ஆன்மீக செய்திகள்
கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர். திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.
வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன.மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும். ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.
நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும். கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.
ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களை ஐராவதீஸ்வரர் கோயிலில் காணலாம். இங்கு வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும். ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பது போல் இக்காட்சி அமைந்திருக்கும். தாராசுரம் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. இந்த சிற்பங்கள் சோழப் பேரரசனான இரண்டாம் ராஜராஜசோழனின் கலைப் பாணியின் வெளிப்பாடாகும். குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. இருள் என்ற ஒன்று இல்லை.ஒளியின் பற்றாக்குறையைத் தான் " இருள் ",என்கிறோம்.
"சாத்தான்", என்று இவ்வுலகில் எதுவுமில்லை.
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை. ..... |
No comments:
Post a Comment