HATS OFF!
சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்
புதுடெல்லி, பிப்.8-
தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பில் முதல் பெண் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தான் என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கும், தமிழக போலீஸ் துறைக்கும் கொண்டு வந்துள்ளார்.
1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார்.
குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.
தமிழ்நாடு ரகசிய போலீஸ் பிரிவில் அவர் பணியாற்றிய போது 1906-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை 104 ஆண்டுகள் தமிழக காவல் துறையில் புலனாய்வு செய்த முக்கிய வழக்குகள் பற்றிய விவரங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்ட அதிகாரிகள் குழுவில், இவருடைய பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
உத்தரபிரதேச மாநில மகளாக பிறந்து தமிழ்நாட்டின் மருமகளான அர்ச்சனா ராமசுந்தரம் தமிழில் சிறந்த புலமை மிக்கவர். எப்போதும் தமிழில் பேசுவதையே விரும்புவார். உத்தரபிரதேசம் என் பிறந்த வீடு என்றாலும் தமிழ்நாடு என் புகுந்த வீடு என்பதால் தமிழில் பேசுவதே எனக்கு மகிழ்ச்சி என்று எப்போதும் குறிப்பிடுவார்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment