அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!
இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் அல்ல, லேடி காகா அல்ல, கேட் பெர்ரி அல்ல. நியுயார்க் நகர காவல் துறை அதிகாரி ஒருவரின் படம். அந்தப் படத்தில் அவர் கால்களில் காலணி இல்லாத ஒரு ஏழை மனிதனுக்கு ஷூக்களை கொடுக்கிறார். அவரது இரக்கம் மிகுந்த உதவி இணைய பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.
அரிசோனா மாகாணத்திலிருந்து விடுமுறைக்காக நியுயார்க் நகருக்கு வந்திருந்த ஜெனிஃபர் ஃபோஸ்டர்தான் இந்தப் புகைப்படத்தை எடுத்தது. அவரும் அவரது கணவரும் நியுயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தின் அருகே வந்துக் கொண்டிருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டிருக்கிறார்கள்.
அந்தக் குளிரில் கால்களில் ஷூக்கள் இல்லாமல் தெருவோரம் அமர்ந்திருந்த ஒருவருக்கு ஷூக்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் இந்தக் காவலர். இதைப் பார்த்து நெகிழ்ந்துப் போன ஜெனிஃபர் படமெடுத்து அதை நியுயார்க் காவல் துறைக்கு அனுப்பி பாராட்டியிருக்கிறார். அந்தக் காவல்துறை அதிகாரியின் பெயர் லாரன்ஸ் டிபிரிமோ.
'நான் அவரைப் பார்த்து கொண்டிருந்ததோ அவரைப் படமெடுத்ததோ அவருக்குத் தெரியாது. எந்தப் பலனையும் எதிர்பார்த்து அவர் அந்த மனிதனுக்கு உதவி செய்யவில்லை.' என்று காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் அனுப்பிய புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரசுரிக்க, உலகம் முழுவதும் அந்தப் படம் பிரபலமடைந்து விட்டது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் அதை விரும்பி 'லைக்' போட்டிருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் பேர் அதனை பகிர்ந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.
முதலில் இந்தப் புகைப்படம் வெளியாகி இருப்பது அந்த அதிகாரிக்கு தெரியாது. பிறகுதான் தான் செய்த உதவி உலக அளவில் பரவிவிட்டது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.
'அன்று கடும் குளிர். நானே இரண்டு காலுறைகளை மாட்டியிருந்தேன். ஆனால் இந்த மனிதன் வெறுங்கால்களுடன். பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. அதனால் அருகில் சென்று பேச்சுக் கொடுத்தேன். அவரது காலணி அளவு 12 என்று அறிந்தேன். உடனே பக்கத்திலிருந்த கடைக்குச் சென்று எந்த தட்பவெப்பத்துக்கும் பொருத்தமான ஒரு ஷூவை வாங்கி வந்து தந்தேன்.' என்கிறார்க் டிப்ரிமோ. இவர் வாங்கிய ஷூவின் மதிப்பு 100 டாலர். ஆனால் இவர் ஒரு ஏழைக்கு உதவப் போகிறார் என்று தெரிந்த கடை ஊழியர் தனக்கிருக்கும் தள்ளுபடியைப் பயன்படுத்தி 75 டாலருக்கு கொடுத்திருக்கிறார்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment