Sunday 2 March 2014

ஒரு இந்தியர் அமெரிக்காவின் மருத்துவ துறையின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான "சர்ஜன்ஜெனரல் " ஆகிறார் !

ஒரு இந்தியர் அமெரிக்காவின் மருத்துவ துறையின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான "சர்ஜன்ஜெனரல் " ஆகிறார் !

அதிபர் ஒபாமா அறிவிப்பு அமெரிக்க சுகாதார துறைக்கு தலைவர் ஆகிறார் இந்தியர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை தலைவர் பொறுப்புக்கு இந்தியரான விவேக் மூர்த்தியை ஒபாமா தேர்ந்தெடுத்துள்ளார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் விவேக் மூர்த்தி (36). யேல் பல்கலைக் கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்தவர். தற்போது, அங்கு அவர் தலை சிறந்த டாக்டர்களில் ஒருவராக திகழ்கிறார். அதிபர் ஒபாமாவின் தீவிர ஆதரவாளர். ஒபாமா கொண்டு வந்த பொது சுகாதார சட்டத்தை தீவிரமாக ஆதரித்ததின் மூலம், அவருடைய மனதில் இடம் பிடித்தார். எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'விஷன்ஸ் வேர்ல்ட் வைட்' என்ற தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி, பிரசாரம் செய்து வருகிறார். 

மேலும், 'டிரையல் நெட்வொர்க்ஸ்' என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலமாக, புது மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுகள் செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க மருத்துவ துறையின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான 'சர்ஜியன் ஜெனரல்' பதவியை ஒபாமா இவருக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், அமெரிக்கா மருத்துவ மற்றும் சுகாதார துறைகளின் செயல்பாடுகள், இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இவரை இப்பதவியில் நியமிப்பதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது

வாழ்க ! வளர்க! விவேக் மூர்த்தி அவர்களே !

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator