மதுரை மாவட்டம் ..சோழவந்தான் அருகிலிருக்கும் திருவேடகம் அருகில் " தேனுர் " என்ற சிறு கிராமத்தில் இருக்கும் சிவன் கோவில் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது ..
ஒரு காலத்தில் அதன் கட்டிடத்தின் மாடியில் தங்கியிருந்த நினைவுகளை என் கணவர் கூற சாட்சியாக இடிந்து கிடந்தன கற்குவியல்கள் ...நான்கு கல் தூண்கள் ..அதன் மேலே கற்கூரை ஆடிய நிலையில் நிற்க உள்ளே காட்சி தரும் என் பெருமான் ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவர் ..சிதிலமடைந்திருக்கும் அந்தக் கோவிலில் இருமுறை தங்கக் கட்டிகள் புதையலாக கிடைத்திருக்கின்றன ..அதைக் கைப்பற்றிக் கொண்டு போன அரசாங்கமும் கோவிலைப் பற்றிக் கவலைப் படவில்லை ..அந்தக் கோவிலுக்கென இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள மானியம் இருக்கிறது ..அந்த மானியத்தை அனுபவித்து வரும் " தேனுர் " கிராமத்தின் பிரசிடெண்டும் கோவிலைப் பற்றிக் கவலைப் படவில்லை ..இதைப் பற்றி உலகுக்குச் சொல்ல உங்களால் முடியும் ..
என் நட்பு வட்டத்தில் உள்ள சிலரால் அந்தக் கோவில் புதுப்பிக்கப் படுவதற்கான முயற்சிகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கயுடன் இதை பகிற்கிறேன். இந்த உதவியைச் செய்து அந்தக் கோவிலைக் காக்கும் படி உங்களிடம் மீண்டும் கரம் குவித்து உதவி கேட்கிறேன் ..மற்ற நண்பர்கள் முடிந்தவரை இதற்கான குரலைக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment