மனநிறைவுடன் வாழ்வோமே
நன்கு வேயப்பட்ட கூரைவீட்டில் மழைநீர் இறங்காது. அதுபோல நன்னெறியை பின்பற்றும் மனதில் தீய ஆசைகள் புகுவதில்லை.
பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவற்றைக் கொண்டவன் பேச்சாலும், உடல் அழகாலும் மட்டும் நல்லவனாக முடியாது.
நாம் செய்த நன்மையும், தீமையும் நிழல் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன.
நல்லோரின் புகழ், காற்றில் நறுமணம் பரவுவது போல, நாலாபுறத்திலும் பரவி நிற்கும்.
உதடுகளை அரண்மனைக் கதவு போல பாதுகாத்துக் கொள்ளுங்கள். வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் நன்மை தருவதாக மட்டுமே அமைய வேண்டும்.
நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். நோயற்ற வாழ்வே ஒருவன் அடைய வேண்டிய பாக்கியம். மனநிறைவே மிகப் பெரிய செல்வம்.
அமைதியாக செயலாற்று
சுயலாபத்திற்காக பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பு என்னும் வலையில் சிக்கித் தவிப்பர்.
கருமியை ஈகையாலும், பொய்யரை உண்மையாலும் வெற்றி கொள்ள முயலுங்கள்.
வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அமைதியுடன் செயலாற்றிக் கொண்டிருங்கள்.
மிதமிஞ்சிய சுகபோகம் தேவையில்லை. கொடிய விரதத்தையும் கடைபிடிக்க வேண்டியதில்லை.
நூறு ஆண்டுகள் ஒழுங்கீனமாக வாழ்வதை விட, ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறந்தது.
சாத்திரங்களை படித்து ஒப்புவிப்பதை விட அதில் ஒன்றையாவது கடைபிடித்து வாழ்வது நல்லது.
மனத்தூய்மையுடன் வாழ்பவன் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் காண்பவன் வாழ்வில் கடைத்தேற முடியாது.
பாவச் செயலில் மறந்தும் ஈடுபடுவது கூடாது. அது பழுத்து பயன் விளைக்கும்போது தாங்க முடியாத வேதனையை உண்டாக்கும்

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment