பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் ?????
பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.
*அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான "பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது.
*வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது.
*பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம்.
*இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம், பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல்.
உணவுப் பொருட்கள் உணவு பிரஷ்ஷாக இருக்கும் காலம்:
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்
காய்கறிகள்:
புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்
அசைவ உணவுகள்:
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
சமைத்த மீன் 3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்
உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்
பால் பொருட்கள்:
பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்
மோர் 2 வாரங்கள்
தயிர் 7-10 நாட்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment