Saturday, 12 April 2014

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

ஆன்ட்ராய்ட் (ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.

அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating System) இருப்பதைப் போன்று மொபைல் போன்களுக்கென கூகிள் உருவாக்கிய புது வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணாமித்துள்ளது.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகைகளான Cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.

ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்:

நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி (Customize Home Screen) உள்ளது.

வழக்கமான தோற்றத்தில் குறுஞ்செய்திகள் (SMS) இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும்.

அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர்.

ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.

கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.

குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.

ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.

அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.

ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிளுடன் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது.

இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும்.

இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

....


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator