"மோடியின் மனைவி பற்றிய சர்ச்சை"" உண்மை என்ன?
குஜராத்திலும், ராஜஸ்தானிலும் உள்ள பல சமூகங்களின் வழக்கப்படி சிறு வயதிலேயே ஜசோதாபென் என்ற சிறுமியை, பாலகன் நரேந்திர மோதிக்கு நிச்சயித்து ஒரு "பால கல்யாண" சடங்கை குடும்பத்தினர் 1968ல் நடத்தியிருக்கிறார்கள்.
பொதுவாக, இது போன்ற முறையில், இருவரும் பெரியவர்களானதும் வேறு எந்த பிரசினையும் ஆட்சேபங்களும் இல்லை என்றால், கவுனா (Gauna) என்ற முறையான திருமணச் சடங்கு நடத்தப் பட்டு அவர்கள் கணவன் மனைவி ஆவார்கள். பிரசினைகளோ ஆட்சேபங்களோ இருந்தால், பழைய ஒப்பந்தம் தானாக ரத்தாகி விடும். வேறு இடங்களில் வரன் பார்த்து கல்யாணம் முடிப்பார்கள்.
நரேந்திர மோதி விஷயத்தில் 18 வயது ஆனவுடன், அவர் திருமண வாழ்வில் ஈடுபட தனக்கு விருப்பம் இல்லை, சமூக சேவையும் தேச சேவையுமே முக்கியம் என்று கூறி விடுகிறார். இமயமலையிலும் வட இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் துறவி போல அலைந்து திரிகிறார். பின் திரும்பி வந்து ஆர் எஸ் எஸ் பிரசாரகராக, முழு நேர ஊழியராக ஆகி விடுகிறார். கவுனா திருமண சடங்கும் நடைபெறவில்லை.
அந்த சமூக நடைமுறைகளின் படியே கூட, ஜசோதாபென் வேறு ஒருவரை மணம் புரிந்திருக்கலாம். ஆனால் மோதி இப்படி சொல்லி விட்டதால், தானும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஜசோதாபென் தனது சுய விருப்பத்தின் பேரிலேயே முடிவெடுத்து விடுகிறார். இந்தியாவில், குறிப்பாக கிராமப் புறங்களில் பெண்கள் இது போன்ற ஒரு வைராக்கியத்துடன் இருப்பது ஆச்சரியம் அல்ல.
அதன் பிறகு, ஒரு சிறிய கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக அவர் பணீயாற்றி வருகிறார். மோதியின் வளர்ச்சியிலும் பெருமையிலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறார். அனாவசியமாக ஊடகங்கள் அவரைத் தொந்தரவு செய்வதை, சீண்டுவதை அவர் வெறுக்கிறார். கிராமத்துப் பெண்களுக்கே உரிய வெள்ளந்தித் தனத்துடன் "அவர் ஒரு நாள் மீண்டும் என்னிடம் வரலாம்" என்று கேட்பவர்கள் சிலரிடம் சொல்கிறார். தான் முதல்வரான பிறகு சில முறை மோதி குஜராத் தலைநகர் காந்தி நகரில் வசிப்பதற்கு அழைத்தும் அவர் செல்லவில்லை.
இது தான் விஷயம். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்ததாக இருந்தாலும் கூட, பொதுவாழ்வில் தலைவர் என்று வந்து விட்ட காரணத்தால், வெளிப்படையாக மோதியே நேர்காணல்களில் இந்த விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப் பட்ட புத்தகங்களிலும் இந்த விவரணம் தெளிவாகவே உள்ளது. இதில் பூடகமாகவோ, சட்ட விரோதமாகவோ, அற மீறலாகவோ ஒன்றுமே இல்லை. ஆயினும் அற்பர்கள் மோதிக்கு எதிராக இத்தகைய மலினமான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
நரேந்திர மோதி என்ற மனிதர் மீது, அவரது தகுதிகள், திறமைகள், சாதனைகள், கனவுகள் மீது மாபெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் கோடிக் கணக்கான இளைஞர்களை இந்த சில்லுண்டித் தனமான பிரசாரங்கள் எதுவும் திசை மாற்றி விடாது.
நன்றி தமிழ் ஹிந்து
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment