ஜய ஜய ஜய... இதோ மூன்றாவது ஜய...இன்று...(2014)
ஜய ஜய ஜய... இதோ மூன்றாவது ஜய...இன்று...(2014)
ஐயன் அவதரித்து 120 வருஷங்கள் பூர்த்தியாகி 121 ஆம் வருஷம் துவக்கம்...
1894 சித்திரையில் முதல் ஜய...
அந்த ஜய வருஷத்தில் வைகாசி அனுஷம் அதில் அவதரித்தது நம் அனுஷஜோதி...
13 வயதில் சன்யாச கோலம் பூண்டு பட்டம் ஏற்றது, 1907 இல்.
அதன் பின்...
1954 இல் இரண்டாம் ஜய...
அறுபத்து வருஷங்கள் பூர்த்தி செய்தது அந்த அறுபத்து சந்நியாசி. (அறு பற்று)
1954 ஓரிக்கை சஷ்டியப்த பூர்த்தி...அதன் பின் 20 வருஷங்கள் தேனம்பாக்கம்(சிவாஸ்தானம்), ஸ்ரீ மடம் என்று...
இந்த காலகட்டத்தில் தான் ஐயனின் உயிர் மூச்சாம் வேதம், அவர் அவதார நோக்கமாம் வேத ரக்ஷணம்...இது பற்றிய எண்ணற்ற திட்டங்கள்...
வெகு குறிப்பாக வேத ரக்ஷண நிதி டிரஸ்ட்...
1978 முதல் 1984 ஏப்ரல் 14 முடிய ஆறு வருஷங்கள் 4000 கிலோ மீட்டர் தூரம் நடை...
நடமாடும் தெய்வம் அல்லவா? அப்போது அதற்கு வயது என்ன தெரியுமா? காலாதீதனுக்கு வயது என்று தான் ஒன்று உண்டா என்ன?
நம் அறியாமை...இப்படி மாய்ந்து மாய்ந்து போகத் தான் முடியும்.
84 முதல் 90 வயது முடிய அது பாரத தேசத்தின் மத்திய பகுதிகளை (கர்நாடக, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரம்) வலம் வந்து வளம் தந்தது.
இதோ மூன்றாவது ஜய...இன்று...(2014)
மும்முறை வலம் வருதல் என்று சொல்வார்கள்...
முதல் ஜய - குழந்தையாய், சாதாரண மனிதப் பிறப்பாய்...
இரண்டாம் ஜய - ஸ்ரீ பீடத்தின் பீடாதிபதியாய்...
இந்த மூன்றாம் ஜய - ஆன்மீக உலகத்தின் சக்கரவத்தியாய், சூக்ஷமத்தில்.
நம்மில் பலருக்கு முதல் இரு ஜய வில் பங்கு பெறும் பாக்கியம் கிடைக்க வில்லை...
சொல்வார்களே, மூன்றாவது பிரதக்ஷணம் நடந்து கொண்டிருக்கிறது. இதிலாவது போய் சேர்ந்துகொள் என்று...
இதில் சேர்ந்து கொள்வோம்...
ஜய வருஷ சங்கர ஜயந்தி, ஐயன் ஜயந்தி, நம் குருவரர்கள் ஜயந்தி, ஐயன் ஆராதனை, வியாச பூஜை, சாதுர்மாஸ்யம் என்று இந்த ஜய வை ஜய ஜய என கொண்டாடி களித்திடுவோம்.
ஐயன் மகேந்திர மங்கலத்தில் வேதம் படித்த(!!!) நூற்றாண்டு பூர்த்தி...அங்கேயும் சென்றிடுவோம்...
ஜய ஜய சங்கர! ஜய ஜய ஜய சங்கர...!!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment