Sunday 28 April 2019

காசி யாத்திரை

IndiBlogger - The Largest Indian Blogger Community



\
சித்தி விநாயகர் துணை ஸ்ரீ வேங்கடாசலபதி துணை
ஸ்ரீ கோமதி அம்மன் துணை ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை
காசி யாத்திரை
எழுத்து: லோகக்ஷேம ஹரி (ஹரி கிரிஷ்ணமூர்த்தி)
பல நாட்களாக காசி யாத்திரை போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இதற்காக பல்வேறு யாத்திரை நிறுவனங்கள், சாஸ்த்ரிகள், நண்பர்கள் என்று விசாரித்து வந்தேன். ஒவ்வொரு இடத்திலும் தகவல்கள் வந்து குவிந்தன. என் துணைவியார் என்னத்துக்கு வீணாக கவலைபடுகிறீர்கள்? வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்று எனது மனத்தை தேற்றினார். காசியில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினர் ஒருவர் இத்தகைய சேவைகளை செய்து வருவதாக ஒருநாள் எனது துணைவியாருக்கு அவர் சகோதரன் தெரிவித்தார், தொலை பேசி எண்ணும் கொடுத்தார். பிறகு என்ன உடனடியாக அவரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்தேன். நாங்கள் இருவரும் (நானும் துணைவியாரும்) போவது என தீர்மானித்தோம். நாங்கள் கூட்டு குடும்பமாக புது டில்லியில் ஒரே வீட்டில் நான்கு சகோதரரகளும் இருக்கிறோம் ஆகையால் அவர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். நீண்ட ஆலோசனை, பட்ஜெட், லீவு, பயணம், உடல் சௌகரியம் எல்லாம் உத்தேசித்து நாங்களும் என் தம்பி கணேஷ், அவர் துணைவியும் போவதாக தீர்மானித்தோம். பிறகு என்ன புறப்பாடு, ஏற்பாடு, கும்மாளம், கொண்டாட்டம், களேபரம் கூட்டு குடும்பமல்லவா… எல்லாமே ஒரு திருவிழா போலத்தான் எங்கள் வீட்டில். பயண ஏற்பாடுகள், ரயில் டிக்கெட் பதிவு, பணத்திற்கு ஏற்பாடு, துணி மணி, அலுவலகத்தில் லீவு, என்று ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்தது. எங்கள் அண்ணா உடல் அசௌகரியத்தினால் வர இயலாது ஆனாலும் தேர்தல் நேரம் ஜாக்கிரதையாய் பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். தொலைபேசி மூலம் திரு ரவி (எங்கள் உறவினர்) அவர்களை  தொடர்பு கொண்டு 4 பேர் வருகிறோம் ஏப்ரல் 17 முதல் 21 தேதி வரை எங்கள் ப்ரோக்ராம் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அட்வான்ஸ் பணமும் அனுப்பி வைத்தோம்.  அந்த நாளும் வந்தது.

16 ஏப்ரல் இரவு Mandwadih சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் காசிக்கு பயணம் தொடங்கியது. 17ம தேதி திரு ரவி அவர்கள் ரயில் நிலயதிற்கு வந்து ஓட்டலுக்கு அழைத்து சென்றார். ஓட்டலில் உணவு அருந்தி சற்று களைப்பாறினோம். அன்று மதியம் 3 மணியளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புறப்பட்டோம்.
காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1] விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.
தலபெருமை[
இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்துகொள்கின்றனர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும்போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.[2]
கோயில் அமைப்பு
இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.[2] கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.
ஸ்கந்த புராணத்தில் காசி கண்டத்தில் இத்தளத்தை வர்ணிக்கிறது. மும்மூர்திகளில் யார் பெரியவர் என்று கேள்வி எழுந்தவுடன் சிவன் ஒரு ஒளிப்பிழம்பாய் மாறி அடி முடியில்லாத ஸ்வரூபாமை காட்சி அளிக்கிறார் மகாவிஷ்ணு அந்த ஓளியின்ஆரம்பம் எங்கே என்று தேட போகிறார் பிரம்மனோ முடியை நோக்கி பயணிக்கிறார் பல யுகங்கள் சென்ற போதிலும் அடியும் முடிவும் காண முடிய வில்லை பிரம்மா மேல் நோக்கி செல்லுகையைல் ஒரு தாழம்பூ மேலிருந்து விழுகிறது பிரம்மா அதனை தான் முடியைக்கண்டதற்கு சாட்சியாக இருக்க வேண்டுகிறார் . தாழம்பூவும் ஒப்புக்கொள்கிறது . பிரம்மன் சிவனிடம் வந்து தான் முடியை கந்ததாகவும், தாழம்பூ அதற்கு சாட்சியென்றும் கூறுகிறார். அங்கு விஷ்ணு தம் அடியை காண முடியாமல் தோற்றதாக ஒப்புக்கொள்கிறார். பொய் சொன்னதனால் சிவன் பிரம்மாவிற்கு எங்கும் வழி பாடு நடக்காது என்றும், தாழம்பூ அதற்கு சாட்சி சொன்னதால் அது சிவா பூஜைக்கு சேர்க்க கூடாது என்றும் கூறுகிறார். மகா விஷ்ணு சிவனை விஸ்வேஸ்வர ரூபமாய் தரிசனம் அளிக்க வேண்டுகிறார். சிவனும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி லிங்க ரூபமாய்  காட்சி அளிக்கிறார்.  அதைத்தான் நாம் காசி விஸ்வநாதராக இன்று காண்கின்றோம்.
காசி விஸ்வநாதர் கோயில் தொன்று தொட்டு இருந்தாலும் இதனை கி பி 1194ம ஆண்டு முகமது கோரியின் படை தலைவன் குதுபுத்தின் நிர்மூல மாக்கினான். அதன் பிறகு குஜராத் மன்னர்கள் கட்டினார் இது போன்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய மன்னர்களால் சூறையாடப்பட்டு சின்ன பின்ன படுத்த பட்டது அதை இந்து மன்னர்கள் மறுபடியும் கட்டினர். இந்தோர அரசியான அகல்யா பை ஹோல்கர் காலத்தில் ஔரங்காஜீப் இதனை இடித்து மசூதியை கட்டினான். ஆனால் ராணி அகல்யா பை மற்றும் பண்டாக்கள் மரகத சிவலிங்கத்தை அருகிலுள்ள கிணற்றில் போட்டு மூடி விட்டார்கள். இந்த கினரையும் மசூதியையும் இன்றும் காணலாம். ராணி அகல்யா பாய் மறுபடியும் கோயில் எழுப்பினார் அதற்கு மகாராஜா ரஞ்சித் சிங் 18ம நூற்றாண்டில் தங்க கோபுரம் அமைத்தார்.
தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. கோயிலின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயத்தை 1780ஆம் ஆண்டு இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது.[2] 1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டது.[3]

தற்போது பிரதம மந்திரி மோடி ஜி அவர்கள் இதன் புராதன சிறப்புக்களை மீட்க முயற்சி செய்து வருகிறார். 

தற்போது பிரதம மந்திரி மோடி ஜி அவர்கள் இதன் புராதன சிறப்புக்களை மீட்க முயற்சி செய்து வருகிறார். 

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator