பூசணிக்காய் :
(ஆயுர்வேதப்பெயர் - கூஷ்மாண்டம்)
Ø கூஷ்மாண்ட லேகியம் – உடல்பலம்.
Ø பூசணி பூவை சீனாவில் மஞ்சட்காமாலை, இருமல், சீத பேதிக்காக பயன்படுத்துகிறார்கள்.
Ø பிஞ்சுக்காய்கள் வாதத்தைபோக்கக்கூடியது, பித்தத்தை போக்கக்கூடியது.
Ø பூசணி பழம் – மன நோயை குணப்படுத்தக்கூடியது.பயந்த நிலையை உடையவர்கள். மனநோயை பொருத்து கால்கை வலிப்பு போன்றவற்றைகுணப்படுத்தக்கூடியது.
Ø பூசணி இலையை அதனுடன் மிளகு,சீரகம் சிறிது எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து கஷாயமாக வைத்து குடிக்கின்றபொழுது வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமன்(வயிறு அடைப்பு) போன்றவற்றைகுணப்படுத்தக்கூடியது.
Ø பூசணியின் சதைப்பற்றைஎடுத்துக்கொண்டு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை–மாலை என ஒரு வெருகடி அளவு உள்ளுக்கு குடிக்கின்ற பொழுது இரத்தம் கக்குகின்ற நிலை(சளியுடன் இரத்தம், மூக்கிலேஇரத்தம்) குணமாகும்.
தலைவலியை போக்கக்கூடியது.
Ø சர்க்கரை பூசணி(பரங்கிக்காய்) இனிப்பாக இருக்கும்.
சாதாரண பூசணியின் சத்தை பெற்றுள்ளது.
பூசணி விதை,வெள்ளரி விதை இவை இரண்டையும் சேர்த்து குடிக்கின்ற பொழுது விந்து பயனத்தன்மை;ஆயுள்; எண்ணிக்கை; நீர்த்துப்போகாமல் வைக்கக்கூடியது.
Ø பூசணி பாயசம்-
பூசணியின்தோல், வெள்ளரி விதை இவற்றை பொடித்தும் இதனுடன் பால், சர்க்கரை இவை சேர்த்துஉள்ளுக்கு குடிக்கின்ற பொழுது வயிற்றுகிருமிகள் வெளியாகும்.
நாடா புழுவை வெளியேற்றக்கூடியது.
விந்து பலம் பெரும்.
மெலிந்த தேகத்தினர் இவற்றை உட்கொள்ளலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதைஉணவாக உட்கொள்ளலாம்.
உடல் பலம் தரும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment