Monday, 22 December 2014

காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பிடி அரிசி திட்டம்







காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பிடி அரிசி திட்டம் 

ஒவ்வொரு மனிதனும் ஐந்து கடன்களுடன் பிறக்கிறான். அவை தெய்வ கடன், பித்ரு கடன், ரிஷி கடன், பூத கடன், மற்றும் மனித கடன். மனித கடன் தவிர மற்ற நான்கு கடன்களை இறைவனுக்கு பூஜை செய்தல், பித்ருக்களுக்கு மற்றும் ரிஷிகளுக்கு தர்ப்பணம் அளித்தல், மற்ற ஜீவராசிகளுக்கு உணவு அளித்தல் போன்றவற்றால் நிவர்த்தி செய்து விடலாம். மனித கடனுக்கு, தினமும் ஒருவருக்கு உணவு அளிப்பது முக்கிய கடமை. ஔவையாரும் `அன்னமிட்டு உண் ` என்று வற்புறுத்தி சொல்லியிருக்கிறார்.
தற்காலத்தில், தினமும் ஒருவருக்கு உணவு அளித்து உண்பது என்பது ஒரு சாத்தியமாகாத நிலை. ஒவ்வொருவரும் இந்த மனித கடனை தீர்க்க வேண்டிய அவசியத்தை மனதில் கொண்டு காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் பிடி அரிசி திட்டம் என்ற ஒரு முறையை நமக்கு காட்டிக்கொடுத்தார்கள். அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் சோறு சமைக்கும் முன் ஒரு பிடி அரிசியை தனியாக ஒரு இடத்தில் சேமிக்க வேண்டும். அத்துடன் ஒரு ரூபாய் காசும் போடலாம். இவ்வாறு சேமிக்கபட்டதை ஒருவர் அல்லது இரண்டு பேர் எல்லா வீடுகளுக்கும் சென்று எடுத்து வந்து சமைத்து, கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் அல்லது ஈஸ்வரன் கோயில் அல்லது பெருமாள் கோயில் ஏதாவது ஒன்றில் சுவாமிக்கு நிவேதனம் செய்து படைக்கப்பட்ட அந்த இறை பிரசாதத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கலாம். பசியால் வாடும் ஏழை மக்கள் இறை பிரசாதத்தை உண்டு பசியாருவார்கள். மேலும் சேர்ந்த பணத்தைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேக பொருள், எண்ணை, புஷ்பங்கள் வஸ்திரங்கள் போன்றவற்றை வாங்கலாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதற்கு இணங்க இறை அருளும், புண்ணிய சக்தியும் எல்லோருக்கும் கிடைக்கும். இறை அருளால் இவ்வுலகில் எல்லா நலமும் பெற்று வாழ்வார்கள். இறைவன் பிரசாதம் உணர்வைத்தூண்டி மனதை தூய்மை படுத்தும் வல்லமை வாய்ந்தது.
குறிப்பு 
ஈஸ்வரன் கோயிலில் மகாபிரதோஷம் அன்று மாலை 4.30 முதல் 6.00 மணி வரை பிடி அரிசி திட்ட வழிபாட்டை செய்வது அளப்பரிய புண்ணிய சக்தியை கொடுக்கும்.
பெருமாள் ஆலயத்தில் திருவோணம் நட்சத்திரம் அல்லது சனிக்கிழமை அன்று செய்வது விசேஷ பலனைக் கொடுக்கும்.
ஊரில் உள்ள அம்மன் கோயிலில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்வது விசேஷம்.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator