Monday, 31 March 2014

வசந்த நவராத்திரி The 9 Holy Nights of Spring - From March 31, 2014 to April 8, 2014.

வசந்த நவராத்திரி 

The 9 Holy Nights of Spring - 

From March 31, 2014 to April 8, 2014.

Goddess Durga is worshipped during Navaratri

தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். 

தேவி வழிபாட்டின், பண்டி கைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான். 

குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. 

அந்த இரு தாடை களிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. 

புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம். 

பங்குனி மாதம், கோடையின் துவக்கம். 

இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். 

அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமா னவை நான்கு. 

பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி ; 

ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி; 

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; 

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. 

சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரி களையும் கொண்டாடுவது வழக்கம். 

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். 

ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். 

அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்தருது.

பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்தருது. 

இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். 

அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். 

வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். 

மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். 

வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். 

மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண் டிகை அமையும். 

இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடி னால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும் ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும் ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங் களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)

பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. 

வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. 

மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். 

ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். 

ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். 

மாலை வேளையில் அம்பி கைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும். 

வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். 

சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். 

வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; 

அன்யோன்யம் உண்டாகும். 

அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விர தம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். 

அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம். 

வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். 

அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண் ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். 

நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. 

அம்பிகை சங்கீதப் பிரியை. 

எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். 

முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. 

வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். 

வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா? 

கவலைப் படாதீர்கள். 

'ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ' என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும். 

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். 

தர்மபுரி கல்யாணகா மாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. 

தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.

Vasanta Navaratri

The 9 Holy Nights of Spring - From March 31, 2014 to April 8, 2014.
Goddess Durga is worshipped during Navaratri

Navaratri ("nava" + "ratri") literally means "nine nights." This ritual is observed twice a year, in spring and in autumn. "Vasanta Navaratri" or Spring Navaratri is nine days of fast and worship that Hindus undertake during spring every year. Swami Sivananda retells the legend behind this 9-day springtime ritual during which the devout Hindu seeks the blessings of the Mother Goddess.

"The Divine Mother or Devi is worshipped during the Vasanta Navaratri. This occurs during the spring. She is worshipped by Her own command. You will find this in the following episode in the Devi Bhagavata.
The Story Behind the Origin of Vasanta Navaratri
In days long gone by, King Dhruvasindu was killed by a lion when he went out hunting. Preparations were made to crown the prince Sudarsana. But, King Yudhajit of Ujjain, the father of Queen Lilavati, and King Virasena of Kalinga, the father of Queen Manorama, were each desirous of securing the Kosala throne for their respective grandsons. They fought with each other. King Virasena was killed in the battle. Manorama fled to the forest with Prince Sudarsana and a eunuch. They took refuge in the hermitage of Rishi Bharadwaja.

The victor, King Yudhajit, thereupon crowned his grandson, Satrujit, at Ayodhya, the capital of Kosala. He then went out in search of Manorama and her son. The Rishi said that he would not give up those who had sought protection under him. Yudhajit became furious. He wanted to attack the Rishi. But, his minister told him about the truth of the Rishi's statement. Yudhajit returned to his capital.

Fortune smiled on Prince Sudarsana. A hermit's son came one day and called the eunuch by his Sanskrit name Kleeba. The prince caught the first syllable Kli and began to pronounce it as Kleem. This syllable happened to be a powerful, sacred Mantra. It is the Bija Akshara (root syllable) of the Divine Mother. The Prince obtained peace of mind and the Grace of the Divine Mother by the repeated utterance of this syllable. Devi appeared to him, blessed him and granted him divine weapons and an inexhaustible quiver.

The emissaries of the king of Benares passed through the Ashram of the Rishi and, when they saw the noble prince Sudarsana, they recommended him to Princess Sashikala, the daughter of the king of Benares.
The ceremony at which the princess was to choose her spouse was arranged. Sashikala at once chose Sudarsana. They were duly wedded. King Yudhajit, who had been present at the function, began to fight with the king of Benares. Devi helped Sudarsana and his father-in-law. Yudhajit mocked Her, upon which Devi promptly reduced Yudhajit and his army to ashes.

Thus Sudarsana, with his wife and his father-in-law, praised Devi. She was highly pleased and ordered them to perform Her worship with havan and other means during the Vasanta Navaratri. Then She disappeared.
Prince Sudarsana and Sashikala returned to the Ashram of Rishi Bharadwaja. The great Rishi blessed them and crowned Sudarsana as the king of Kosala. Sudarsana and Sashikala and the king of Benares implicitly carried out the commands of the Divine Mother and performed worship in a splendid manner during the Vasanta Navaratri.

Sudarsana's descendants, namely, Sri Rama and Lakshmana, also performed worship of Devi during the Vasanta Navaratri and were blessed with Her assistance in the recovery of Sita.

Why Celebrate Vasanta Navaratri?
It is the duty of the devout Hindus to worship the Devi (Mother Goddess) for both material and spiritual welfare during the Vasanta Navaratri and follow the noble example set by Sudarsana and Sri Rama. He cannot achieve anything without the Divine Mother's blessings. So, sing Her praise and repeat Her Mantra and Name. Meditate on Her form. Pray and obtain Her eternal Grace and blessings. May the Divine Mother bless you with all divine wealth!"
Vasant Navratri March - April 2014
Vasant Navratri, also known as Vasant Navratras, begins on March 31, 2014. This festival of nine nights in Hinduism is dedicated to Goddess Durga, Lakshmi and Saraswati. It is also known as Chaitra Navratras or Spring Navratri or Basant Navratri. As this Navratra coincides with Ram Navami, it also referred as Ram Navratri. The dates are from March 31, 2014 to April 8, 2014.

Vasant Navratri is observed in the Hindu month of Chaitra (March – April). It is believed that Goddess Durga was originally worshipped (Durga Puja) in the Chaitra month and was also referred as Basanti Puja. It was Lord Ram who changed the period of Durga Puja.

Vasant Navratri 2014 dates
• Ghatsthapana – Navratri Day 1 – March 31, 2014
• Sindhara Dooj, Dwitiya - April 1, 2014
• Gaur Teej, Saubhagya Teej, Tritiya - April 2, 2014
• Varadvinayak Chaturthi - April 3, 2014
• Sri Laxmi Panchami Vrat, Naag Vrat Pujan - April 4, 2014
• Skand Shashthi, Yamuna Jayanti - April 5, 2014
• Mahasaptami Vrat, Chaiti Chath, Vijaya Saptami - April 6, 2014
• Sri Durga Mahaashtami, Annapurna Ashtami - April 7, 2014
• Vasant Navratri ends – Ram Navratri Day 9 – April 8, 2014

Lord Ram wanted to get the blessings of Goddess Durga before beginning the war with Ravana. Therefore he invoked Goddess Durga during Ashwin (October – November). This is why the Durga Puja during October is also known as Akal Bodhon or untimely invocation.

The Vasant or Spring Navratri is widely observed in Himachal Pradesh, Uttarakhand (Uttaranchal), Haryana, Punjab and Jammu and Kashmir. Most Hindu devotees in this part of India undertake Navratri Vrat or fasting. The festival occurs during the beginning of summer season. And it is said that the fasting helps in adapting the body to the changing climate.

Some of the important Temple fairs in Himachal Pradesh and Uttarakhand are organized during this period.

Almost all the rituals observed during Navratri (held in October-November) are also observed during Vasant Navrati.

One of the important events in Haryana and Punjab is the worshipping of little girls. These little girls symbolically represent Goddess Durga and are known as 'kanjaks.' It is performed on the eight day or the Ashtami day.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator