இலவச மருத்துவத் தகவலுக்கு 104!
விபத்தோ, எமர்ஜென்ஸியோ.. உடனே நாம் அழைக்கும் எண் 108! அழைத்ததும் உதவிக்கு ஓடி வரும் ஆம்புலன்ஸ்.
அதே போல இப்போது இன்னொரு எண்ணை, அவசரகால சிகிச்சை மற்றும் மேலாண்மை நிறுவனமான 'GVK-EMRI' உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
உடல்நிலை சரியில்லையா?
வயிற்று வலி, தலை வலியா?
காய்ச்சலா? 104 - என்ற எண்ணுக்கு அழைத்தால்,
நமக்கு தேவையான மருத்துவ அறிவுரைகள், தகவல்கள், ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் பெற்றுத் தருவார்கள்.
மேலும், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு அருகே எந்த ரத்த வங்கி இருக்கிறது என்ற தகவல்,
அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர்கள், புதிய நோய்த்தொற்று பற்றிய தகவல்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான மருத்துவத் தகவல்கள் என அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது இந்த 104 சேவை.
மேலும் 108-ஐ அழைத்து ஆம்புலன்ஸ் வரத் தாமதமானால், பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதல் உதவி பற்றியும் தகவல் கிடைக்கும்.
24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவைக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
- Vikatan EMagazine
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment