Wednesday, 30 April 2014

கடி ஜோக்ஸ்



தண்ணீரைப் பனிக்கட்டியாக்கினால் என்ன மாற்றம் உண்டாகும்?

விலை அதிகமாகும், வேற என்ன?

....................................................................

தந்தை: டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?

மகன்: ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?

.............................................................

ஆசிரியர்: திருக்குறளை எழுதியவர் யார்?

மாணவன்: எங்கப்பா சார்.

ஆசிரியர்: என்ன உளர்றே, யார் அவர்?

மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்.

........................................................................

ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!

.............................................................................

மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

....................................................................................

அவன்தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி.

வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.

அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!

....................................................................

அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே, களவு, குடில்லாம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?

இல்லைங்க, நான் கோவில்பட்டி.

..................................................................

ஒரு விசேஷத்துக்காக வீட்டில் உறவினர்கள் கூடுகிறார்கள். அப்போது கேள்விப்பட்டது:

கிட்டாமணி எப்போ வரான்?

கலைல எட்டாம்மணிக்கு டாண்னு வந்துட்டான்.

குஞ்சுமணி?

சாயங்காலம் அஞ்சுமணிக்கு வருவான்.

ஆப்த சிநேகிதர்களா ரமணி ரமணின்னு ரெண்டு ரமணி இருக்காங்களே, அவாளும் வராளோன்னோ?

அந்த ரெண்டு ரமணியும் வர ட்ரெய்ன் ரெண்டரைமணிக்கு வருது.

ஏண்டா எடக்காப் பேசறதா நெனப்போ? அப்ப சூடாமணி, ராஜாமணி, பிச்சுமணிலாம்கூட வர்றாளே, அவாளுக்கும் பேருக்கேத்தமாதிரி டைம் சொல்லேன்?

நான் சொல்றது நெஜம்தான். அவாள்ளாம் எற்கனவே வந்தாச்சுண்ணா!

..........................................................................................

எங்க சலூன்கடையில கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்.

இதென்ன பெருசு? எங்க ஃபைனான்ஸ் கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.

............................................................

பர்ஸ் தொலைச்ச நேரமே சரியில்லடா.

ஏன்? என்ன ஆச்சு?

பர்ஸ்ல இருந்த என் அட்ரஸை வச்சு திருடன் வீட்டுக்கும்வந்து திருடிட்டுப் போய்ட்டாண்டா!

......................................................................

மனைவி: ஏங்க, உங்க ஃப்ரெண்டுக்குப் பார்த்திருக்கற பொண்ணு நல்லாவே இல்லையே!
நீங்களாவது சொல்லக்கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?

மனைவி: நீங்க அவர் ஃப்ரெண்டுதானே?

கனவன்: அவன் மட்டும் எனக்குச் சொன்னானா என்ன?
...........................................................

நம்ம தமிழ் ஆசிரியருக்கு ரொம்பத்தான் குசும்புடா.

ஏண்டா?

பரீட்சை அறை பிளாக்போர்டுல, 'படையில்லா மன்னர்போலக் கெடுமே விடையில்லா மாணவன் தாள்'னு எழுதி வச்சிருக்கார்டா.
..................................................................

சார் எங்க கடையில துணி வாங்கினா அது லேசுல கிழியாது.

சும்மா பொய் சொல்லாதீங்க.

பொய் இல்லீங்க, உண்மைதான்.

இப்பகூட அவர் ரெண்டு மீட்டர் கேட்டபோது கிழிச்சித்தானே கொடுத்தீங்க?

.............................................................

டீச்சர்: நான் முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: கவனமா கேளு. முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: சரி வேறு மாதிரி சொல்றேன். முதல்ல ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஆறு.

டீச்சர்: வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி: ஏழு.

டீச்சர்: எப்படி?

சிறுமி: எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே!

.................................................................................

மார்த்தாண்டத்துக்கு கடைசி பஸ் எப்ப?

ராத்திரி 11 மணிக்கு.

அதுக்கு முன்னால?

அதுக்கு முன்னால பல்பு இருக்கும்.

..........................................

என் தம்பி சரியான புத்தகப் புழு டி.

ஏன் எப்பவும் புத்தகமும் கையுமா இருப்பானா?

நீ வேற. அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு என்ன நெளி நெளியறான் தெரியுமா?

....................................................

இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவன்.

எதைப் பற்றி கட்டுரை எழுதினான்?

'தண்ணீரின் பயன்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.

அப்படியா, நல்லது. உங்கப்பா என்ன பண்றாருப்பா?

பால் வியாபாரம்.
..............................................

வாத்தியார்: இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்.

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வாத்தியார்: அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே: நீ முட்டாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?

மாணவன்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்க தனியா நிக்கறதைப் பார்க்கப் பாவமா இருந்தது. அதனால்தான் நானும் எழுந்து நின்றேன்.

...............................................

ஜக்கு: என்ன மக்கு, வேலைக்கு சேர்ந்தியே என்ன கொடுக்கறாங்க?

மக்கு: சம்பளந்தான்.

ஜக்கு: அது சரிடா, என்ன கொடுக்கறாங்க?

மக்கு: பணம்தான்.
......................................

சென்சஸ் அதிகாரி: உங்ககூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?

மக்கு: இருங்க சார், அம்மாகிட்ட கேட்டுக்கிட்டு வரேன்.

சென்சஸ் அதிகாரி: ?!?!?!

மக்கு: அன்னிக்கு மருத்துவமனையில மொத்தம் இருவது குழந்தைங்க பொறந்தாங்களாம் சார்!
.................................................................................

டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு நாலு தடவை சாப்பிடணும்.

மக்கு: அது எப்படி டாக்டர் முடியும்?

டாக்டர்: ஏன் முடியாது?

மக்கு: ஒரு தடவை முழுங்கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இன்னொரு முறை முழுங்கமுடியும்?

......................................................................

முதியோர் இல்லத்துக்கு அந்தப் பெரிய மனுஷன்கிட்ட நன்கொடை கேட்டது தப்பாப் போச்சு.
ஏன்?

அவரோட மாமியாரை நன்கொடையா எடுத்துக்கச் சொல்றார்

 ஹலோ யார் பேசறது?

நான்தான் பேசறேன் நீங்க?

இங்கேயும் நான்தான் பேசறேன்.
.......................................................................................................


 டேய் ராமு, என் பாடம் நடக்கும்போது வகுப்புல குறும்பு பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?

இன்னிக்கு இதுவரை மூணு தடவையும், இந்த வாரத்தில முப்பத்தஞ்சு தடவையும் இந்த மாசத்தில நூத்தி அஞ்சு தடையும் சொல்லியிருக்கீங்க சார்!
...............................................................................................................

ஒரே சமயத்துல அவனோட எல்லாப் பல்லும் கீழே விழுந்திடிச்சு.

நிஜமாவா? நம்பவே முடியலையே? எப்படி?

அட அவன் வச்சிருந்தது பல்செட்.

.................................................................................................................


 ஒரு புலி தன் காதல் வெற்றி அடைந்ததற்கு விருந்து வைத்தது. எல்லாப் புலிகளும் வந்திருந்தன.

அந்த விருந்துக்கு ஒரு பூனையும் வந்தது.

அந்தப் பூனையைப் பார்த்து ஒரு புலி கேட்டது: ஆமாம், நீ யார்? நீ எப்படி இங்கே வந்தே?

பூனை சொன்னது: லவ் பண்ணறதுக்கு முன்னாடி நானும் ஒரு புலியாகத்தான் இருந்தேன்.

....................................................................................................

 நான் மேலே மேலே உயரும்போது நான் யாருன்னு நீங்க தெரிஞ்சுக்குவீங்கடா.

நீ கீழே விழும்போது உன் நண்பர்கள் யார்னு நீ தெரிஞ்சுக்குவடா.

....................................................................................................


 என் சப்ஜக்ட்ல எப்படிடா நூத்துக்கு நூறு மார்க் எடுத்தே?

சொன்னா நீங்க வருத்தப் படுவீங்க சார்.

பரவாயில்லை சொல்லுடா.

ஒரு நல்ல ஆசிரியர்கிட்ட ட்யூஷன் போனேன் சார்.

.......................................................................................................................................


 ஆசிரியர்: அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டுக்கும் என்ன வித்தியாசம்? 


மாணவன்: பணக்காரங்ககிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.


ஆசிரியர்: ????


...............................................................................................................


 ஏன் சார் வெறும் பேப்பரைப் போய் ஜெராக்ஸ் போடறீங்க?


ஒரு பேப்பர் விலை எட்டணா ஆனா ஜெராக்ஸ் காபி முப்பது பைசா தானே?


...........................................................................................................


 ஒரே தன்மை கொண்ட ரெண்டு பொருள் சொல்லு பார்ப்போம்?


பசியும் பஞ்சும் ஒண்ணுதான் சார்.


எப்படி டா?


ரெண்டுமே காதை அடைக்கும்!


..........................................................................................................

 ஆசிரியர்: ஆலும் வேலும்
மாணவன்: பல்லுக்குறுதி
ஆசிரியர்: நாலும் ரெண்டும்
மாணவன்: சொல்லுக்குறுதி
ஆசிரியர்: ஒரு பானை சோற்றுக்கு
மாணவன்: ஒரு சட்டிக் குழம்பு!
.................................................................................

 நீங்க கணக்கு வாத்தியாரா?


எப்படி கண்டுபிடிச்சீங்க?


வீட்டு நம்பர் 10/12 அப்படீங்கறத 5/6-ன்னு அடிச்சு போட்டிருக்கீங்களே அதவச்சுதான்.

................................................................................................................


ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?


தெரியலையே?


அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ஃப்ரீன்னு அர்த்தம்.

.........................................................................................

 மகன்: பல ரோஜாக்களைப் பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.


அப்பா: இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?


மகன்: அஞ்சு பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்.


...................................................................................................................


 பையன் பார்க்கிற வேலையைத் தரகர் சொன்னதும், உங்க பொண்ணு கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சுட்டாளாமே? அப்படி என்ன வேலை பார்க்கிறார்?


பையன் ஓட்டல்ல சமையல்காரரா இருக்கார். 

.....................................................................................

என் பையனுக்கு சந்திரய்யான்னு பேர் வச்சது தப்பாப் போச்சு.


ஏன் நல்ல பேருதானே?


நீ வேற, எதிர் வீட்டு நிலாவை சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருக்கான்.


......................................................................................


 நேத்து என் காதலியோட பீச்சுக்கு போனப்ப... எக்க அம்மா பார்த்துட்டாங்க.


அப்புறம் என்ன ஆச்சு?


அங்கேயே ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க!


அப்போ உங்க அம்மா அவள மருமகளா ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்லு.

.................................................................................................


 செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

என்ன?


மனிதனுக்குக் கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ணமுடியாது, செல்போனில் பேலன்ஸ் இல்லைன்னா கால் பண்ணமுடியாது.

..................................................................................................


 மாணவன் (தோழமையுடன் வேடிக்கையாகப் பேசும் தலைமை ஆசிரியரிடம்: ஏன் சார் நீங்க மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?


தலைமை ஆசிரியர்: கொழுப்புடா உனக்கு! எண்டா அப்படிக் கேட்டே? சரியான பதில் சொல்லலைன்னா இப்ப உன் மண்டைல போடப்போறேன்.


மாணவன்: பின்ன என்ன சார்? டீ மாஸ்டர் டீ போடறாரு. பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு. மேத்ஸ் மாஸ்டர் மேத்ஸ் போடறாரு. நீங்க ஹெட் மாஸ்டர்தானே? பின்ன ஏன் மண்டையைப் போடமாட்டேங்கிறீங்க?


.............................................................................................


 ஆசிரியர்: என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியேபோயிட்டு வந்தாலும் தொணதொணன்னு சத்தம் போடுவீங்க. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே, வெரி குட்! 


மாணவன்: நீங்க வெளியேபோயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே, மறந்துட்டீங்களா ஸார்?

.....................................................................................................

 ஆசிரியர்: வான்கோழி முட்டை போடும் பறவை இனம்.


மாணவன்: அப்படீன்னா அது உங்க இனம் சார்.


ஆசிரியர்: என்னடா உளர்றே?


மாணவன்: நீங்களும் முட்டைதானே போடுறீங்க சார். 


......................................................................................................


 நான் எழுதின கதை எப்படி இருக்கு?


ரொம்ப சுமாராத்தான் இருக்கு, உப்புச்சப்பே இல்ல!


கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது?

.......................................................................................................


 உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான் அவன்?


தொலைதூரக் கல்வி வழியா பி.ஏ. படிக்கிறான்!

.........................................................................................................

 கணக்கு ஆசிரியை: மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்குள்ள இருக்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?


சிறுவன்: ஒண்ணுமே இருக்காது டீச்சர்.


ஆசிரியை: உனக்கு கணக்கே தெரியலை


சிறுவன்: டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டைப் பத்தித் தெரியலை. ஒண்ணு போச்சுன்னா எல்லாம் போயிடும்.

.............................................................................................................


 பையனை வக்கீலுக்குப் படிக்க வச்சது ரொம்பத் தப்பாப்போச்சு


ஏண்ணே அப்படிச் சொல்றீங்க?


படிச்சு முடிச்ச கையோட, சொத்தை பிரிச்சுக் குடுக்கச் சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கான்.

..............................................................................................

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு, இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?


ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

.................................................................................

 மக்கு: வாழை மரம் தார் போடும்..


ஜக்கு: அதுக்கு என்ன இப்ப?


மக்கு: ஆனா அத வச்சி நாம ரோடு போட முடியுமா?


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator