முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர், ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியை பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்'' என்றார்.
பா.ஜ.க. அரசு எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடியிடம் அப்துல்கலாம் பட்டியலிட்டார். சுமார் 10 நிமிடங்கள் மோடியிடம் பேசிய அப்துல்கலாம் 3 முக்கிய அறிவுரைகளையும் கூறினார்.
இந்தியாவில் மொத்தம் சுமார் 20 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இதில் 15 கோடி குடும்பங்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளன. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுங்கள்.
அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திலும் சம்பாதிக்கும் ஆற்றலை உரு வாக்குங்கள் என்று அப்துல்கலாம் கேட்டுக் கொண்டார்.
அடுத்து நதி நீர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடியிடம் அப்துல் கலாம் அறிவுறுத்தினார். இதற்காக தேசிய நீர்வழிப்பாதை திட்டத்தை அமல்படுத்த கேட்டுக் கொண்டார். நதிகளை இணைத்து உருவாக்கப்படும் இந்த திட்டத்தால் நாடெங்கும் உள்ள 6 லட்சம் கிராமங்களும் நகரங்களும் தடையின்றி தண்ணீர் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் கடும் வறட்சி காலத்தில் கூட எந்த ஊரிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அது போல நிறைய மழை பெய்யும் போது, மழை தண்ணீரை மற்ற பகுதிகளுக்கு திருப்பி விட்டு வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகள், சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் மோடியிடம் அப்துல்கலாம் விளக்கிக் கூறினார்.
மூன்றாவதாக வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்வதிலும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சுமார் 6½ கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அப்துல்கலாம், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் இந்தியாவில் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் உண்டாகும் என்றார்.
அப்துல்கலாம் சொன்ன இந்த 3 அறிவுரைகளையும் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். ''உங்கள் அறிவுரைகளை ஏற்று நல்லாட்சி செய்து, நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவேன்'' என்று கலாமிடம் மோடி உறுதியளித்தார்.
இதற்காக மோடிக்கு அப்துல்கலாம் தனது முக நூல் (பேஸ்புக்) பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment