வாக்கல்ல . . . வாழ்க்கை
2014, ஏப்ரல் (இந்த) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழிலிருந்து . . .
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய நம்பிக்கை பொதுத்தேர்தல் மக்களின் மனசாட்சியாய் . . .
மாற்றங்களைத் தேடும் மௌனப் புரட்சியாய் விளங்கி வரும் நமது தேர்தல் களம் இந்தமுறை சற்று வித்தியாசமான களமாய் காட்சியளிக்கிறது.
திருவிழாவைப்போல . . . விறுவிறுப்பும், பரபரப்பும், ஆர்ப்பரிப்பும், அரசியல் கட்சிகளின் கொக்கரிப்பும் இல்லாத தேர்தல் இது.
காதைக் கிழிக்கும் பிரச்சாரம் இல்லை.
தெருவை மறைக்கும் பிளாஸ்டிக் தோரணங்கள் இல்லை.
சுவர்களில் கிறுக்கல் இல்லை.
வீதியெங்கும் பேரணிகள் இல்லை.
சினிமாவைப்போல் சர் விர் என்று சீறும்
கார்களில்லை. கட் அவுட் இல்லை.
காசு கொடுத்து வாக்கைப் பறிக்கும் களவாணித்தனமில்லை
மேலைநாடுகளுக்கிணையாக நாகரீகமான தேர்தலை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தை இந்த தேசமே நின்று தலை வணங்கி கைத் தட்டி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
கொள்கைக் கூட்டணி, கொள்ளைக் கூட்டணி, மதவாதம், மதமில்லா மித வாதம், மதமில்லா மிதவாதம்
லட்சக் கூட்டணி, இலட்சியக் கூட்டணி என்று எப்படியெல்லாமோ கட்சிகள் வாக்காளனைக் குழப்பியபடி உள்ளன•
ஊடகங்கள் கருத்துக் கணிப்பு காட்சித் திணிப்பு
என்று மக்களின் சிந்தனையை சிதறடிக்கின்றன•
இவற்றுக்கிடையில் நான் யாருக்கு வாக்களிப்பது? என்று மாண்புமிகு வாக்காளர் குழம்பலாம்.
யாருமே சரியில்லை.
எவருமே ஒழுங்கில்லை
யாரை நான் தேர்ந்தெடுப்பது?
எனக் கோபமாய் கேட்கலாம்.
குடும்ப ஆட்சி, கூட்டணி ஆட்சி, வெளியிலிருந்து மிரட்டும் ஆதரவு, உள்ளிருந்தே குடையும் ஆதரவு, இவற்றையெல்லாம் பார்த்து சலித்துவிட்டோம்.
பல கட்சிகளின் பதவி வெறி முகங்களையும் கறைபடிந்த கரங்களையும் நன்றாகவே கண்டுவிட்டோம்.
சரிவில்லாத பொருளாதாரம் நெருக்கடியில்லாத நிர்வாகம், நிதர்சனமான வெளிப்படையான ஆட்சி, வெளிநாடுகளோடு உரசலில்லாத உறவு, கறை படியாத கட்சியாளர்கள் வலிமையான தலைமை, எளிமையான அணுகுமுறை,
இவையெல்லாந்தான் இந்தியாவின் இன்றையத்தேவைகள்
இவற்றை யாரால் தர முடியும்?
என்று கட்சி, ஜாதி, மதம், தனி நபர் பெருமை இவைகளைக் கடந்து நாம் யோசித்தால் நம் ஒவ்வொரு வாக்கும் தேசத்தின் செல்வாக்காய் மாறும். வாக்காளரின் எழுச்சியே தேசத்தின் வளர்ச்சி என்பதை எல்லோருக்கும் உரத்த சிந்தனையோடு ஒரு மித்த குரலில் சொல்லி வைப்போம்.
விரல் நுனியில் காத்திருப்பது வாக்கல்ல! –
நம் வாழ்க்கை என்ற விழிப்புணர்வு விளக்கையேற்றி தேசத்தை ஒளிர வைப்போம்
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment