பகுத்தறிவுப் பூர்வமான பயன்மிக்க ஆராய்ச்சி முடிவுகளை உடையது: இந்து வேதம்
---------------------------------------------------
மூலப் பதினெண் சித்தர்களுடைய இந்து வேதம் அண்டங்கள், பேரண்டங்கள் அண்டபேரண்டங்கள் முழுவதும் பரவியிருக்கின்ற ஒன்று என்பதன¡ல், இது இந்த மண்ணுலகியலின் இயல்புகளுக்கும், இயக்கங்களுக்கும் விண்ணியலோடு உள்ள தொடர்புகளையெல்லாம் முழுமையாக ஆராய்ந்து தேவையான உண்மைகளையெல்லாம் இந்து மதத்தின் வாழ்வியலாக வார்த்தெடுத்துத் தருகிறது.
அதாவது இந்த இந்து வேதத்தில் தான்
- இம்மண்ணுலகம் எப்போழுது தோன்றிற்று, எப்படித் தோன்றிற்று?,
- இம்மண்ணுலகம் எப்பொழுது அழியும், எப்படி அழியும்?,
- இம்மண்ணுலகில் பயிரினங்களும் உயிரினங்களும், எப்பொழுது தோன்றின, எப்படி அழியும்?,
- இம்மண்ணுலகோடு தொடர்புடைய விண்மீன்கள் என்னென்ன, இராசிகள் என்னென்ன, கோள்கள் என்னென்ன?,
- இந்த மண்ணுலகுக்குத் தொடர்பான விண்ணுலகக் கடவுள்களின் வகைகள் என்னென்ன, மண்ணுலகக் கடவுள்களின் வகைகள் என்னென்ன?
முதலிய மிகப் பெரிய பெரிய வின¡க்களுக்கெல்லாம் மிகமிகத் தெளிவான நேரடியான வரையறுக்கப்பட்ட பதில்களைப் பெற்றிருக்கிறது.
எனவேதான், இந்து வேதம்
ஒரு நொடிப்பொழுது,
ஒரு வின¡டிப்பொழுது,
ஒரு சாமப்பொழுது,
ஒரு பகற் பொழுது,
ஒர் இரவுப்பொழுது,
ஒரு நாட்பொழுது
முதலிய அனைத்தையும் கண் இமை தான¡க இமைக்கின்ற நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகமிக நுட்பமாகவும் திட்பமாகவும் வரையறுக்கப்பட்ட அளவுகளைப் பெற்றனவாக உருவாக்கியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகத் தான் ஒவ்வொரு
நாளின் பெயர்,
மாதத்தின் பெயர்,
ஆண்டின் பெயர்,
விண்மீன்களின் பெயர்,
இராசிகளின் பெயர்,
கோள்களின் பெயர்,
ஒரு நாளின்
ஆறுகாலப் பெயர்,
எட்டு யோக நிலைப் பெயர்,
ஆண்டின் ஆறு பருவங்களின் பெயர்,
முதலியவைகள் அனைத்தும் மிகமிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வரையறுத்து வழங்கப் பட்டிருக்கின்றன இந்து வேதத்தால்.
இவையனைத்தையும் அண்டபேரண்டம் முழுவதையும் ஆளும் அனைத்து வகைப்பட்ட பதினெண் சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள், சித்தர்கள், வழிபடு நிலையினர்கள், கடவுள்கள், தேவியர்கள், தேவதைகள், தேவர்கள், கணங்கள், இருடிகள், முனிவர்கள் முதலியோர் கணக்கற்ற கோடி கோடி ஆண்டுகளாக ஆராய்ந்தறிந்தே உருவாக்கியிருக்கிற¡ர்கள்.
இப்படிப்பட்ட பகுத்தறிவுப் பூர்வமான பயன்மிக்க ஆராய்ச்சி முடிவுகளை உடைய ஒரே ஒரு வேதம் ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்து வேதம்தான்.
- ஞானாச்சாரியார் 'அன்பு சித்தர்'
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment