Thursday, 6 February 2014

அய்யா சொன்னதையே சாமி சொல்றீங்க...எப்படி?"

அய்யா
சொன்னதையே சாமி சொல்றீங்க...எப்படி?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்

ஒரு செல்வந்தர் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாள் உத்திரவிட்டால், அதன்படி
தரும காரியங்களுக்கு செலவு செய்யத்
தயாராக இருப்பதாகக் கூறினார்.

பெரியவா சொன்னார்கள்.

"உன் வீட்டிலுள்ள வயோதிகர்களிடம்
பக்தி,சிரத்தையுடன் பழகு. உன்
சம்சாரத்திடம் அன்பாக இரு.கூடியவரையில்
தப்புக்காரியங்கள் செய்யாமல் இரு.
அதுவே போதும்....."

பெரியவாள், 'மடத்துக்குப் பண உதவி செய்'
என்று கேட்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த
செல்வந்தருக்கு, பெரியவாளின் பதில்
ஆச்சர்யத்தைத் தந்தது.மடத்துக்கு என்று
எதுவும் கேட்காமல், முற்றிலும் வேறு
விதமாகச் சொல்லிவிட்டார்களே......எப்படியும் 
பெரியவாளை மடக்கிவிட வேண்டும்.......

"சாமி சொன்னபடியெல்லாம் நடக்கிறேன்;
இனி மேலும் நடப்பேன்....மேற்கொண்டு
உத்திரவு போட்டாலும் அடியேன் செய்வேன்..."

சிறிது மௌனத்துக்குப் பின் பெரியவாள்....
கூறினார்கள்!

"உங்களுக்கெல்லாம் குலதெய்வம்,அய்யனார்
அந்தக் கோயில் முன்புறம் உள்ள குதிரைச் சிலை
{சிமெண்ட்) பழுதாகியிருக்கிறது.அதையெல்லாம்
சரிப்படுத்தி, வர்ணம் பூசி, கோயில் திருப்பணி
நடத்தி கும்பாபிஷேகம் செய்..."

வந்த அடியார் திடுக்கிட்டே போனார்.

"ஆமாங்க சாமி, எங்க ஐயா (அப்பா) சாவறதுக்கு
முன்னாடி, இந்த விஷயத்தைச் சொன்னாருங்க.
நாந்தான் மறந்துட்டேன்...எங்க அய்யா
சொன்னதையே சாமி சொல்றீங்க...எப்படி?"

அதுதானே 'எப்படி'

'அய்யா' வந்து 'சாமி'யிடம் சொல்லிவிட்டுத்தான்
மேலே போயிருப்பாரோ?

செல்வந்தர் உத்திரவு பெற்றுக்கொண்டு மிகவும்
மனத்திருப்தியுடன் போய்விட்டார்.

நமக்கென்ன கவலை.?


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator