சொந்தமாக கார் வைத்திருக்கும் நண்பர்களே உங்களுக்காக ஒரு செய்தி ....
தானியங்கி கியர் மாற்றம் வரவேற்கப்படும் தொழில்நுட்பம்!
தானியங்கி கியர் மாற்றம் என்பது, முன்பு, ஏதோ ஒருசில சொகுசுக் கார்களில் மட்டும், காணப்பட்டு வந்த அம்சமாக இருந்தது.
ஆனால், இன்று ஆட்டோ ட்ரான்ஸ் மிஷன் என்பது, சிறிய ஹேட்ச்பேக் கார்களில் கூட காணப்படும் அல்லது தேவைப்படும் ஒன்றாகிவிட்டது.
மாருதி ஏ - ஸ்டார், ஹோண்டா ப்ரையோ போன்றவை, இதில் அடக்கம்.
தற்போது, புதிதாக வந்துள்ள மாருதி செல்ரியோவிலும் கூட, தானியங்கி கியர் மாற்றத்தின் அம்சங்கள் (மானுவலுடன் சேர்ந்து) கொடுக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.
இந்த தானியங்கி கியர் மாற்றத்தின் தொழில்நுட்பம் என்னவென்பதை, சற்றே விரிவாக பார்ப்போம்.
இந்த கியர் மாற்றும் முறையில், க்ளட்ச் பெடலோ, கியர் மாற்றும் குமிழியோ இருக்காது.
ஏனென்றால், ஒவ்வொரு முறையும், வேகத்திற்கு ஏற்ப கியரை நாம் மாற்ற வேண்டியதோ, மாற்றும் போது க்ளட்சை அழுத்த வேண்டியதோ இல்லை.
அந்த வேலையை, காரே தானாக செய்துக் கொள்கிறது.
காரின் வேகத்தை கூட்டவும், குறைக்கவும் உபயோகப்படுத்தப்படுவது, ஆக்சிலரேட்டர்.
இதை அழுத்தும் போது, அவுட்புட் ஷேப்ட், கவர்னரை சுழல வைக்கிறது.
காரின் வேகத்திற்கு ஏற்பத்தான், கவர்னரின் சுழற்சி இருக்கும். வண்டியின் வேகம் அதிகரிக்கும் போது, கவர்னரின் சுழற்சியினால் ஏற்படும் தள்ளும் ஆற்றல், கியர் ஆயிலை பம்பிலிருந்து, ஷிப்ட் வேல்விற்கு அனுப்புகிறது.
ஷிப்ட் வேல்வ், இந்த எண்ணெயை, கியர் மாறும் இடத்திற்கு தள்ள, கியர் மாறுகிறது.
வண்டியின் வேகம் குறையும்போது, வேல்வ் உள்நோக்கி நகர, கியர் ஆயில் எதிர் திசையில் தள்ளப்படுகிறது.
இதனால், கியர் மாற்றம் நடைபெறுகிறது. க்ளட்ச்சிற்கும், பிரேக் பாண்டிற்கும் கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு ஏற்ப, கியர் மாறுகிறது.
முன்பெல்லாம், தானியங்கி கியர் மாற்றம் உள்ள கார்களில், கியர் தேர்ந்தெடுக்கப்படுவதில் குறைபாடுகளும், அதிக எரிபொருள் செலவாவதும், காரின் விலை அதிகமாய் இருப்பதையும் காணமுடிந்தது.
ஆனால், தற்போதைய கார்களில், இம்முறை அதிக துல்லியமாகவும் சிக்கனமாய் (எரிபொருள் குறைவாக) இயங்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படுகிறது.
இன்றைய நகரப் போக்குவரத்திற்கு, தானியங்கி கியர் மாற்றம், மிகவும் சுலபமான சுகமான பயணத்தை வழங்கக் கூடியதாய் உள்ளதால், இளைஞர்கள், குறிப்பாக பெண்களும் இதை அதிகம் விரும்புகின்றனர்.
தானியங்கி கியர் மாற்றம் உள்ள கார்களில், "டி' என்ற நிலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால் போதும்,
வெறும் ஆக்சிலரேட்டரை அழுத்தியும், விலக்கியும் மட்டுமே, நாம் வண்டியை ஓட்ட முடியும்.
இந்த தொழில்நுட்பம், ஒவ்வொரு காரிலும் ஒவ்வொரு முறையில் இயங்கும்.
ஆனால், பொதுவாக சில விதிகளை, இந்த கியர் முறையில் நாம் கடைபிடிக்க வேண்டும்.
நாம் முதலில் வண்டியை உயிர்பிக்கும் போது, கியரை பார்க் என்ற நிலையில் வைத்து, பிரேக் பெடலை அழுத்தி, பின் சாவியை திருப்பி, இன்ஜின் ஸ்டாக்ட் செய்ய வேண்டும்.
வண்டி நகர, பின் (டி) ட்ரைவ் என்ற நிலையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
க்ளட்ச் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், வலது காலையே, ப்ரேக் மற்றும் ஆக்சிலரேட்டர் பெடல்களை இயக்க உபயோகிப்பது, குழப்பம் வராமல் இருக்க உதவும்.
போக்குவரத்தின் போது, வண்டியின் வேகத்தை குறைக்க வேண்டியோ, நிறுத்த வேண்டியோ இருந்தாலும், "பி' நிலைக்கு திரும்ப வேண்டியதில்லை.
வண்டியை முழுவதுமாய் நிறுத்தும் போது மட்டும், "பி' நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
"பி' மற்றும் "டி' நிலை "என்' நியூட்ரல் நிலை மானுவல் கியரில் உள்ளது போல், நியூட்ரலைக் குறிக்கும்.
மேலும், "ஆர்' ரிவர்ஸ் என்ற நிலை, பின்னோக்கி போக உதவுவது.
இவற்றைத் தவிர, சில கார்களின், 1 மற்றும் 2 என்ற நிலைகள் தாமாக கியரைத் தேர்ந்தெடுப்பதற்காக (மானுவல்) கொடுக்கப்பட்டிருக்கும்.
இதை சரிவுகளில் இறங்குவது போன்ற நேரங்களில், உபயோகித்துக் கொள்ளலாம்.
.....

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment