Sunday, 9 February 2014

வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் போன்ற சாந்தி ஹோமங்களைச் செய்துகொள்ளலாமா ?

வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் போன்ற சாந்தி ஹோமங்களைச் செய்துகொள்ளலாமா ?

அறுபது வயது நிரம்பியவர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர் அததனைபேரும் ஆண்-பெண் பேதமின்றி அந்த இரண்டு சடங்குகளையும் நடைமுறைப் படுத்தலாம். வயதின் அளவை வைத்து நிகழ்த்தப்படுவதால் குறிப்பிட்ட அந்த வயதுகளை எட்டியவர்களின் பிறப்புரிமை அது.

திருமணம் ஆகாதவரும், அந்த வயதை எட்டுவார். ஆகையால் அவருக்கும் உண்டு. தம்பதிகளில் இழப்பு என்பது நிகழக் கூடிய ஒன்று. இழந்தவர்களும் வயதை எட்டுவார்கள். இருவரும் இருந்தால் மட்டுமே அதை செய்யவேண்டும் என்று இல்லை. அது தாம்பத்தியத்தின் அடிப்படையில் ஏற்படட் சடங்கு அல்ல. குறிப்பிட்ட அந்த வயதை எட்டியவர்களின் உரிமை. இறந்தவர்களின் நூ றாவது பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு. வெள்ளி விழா, தங்க விழா, வைர விழா என்று அமரத்துவம் அடைந்தவர்களுக்காகவும் அனுஷ்டிப்பது உண்டு. ஆக, இழப்பைக் காரணம் காட்டி, உரிமையை மறுப்பது சரியில்லை. பண்டைய நாட்களில் இழப்பைச் சந்தித்தவர்கள், கொண்டாட்டத்தைத் தவிர்த்தார்கள். தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு, செயல்பட்டது. ஆனால் சாஸ்திரம் மறுக்கவில்லை. 

- ஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்த்ரிகள் - சக்தி விகடனில் (08.02.2011)

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator