Saturday 16 August 2014

'பை' (Pi) அளவு கண்ட ஆர்யபட்டர் (476-550 AD)

TREASURES OF HINDUISM 33 :
'பை' (Pi) அளவு கண்ட ஆர்யபட்டர் (476-550 AD)

பொறியியல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் நவீனப் பொறியியலின் முன்னேற்றம் என்பது ஒரு பெரிய கண்டுபிடிப்பிற்கு பின்தான் கிடுகிடுவென வளர்ந்ததென்பது!! அதுவே சக்கரத்தின் கண்டுபிடிப்பு (INVENTION OF THE WHEEL )!

சக்கரம் என்பது வட்ட வடிவிலானது அல்லவா?? வட்டம் என்கிற வடிவம் கண்டறியப்பட்ட போதே அதன் விட்டத்துக்கும் சுற்றளவுக்கும் உள்ள விகிதத் தொடர்பு என்ன என்பதை அறியும் ஆர்வம் மனிதனுக்கு உண்டாகி விட்டது!! இப்போது நாமும் காம்பஸ் சில் விட்டத்தின் பாதியான ஆரத்தை (RADIUS) வைத்துதான் வட்டம் வரைகிறோம்! இன்று அதன் அளவு 22/7 அல்லது 3.146 என்று கண்டுபிடித்து விட்டோம் !! ஆனால் இதற்கான அடிப்படையை பலப் பல கணித அறிஞர்களும் வெவ்வேறு முயற்சிகளின் மூலம் அன்றே கண்டுபிடித்துச் சொன்னார்கள்!! அவை கொஞ்சம் சுற்றி வளைத்து சொல்லும் CRUDE ஆன முறை போலத் தெரிந்தாலும் அம்முறை யிலும் இந்த அளவே வருகிறது என்பதே குறிப்பிடத்தக்கது !!

நமது இந்திய கணித மற்றும் வானசாஸ்திர மேதை ஆர்யபட்டர் ஆறாம் நூற்றாண்டிலேயே இதற்கான முயற்சியில் ஈடுபட்டார் !! 'Pi' என்பதை விளக்கும் குகமாக அவர் சொல்லியுள்ள சுலோகம் :

சதுர்த்திக ஷத்மஷ்ட்குண தாஷ்திஸ்தகதா சஹஸ்ராணா

ஆயூத்திய விஷ்கம்பஸ்ய ஆசன்னோ விருத்த பரிணாஹ்

இதில் 'ஆசன்னோ' என்னும் சொல் மிக நுட்பமானது!! அதைப் பின்னால் சொல்கிறேன்!!

பொருள் : 20000 என்னும் விட்டத்தை உள்ள ஒரு வட்டத்துக்கு சுற்றளவு கண்டுபிடிக்க கீழ்கண்டவாறு செய்க !

100 உடன் 4 ஐக் கூட்டி 8 ஆல் பெருக்கி 62000 த்துடன் கூட்டினால் வரக் கூடியது 20000 என்னும் விட்டதைக் கொண்ட வட்டத்தின் சுற்றளவாகும்!!!

Pi = Circumference / Diameter = 62832/20000 = 3.146 (or) 3.1415926

இதில் முக்கியமான விஷயம் 'ஆசன்னோ' என்பதன் பொருள்!! அக்கால நமது விஞ்ஞானிகள் தான் சொன்னது தான் சரி என்பது போல ஒற்றைக்காலில் நிற்கவில்லை!! Pi யின் அளவைச் சொல்லும் ஆர்யபட்டர் அதை 'ஆசன்னோ' அதாவது 'தோராயமான' அளவு என்றே சொல்கிறார் என்பது குறிபிடத்தக்கது!!

இதே அளவை 20 ஆம் நூற்ற்றாண்டின் ஆரம்பத்தில் மேலை நாட்டினர் கண்டறியும் முன்பாகவே வேதக் கணிதத்தில் நிபுணராகத் திகழ்ந்த பாரதி கிருஷ்ண தீர்த்தர் 31 தசம சுத்த அளவில் கண்டறிந்து வெளிநாட்டினரை வியக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!! அவர் கண்டறிந்த அளவு:

Pi = 3.1415 9265 3589 7932 3846 2643 3832 732. - இந்த அளவை அவர் ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator