Monday, 10 March 2014

காரடையான் நோம்பு

காரடையான் நோம்பு ஒரு யதார்த்த பதிவு :-

இந்த வருடம் காரடையான் நோம்பு மார்ச் மாதம் 14தேதி வெள்ளிகிழமை அன்று வருகின்றது . 

நோம்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் மாலை8.15 PM-9.15 PM (ISD) TIME.

இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது.

காரடையான் நோம்பு ஸ்லோகத்தை பார்க்கும் முன் எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா சகோதரிகளே !!!!!!

காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள்.

அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான்.

அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா
நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி.

இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார்
அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .

அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்.

கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்

" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "

" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்

" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்

சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன ,

இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்.

நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் "மாசிக்கயிறு பாசி படியும்" என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது.

என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்.

'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் " 

( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு)

என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , அதே போல் என்னுடைய சகோதரிகளையும் அணியச்சொல்வார் எனது தாய்.

" அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்று சகோதரிகள் கேட்டால் " எங்கேயாவது
பிறந்திருப்பானே" என்று முடிப்பார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "?

இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால் கற்புக்கரசியினால் இது சாத்தியமாகும் என்றார் ,,,

எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது.

மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான்.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே
மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator