ஆலய வழிபாட்டு முறைகள் இதோ டிப்ஸ்..
சிவன் கோவிலுக்கு போறிங்களா.... முதலில்
சிவனை வணங்கிட்டு அப்பறம் தான்
உமாதேவியை வணங்கனும்.
பெருமாள் கோவிலுக்கு போறிங்களா....முதலில்
தாயாரை வணக்கிட்டு அப்பறம் தான்
பெருமாளை வணங்கனும்.
நவகிரக வழிப்பாடு செய்யணுமா... அந்த
கோவிலில் பிரதான தெய்வங்களை எல்லாம்
வணங்கிட்டு, பிரகாரம் சுத்தி முடிச்ச
பிறகுதான் வணங்கனும்.
ஆஞ்சநேயர் வழிபாடு செய்றிங்களா..
அவரை வணக்கிட்டு ஒரு நிமிடமாவது
கோவிலில் அமர்ந்து அப்பறம்தான்
வீட்டுக்கு கிளம்பனும்.
சண்டிகேசுவர் சன்னதியில் கை தட்டி சாமி கும்பிடுறது,
சுண்டுறது இதெல்லாம் கூடாது.
அவர் மவுனமா சிவதரிசனம் செய்றார்.
அவரை தொல்லை பண்ணக்கூடாது.
விநாயகர் கோவிலுக்கு போனால் ஆலய பிரகாரம் ஒரு முறை
சுற்ற வேண்டும்.
சிவன் கோவிலுக்கு போனால்... மூன்று முறை ஆலய பிரகாரம் பிரகாரம் சுற்ற வேண்டும்.
பெருமாள் கோவிலுக்கு போனால் ... நான்கு முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும்.
நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர
வேண்டும்.
அம்மன் கோவிலுக்கு வெள்ளிகிழமை போறது நல்லது
துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது
செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் தரிசிக்க வேண்டும்.
காளியம்மனை அஷ்டமி திதியில் வணங்குதல் நல்லது.
சாமி பேருக்கு அர்ச்சனை செய்யவேண்டாம். அவர்தான்
சகல வசதியோடும் இருக்காரே.
நம் பேர் நம்நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு உள்ளே
நுழையும் போதே காசு போட்டு விட வேண்டும்.
வெளியே வரும் போது போட்டால்,
தரிசன பலனை தாரை வார்த்து போல
ஆகிவிடும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment