் அதற்கு பொருள் உண்டு. அதனால் தான் பெரியவர்களை "பூஜ்யஸ்ரீ' என்றும் அழைக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் மாளிகை 1950இலி ருந்து "ராஷ்டிரபதி பவன்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முந்தைய பெயர் கவர்ன்மெண்ட் ஹவுஸ். |
No comments:
Post a Comment