Monday 14 April 2014

மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம்




மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம் ------------------------------------------------------------  காசி நகரம் பாரததேசத்தின் ஏழு மோட்சபுரிகளில் ஒன்று. காசியில் இறந்தவர்களுக்கு மறுபிறப்பில்லை என்ற ஒரு தீவிரமான கொள்கை உள்ளது. காசி நகரத்தில்,மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம்,அஸி கட்டம்,தசாஸ்வமேத கட்டம், வாரணாஸங்கம கட்டம் ஆகியவை கங்கையில் நீராடும் முக்கியத் துறைகளாகும். இந்நகரத்தில் உள்ள பல கோவில்களுள் பிரதானமான விஸ்வநாதர்கோவிலைத் தவிர, அன்னபூரணி ஆலயம், விசாலாட்சி ஆலயம், தண்டிஆலயம் முதலியவை முக்கியமானவை.              1934-ஆம் வருடம் அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி புதன்கிழமை விஜயதசமி அன்று ஸ்வாமிகள் கங்கையைக் கடந்து எதிர்க்கரையில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்திற்குச் சென்று அங்கு தட்சிணாமூர்த்தியைத் தரிசனம் செய்து கொண்டு,பக்தர்கள் செய்வித்த பாதபூஜையையும் ஏற்றுக்கொண்டார்கள். அக்டோபர் பத்தொன்பதாம் தேதி கோகட்டில் தர்பங்கா மஹாராணி ஸ்வாமிகளைத் தரிசித்து, ஸ்வாமிகளுக்குப் பாதபூஜை செய்தார். இருபத்தேழாம் தேதி சனிக்கிழமை காசியிலுள்ள வடநாட்டு கௌட சந்நியாசிகள் ஸ்வாமிகளுக்கு பிக்ஷை அளித்தனர்.அதற்கு மறுநாள், அத்தலத்தில் வசிக்கும் தென்னாட்டு ச்ந்நியாசிகளும் ஸ்வாமிகளுக்கு பிக்ஷை அளித்தார்கள்.              நவம்பர் மாதம் பதினாறாம் தேதி ஸ்வாமிகள் ஹனுமந்த கட்டத்தில் அஸி நதியில் ஸ்நானம் செய்தார்கள். நவம்பர் பத்தொன்பதாம் தேதி ஹனுமந்த கட்டத்தில் பஞ்சகங்கா ஸ்நானம் செய்துவிட்டு, காசியின் நகர தேவதையையும் குகையையும் தரிசனம் செய்து கொண்டார்கள். டிசம்பர் பதினேழாம் தேதி மார்கழி தனுர்மாஸ பூஜை ஆரம்பமாயிற்று. அம்மாதம் பத்தொன்பதாம் தேதி ஸ்வாமிகள் வியாச-காசிக்குச் சென்று அங்கு வேத வியாசரைத் தரிசனம் செய்தார்கள். டிசம்பர் இருபத்தொன்றாம் தேதி கேதார கட்டத்தில் கௌரீ கும்பத்தில் ஸ்நானம் செய்தார்கள்.                   1934-ஆம் வருடம் அக்டோபர் மாதம் முழுவதும் கோகட்டில ஸ்ரீராய் ஸாஹேப் மாதவராம் ஸந்த் அவர்களின் மாளிகையிலேயே தங்கியிருந்தார்கள். அதன் பின்னர் ஹனுமந்த கட்டத்திலுள்ள தம் சொந்த மடத்திற்கு விஜயம் செய்து, காசியை விட்டுப் புறப்படும் வரையில் அங்கேயே தங்கி இருந்தார்கள்.  @[100004757894449:2048:Yogitha Jaisankar] @[100001731948569:2048:Sivaraman Ramachandran] @[100000489327326:2048:Akhila Shasthry Venkatesan] @[769534037:2048:Skandaprasad Seetharaman] @[100000606630729:2048:Krishnan Soundararajan] @[1700601937:2048:Dhanalakshmmi Shivam] @[1096277020:2048:Kalyanasundaram Ramachandaran]@[100000551327036:2048:Kalyanasundararajan Kaleeswaran] @[100001713152506:2048:Vidhya Lakshmanan] @[1086795354:2048:Vidya Ravi] @[1273380970:2048:Nagojee Rao C] @[100001229642157:2048:Suriya Narayanan] @[1820028519:2048:Sethu Raman]
 
மஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம்
------------------------------------------------------------

காசி நகரம் பாரததேசத்தின் ஏழு மோட்சபுரிகளில் ஒன்று. காசியில் இற...ந்தவர்களுக்கு மறுபிறப்பில்லை என்ற ஒரு தீவிரமான கொள்கை உள்ளது. காசி நகரத்தில்,மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம்,அஸி கட்டம்,தசாஸ்வமேத கட்டம், வாரணாஸங்கம கட்டம் ஆகியவை கங்கையில் நீராடும் முக்கியத் துறைகளாகும். இந்நகரத்தில் உள்ள பல கோவில்களுள் பிரதானமான விஸ்வநாதர்கோவிலைத் தவிர, அன்னபூரணி ஆலயம், விசாலாட்சி ஆலயம், தண்டிஆலயம் முதலியவை முக்கியமானவை.

1934-ஆம் வருடம் அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி புதன்கிழமை விஜயதசமி அன்று ஸ்வாமிகள் கங்கையைக் கடந்து எதிர்க்கரையில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்திற்குச் சென்று அங்கு தட்சிணாமூர்த்தியைத் தரிசனம் செய்து கொண்டு,பக்தர்கள் செய்வித்த பாதபூஜையையும் ஏற்றுக்கொண்டார்கள். அக்டோபர் பத்தொன்பதாம் தேதி கோகட்டில் தர்பங்கா மஹாராணி ஸ்வாமிகளைத் தரிசித்து, ஸ்வாமிகளுக்குப் பாதபூஜை செய்தார். இருபத்தேழாம் தேதி சனிக்கிழமை காசியிலுள்ள வடநாட்டு கௌட சந்நியாசிகள் ஸ்வாமிகளுக்கு பிக்ஷை அளித்தனர்.அதற்கு மறுநாள், அத்தலத்தில் வசிக்கும் தென்னாட்டு ச்ந்நியாசிகளும் ஸ்வாமிகளுக்கு பிக்ஷை அளித்தார்கள்.
நவம்பர் மாதம் பதினாறாம் தேதி ஸ்வாமிகள் ஹனுமந்த கட்டத்தில் அஸி நதியில் ஸ்நானம் செய்தார்கள். நவம்பர் பத்தொன்பதாம் தேதி ஹனுமந்த கட்டத்தில் பஞ்சகங்கா ஸ்நானம் செய்துவிட்டு, காசியின் நகர தேவதையையும் குகையையும் தரிசனம் செய்து கொண்டார்கள். டிசம்பர் பதினேழாம் தேதி மார்கழி தனுர்மாஸ பூஜை ஆரம்பமாயிற்று. அம்மாதம் பத்தொன்பதாம் தேதி ஸ்வாமிகள் வியாச-காசிக்குச் சென்று அங்கு வேத வியாசரைத் தரிசனம் செய்தார்கள். டிசம்பர் இருபத்தொன்றாம் தேதி கேதார கட்டத்தில் கௌரீ கும்பத்தில் ஸ்நானம் செய்தார்கள்.

1934-ஆம் வருடம் அக்டோபர் மாதம் முழுவதும் கோகட்டில ஸ்ரீராய் ஸாஹேப் மாதவராம் ஸந்த் அவர்களின் மாளிகையிலேயே தங்கியிருந்தார்கள். அதன் பின்னர் ஹனுமந்த கட்டத்திலுள்ள தம் சொந்த மடத்திற்கு விஜயம் செய்து, காசியை விட்டுப் புறப்படும் வரையில் அங்கேயே தங்கி இருந்தார்கள்.

 

__._,_.___


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator