பீஷ்மாஷ்டமி
சூரியன் உத்திராயணத்தில் பிரவேசிக்கும் தினம் ரத சப்தமி: மறுநாள் பீஷ்மாஷ்டமி
iஹீ மாதத்தை மகர ராசிக்கான மாதம் என்பார்கள். இந்த மகர ராசியில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகும். அன்றுதான் சூரியன் உத்திராயணத்தில் பிரவேசிக்கும் தினமாகக் கருதப்படுகிறது. ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
ரத சப்தமியில் உத்திராயணம் பிறந்த பிறகே, பீஷ்மர் தன் உயிரை விட்டதாக மகாபாரதம் கூறுகிறது. உலக நலனுக்காக பீஷ்மர் பிரம்மச்சர்ய விரதம் ஏற்றவர்.
அவருக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லை. அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் மக்கள் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். அந்த நாளை பீஷ்மாஷ்டமி என்றும் கூறுவார்கள்.
ரத சப்தமி விரதம் இருக்கும் நாம் சூரியனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா?
ராவணனை வெற்றிபெற அகஸ்திய மகரிஷி ராமருக்கு 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதை தினமும் பாராயணம் செய்பவர்கள் சகல வெற்றியையும் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
சூரியனுக்குக் குதிரைகள் ஏழு 'இரவிகள் பல்லும் தத்தம் ஈரனு தேரில் அவ்வேழ் புரவிகள் பல்லும் குத்தி' என்கிறது தக்கயாக பரணி.
இரவிகள் என்றால் சூரியர்கள் என்று பன்மையில் பொருள். இது பன்னிரு சூரியனையும் குறிக்கும். அவர்கள் தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் என்னும் பெயர்களில் உள்ளவர்கள். ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு ஆதித்யர் அதிபதி.
சூரியனுடைய கதிர்கள் ஆயிரம் என்பார்கள். அவற்றில் 400 கதிர்கள் மழை பொழியும் 300 கதிர்கள் மழை வளத்தை உண்டாக்கும். 300 பனி பெய்யும். இந்த பன்னிரு சூரியர்கள் சித்திரை முதல் பங்குனி வரையில் முறையே 7000, 8000, 9000, 9000, 9000, 11000, 10000, 8000, 7000, 1100, 5000, 1000 கதிர்களுடன் விளங்குவர் என்கிறது அபிதான சிந்தாமணி.
'சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண்டாயிரம் சுடரோடும் சூழ் வருவரே' என்கிறது தக்கயாக பரணி. இவர்கள் விஷ்ணுவின் சக்திகள் என்பதால் சூரியனை சூரிய நாராயணன் என்றும் அழைக்கிறோம்.
இந்த ரத சப்தமி நன்னாளில் இந்த சூரியனுக்கு ஒரு விசேஷ ஒளி பிறப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இத்தகைய சூரியனை ரத சப்தமி அன்று தொழ வாசலில் மட்டுமின்றி பூஜை செய்யும் இடத்திலும் ரதக் கோலத்தைப் போட்டு விளக்கேற்றி வைத்து பூஜிக்க வேண்டும். இதனால் வீட்டில் சகல செளபாக்கியங்களும் நிறையும்.
சூரியனுக்குப் பிடித்தது எருக்கன் இலையாகும்.
ரத சப்தமி தினத்தன்று அதிகாலையில் நீராடும் பொழுது இரண்டு அல்லது ஏழு எருக்கன் இலைகளை அடுக்கித் தரையில் வைத்துக் கொண்டு அதன் மீது சிறிது அட்சதை (அரிசி)யை வைத்துக் கொண்டு கிழக்கு திசை பார்த்து நின்று தலையில் நீர் ஊற்றி நீராட வேண்டும்.
அட்சதையுடன் சிறிது விபூதியை வைத்துக் கொண்டும் நீராடலாம். உலோக கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வது போல சூரியனின் ஏழு வகையான கிரணங்களும் எருக்கன் இலைகளில் ஊடுருவிச் செல்லும். அதனால் இந்த இலைகளை தலையில் வைத்து நீராடுவது உடல் நலத்திற்கு நலத்தை விளைவிக்கும்.
இப்படி நீராடும் பொழுது,
'ஸப்த ஸப்தி ப்ரியே தேவிஸப்த லோக ப்ரதீபிகே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வாம்' என்ற ஸ்லோகத்தைக் கூறி நீராட வேண்டும்.
சூரியனே தேவயான மார்க்கம் இதுவே அர்ச்சிராதி மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய கதியைக் கொண்டே முகூர்த்த காலம் கணிக்கப்படுகிறது.
தVணாயண காலத்தில் சூரியன் பன்னிரண்டு முகூர்த்த கால அளவில் மிகப் பெரிய பூமியைக் கடக்கிறான். சூரியன் இரவு காலத்தை பதினெட்டு முகூர்த்த காலத்தில் கடக்கிறான்.
இதனால்தான் தVணாயண பகற் பொழுது குறைந்ததும், இரவு பொழுது அதிகமாக நீண்டும் தோன்றுகிறது.
சூரியன் கடக்கும் மார்க்கம் ஒரே அளவு உள்ளதுதான் என்றாலும் உத்திராயண, தஷிணாயண காலங்களில் ராசி மண்டலங்களை சூரியன் கடக்கும் வகையினால் இரவு, பகல்களின் மாறுபாட்டை நாம் உணர்கிறோம். இப்படி உத்திராயண காலத்தில் வட திசையை நோக்கி சூரியத் தேர் திரும்புவதைத்தான் நாம் ரத சப்தமி விரத தினமாகக் கொண்டாடுகிறோம்.
ரத சப்தமி அன்று சர்க்கரைப் பொங்கல், வடை, இனிப்பு என்று வைத்து சூரியனுக்கு நைவேத்யம் செய்யலாம். விரதம் இருப்பவர்கள் இந்த இனிப்பை மட்டும் உண்டு விரதம் இருக்கலாம்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment