Monday, 10 February 2014

மோடி பிரதமர் ஆவாரா?: ஜாதக கணிப்பு தகவல்

மோடி பிரதமர் ஆவாரா?:
ஜாதக கணிப்பு தகவல்

நரேந்திர மோடி 1950–ம்
ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந்தேதி பகல்
11 
மணிக்கு பிறந்தார்அவரது ஜென்ம
லக்னம் விருச்சிகம்
வளர்பிறை சஷ்டியில் அனுஷம் 2–ம்
பாதத்தில் பிறந்தவர்.
அவர் பிறந்த சமயத்தில் அவரது ஜாதக
அமைப்பு சரியாக அமையவில்லை.
குறிப்பாக புதன்
திசை நடந்தபோது அதாவது 28
வயது வரை அவர் பல கஷ்டங்களையும்
அவதிகளையும் அனுபவித்தார்.
1985–
ம் ஆண்டுதான் அவரது ஜாதக
அமைப்பு அவருக்கு சாதகமான
அம்சங்களுடன் உருவாகத் தொடங்கின.
சுமார் 20 ஆண்டுகள் அவருக்கு சுக்கிர
திசை இருந்தது.
1985–
ம் ஆண்டு தொடங்கி 2005–ம்
ஆண்டு வரை அவர் ராஜ யோகத்தில்
வலம் வந்தார்அவர் மக்களின் யதார்த்த
நிலை பற்றிய ஞானம் பெற்றது இந்த
காலகட்டத்தில்தான்.
அதனால்தான் கடும் எதிர்ப்புகளுக்கும்
மத்தியில் அவரால் குஜராத்தில்
அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற
முடிந்தது.
2005–
ம் ஆண்டு மோடியின் ஜாதகத்தில் 6
ஆண்டு சூரியதிசை தொடங்கியது.
இதனால் 2011–ம் ஆண்டு வரை அவர்
பலவிதமான எதிர்ப்புகளையும்
போராட்டங்களையும் சந்திக்க நேர்ந்தது.
ஆனால் மற்ற கிரக அமைப்புகள்
சாதகமாக இருந்ததால் மோடியால்
தொடர் வெற்றிகளை பெற முடிந்தது.
புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர
முடிந்தது.
2011–
ல் அவருக்கு சூரிய
திசை முடிந்து சந்திர
திசை தொடங்கியுள்ளதுசந்திர திசை 10
ஆண்டுகள் இருக்கும்.
தற்போது மோடிக்கு சந்திர
திசை நடக்கிறதுஅதாவது 2021–ம்
ஆண்டு வரை மோடிக்கு சந்திர
திசை நடைபெறும்லக்னத்தில் சந்திரன்
உள்ளதுஇது ஒன்றும் பெரிய பலன்
களைத்தராது.
ஆனால் அந்த கட்டத்தில் சந்திரனுடன்
செவ்வாயும் சேர்ந்துள்ளதுஇந்த
இரு கிரகங்களின் சேர்க்கைதான்
இன்று நரேந்திர மோடியை பிரதமர்
வேட்பாளர்
அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறது.
இந்த கிரக சேர்க்கை காரணமாக
தற்போது நரேந்திர மோடிக்கு மகாராஜ
யோகம் கிடைத்துள்ளது.
அது மட்டுமல்ல... சந்திர மங்கள யோகம்,
குரு சந்திர யோகம்குரு மங்கள யோகம்,
மாளவிகா யோகம்
என்று அடுத்தடுத்து பல யோகங்கள்
மோடிக்கு ஆதரவாக
அணிவகுத்து நிற்கின்றன.
மோடியின் ஜாதகத்தில் 10–ம் இடத்தில்
சனியும் சுக்கிரனும்
சேர்ந்து அமைந்துள்ளன.
இதற்கு ''சண்டாள யோகம்'' என்று பெயர்.
இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன
செய்தாலும்,
அது வெற்றியாகவே முடியும்.
அவர்களை யாராலும் எந்த விதத்திலும்
அசைக்க முடியாது.
பொதுவாக ஒருநபர்நாட்டின்
பிரதமராகவோஜனாதிபதியாகவோ மிக
உயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால்,
அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10–ம்
இடத்தின் ராசியும்லக்னமும்
அவருக்கு உதவி செய்யும் வகையில்
இருக்க வேண்டும்.
10–
ம் இடம் பதவியைக் கொடுத்தாலும்,
அந்த பதவியை நிர்வகிக்கும் ஆற்றலும்
திறமையும்அந்த
ஜாதககாரருக்கு இருக்க
வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அந்த ஆற்றல் நரேந்திர மோடியிடம்
அபரிதமாக உள்ளது.
எனவே இந்தியாவின் அடுத்த பிரதமர்
பதவியை ஏற்க ஜாதக
அமைப்புப்படி மோடிக்கு அதிகப்படியான
வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
மோடியின் ஜாதகப்படி அவருக்கு கற்ற
கல்வி கை கொடுக்காதுசிறு வயதில்
பெற்ற உலக நடப்பு ஞானமும்அரசியல்
அனுபவங்களும்தான்
அவரை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால்
நரேந்திர மோடி ஜாதகத்தில்
தற்போது சுக்கிரனும்சனியும்
சேர்ந்து வலுவாக உள்ளன.
சந்திரன்செவ்வாய்குரு ஆகிய
கிரகங்களும் மோடிக்கு சாதகமான
நிலையில் உள்ளனஇந்த 5 கிரகங்களும்
சேர்ந்து நிச்சயம் அவரை பிரதமர்
பதவியில் உட்கார வைக்க 100 சதவீத
வாய்ப்புள்ளது.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator