Sunday, 30 March 2014

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் ஏன் அணிய வேண்டும் ....

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் ஏன் அணிய வேண்டும் ....

ஒரு விரிவான விளக்கம் 

..
திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும், சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். 

திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது அவசியம்.

நம் முன்னோர்கள் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். 

அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும், பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் .

மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு , ஆனால் குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் .இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.

இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும், மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .

இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞானம் கூறுகிறது. 

அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .

அதனால் காலையும் மாலையும்
நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.

குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .

இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீர் அணிவது வழக்கமாக்க பட்டது .

அணியும் காரணம் — மற்றொரு விளக்கம்

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். 

இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். 

மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. 

கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். 

அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.

அணியும் முறை-

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். 

எடுக்கும் போதுதிருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். 

ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். 

காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.

நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும்.

மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

திருநீறு அணியும் இடங்கள்
————————– ————
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. 

அவை
1. தலை நடுவில் (உச்சி)

2. நெற்றி

3. மார்பு

4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.

5. இடது தோள்

6. வலது தோள்

7. இடது கையின் நடுவில்

8. வலது கையின் நடுவில்

9. இடது மணிக்கட்டு

10. வலது மணிக்கட்டு

11. இடது இடுப்பு

12. வலது இடுப்பு

13. இடது கால் நடுவில்

14. வலது கால் நடுவில்

15. முதுகுக்குக் கீழ்

16. கழுத்து முழுவதும்

17. வலது காதில் ஒரு பொட்டு

18. இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்-

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். 

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். 

பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே

திருநீறு (விபூதி):-

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். 

அவை

1. கல்பம்

2. அணுகல்பம்

3. உபகல்பம்

4. அகல்பம்

1.கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4.அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் காரணம்

"மந்திரமாவது நீறு" – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.

மும்மலங்களையும்சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.

அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், 

அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.

புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

இது தற்பொழுது உள்ள குறிப்பு.

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. 

அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. 

அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
அணியும் காரணம் — மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். 

மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம்

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். 

அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம்,

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும்
செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.

இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு

அணியும் முறை-

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். 

எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவஎன்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். 

ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். 

காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.

நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

திருநீறு:-

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்.

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.

2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.

3. தீட்டுக் கழிக்கும்.

4. உடலைச் சுத்தம் செய்யும்.

5. வியாதிகளைப் போக்கும்.

6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.

7. முகத்திற்கு அழகைத் தரும்.

8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.

9. புத்திக் கூர்மையைத் தரும்.

10. ஞானத்தை உண்டாக்கும்.

11. பாவத்தைப் போக்கும்.

12. பரக்தியைத் தரும்.

.....

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator