"பிக் பென்'
1834-ஆம் ஆண்டு. லண்டன் "வெஸ்ட் மினிஸ்டர்' அரண்மனையில் பெருந் தீ விபத்து ஏற்பட்டு அங்கே மணிக்கூண்டில் இருந்த பெரிய மணி எரிந்து நாசமாகிவிட்டது. புதிய மணிக்கூண்டும் புதிய பெரிய மணியும் எழுப்புவதென்று பிரிட்டிஷ் பாராளுமன்றம் தீர்மானித்தது. பல ஆண்டுகள் உழைத்து மணிக்கூண்டையும் கடிகாரத்தையும் உருவாக்கினார்கள். அப்போதுதான் அதற்கு என்ன பெயர் சூட்டுவது? என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக விவாதித்தனர். ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரைச் சொன்னார்கள். "மணிகளின் ராணி' என்று சிலர் கூற, வேறு சிலர் "விக்டோரியா' என்ற பெயரைச் சிபாரிசு செய்ய, ஒரு முடிவும் எட்டப்படாமல் விவாதம் நீண்டுகொண்டே போனது. அப்போது பொதுப்பணித்துறை கமிஷனராக இருந்தவர் சர்பென்சமின் என்பவர். அவர் ஒரு பெயரைக் கூறி அதையும் பரிசீலிக்கச் சொன்னார். இந்த சர்பென்சமின் பயங்கர குண்டான மனிதர். எல்லோரும் அவரைச் செல்லமாக "பிக் பென்' (ஆண்ஞ் ஆங்ய்) என்று அழைப்பார்கள்! விவாதத்தில் எந்த முடிவும் ஏற்படாமல் வெறுத்துச் சலித்துப்போன உறுப்பினர்கள், ""பேசாமல் "பிக் பென்' என்றே பெயர் வைத்து விடலாம்!' என்றார்கள். அதைக் கேட்டு எல்லோரும் ஒரேயடியாய்ச் சிரித்தார்கள். கடைசியில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது! |
No comments:
Post a Comment