Saturday 13 December 2014

தமிழக முதல்வர் வேட்பாளராக,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம்:




தமிழக முதல்வர் வேட்பாளராக,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம்:
 

தமிழகத்தில், 2016ல் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில்,செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ.தலைமைகட்சியின் முதல்வர் வேட்பாளராகமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைகளம் இறக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காகபிரதமர் மோடியின் ஒப்புதலுடன்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாகட்சியின் முக்கியத் தலைவர்களிடம் பேசி,கருத்துக்களைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில்பா.ஜ.தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்பா.ஜ.ஆட்சியை ஏற்படுத்ததிட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.அதற்கேற்ற வகையிலேயேமத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடும் இருக்கிறது. அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும்ஒவ்வொரு மாநில மக்களையும் குறிவைத்தே செய்யப்படுகிறது.தமிழர்களுக்கு இருக்கும் பிரதான பிரச்னைகள் அனைத்தையும்விரைந்து தீர்க்கும் முயற்சியில்,தற்போது மத்திய அரசு இறங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பது,அந்த வகையில் தான்.

அறிக்கை: தேசிய அளவில்கட்சிக்குள்ளேயேஉத்திகள் வகுக்கும் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுஅந்த குழுஒவ்வொரு மாநில மக்களின் பிரச்னைகள்தேவைகள் குறித்து அறிந்துஅதை சீர்படுத்தும் தீர்வோடுபா.ஜ.மேலிடத்துக்குதொடர்ச்சியாக அறிக்கைகளையும்கருத்துக்களையும் கொடுக்கிறது.அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் தான்தமிழக மீனவர்களுக்கான பிரச்னைகளை தீர்க்கமத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் உள்ளன.இலங்கை கடல் பகுதியில்தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை நிரந்தரமாக துடைப்பது,திருவள்ளுவர்பாரதியாருக்கு புகழாரம் சூட்டுவது போன்றவையெல்லாம் கூடஉத்திகள் குழு வகுத்துக் கொடுத்தவை தான்.தமிழகத்தின்பொருளாதார மேம்பாடு உட்பட,பல விஷயங்களைஅடுத்தடுத்து நிறைவேற்றஉத்திகள் வகுக்கும் குழுகட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறது. அவைகளை வரிசையாக செயல்படுத்தும் போதுதமிழகம்
பா.ஜ.பின்னால் அணிவகுக்கும் என்பதுஅவர்கள் திட்டம்.

யோசனை:இதற்கிடையில்தமிழகத்தில்பெண் ஒருவரை பா.ஜ.,முதல்வர் வேட்பாளராக்கவும்பா.ஜ.உத்திகள் குழுஅமித் ஷாவுக்கு யோசனை கூறியுள்ளது. குறிப்பாகமத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனை,தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்றும்,ஆலோசனை கூறியுள்ளது.இதனால்தமிழக பா.ஜ.சார்பில்,நிர்மலா சீதாராமன்முதல்வர் வேட்பாளராகவிரைவில் அறிவிக்கப்படுவார் எனதெரிகிறது.இதுகுறித்துபா.ஜ.,வட்டாரங்களில் கூறியதாவது;தமிழகத்தை சொந்த மாநிலமாக கொண்டபச்சைத் தமிழரான நிர்மலாசீதாராமன்நன்கு படித்தவர்;பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அதனால் தான் அவரைதெலுங்கானாவில் இருந்துராஜ்யசபா எம்.பி.,யாக்கி,மோடிதன் அமைச்சரவையில்தனிப் பொறுப்புடன் வர்த்தகத் துறைக்கு அமைச்சராக்கினார்.தொழில் - வர்த்தகத் துறையில்,மோடி எதிர்ப்பார்ப்புக்கும் கூடுதலாகசெயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமனைதமிழக பா.ஜ.,வில் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.அதனால்அவரை தமிழக பா.ஜ.முதல்வர் வேட்பாளராக்கமேலிடத்தில் முடிவெடுத்து விட்டனர். 20ம் தேதி,சென்னைக்கு வரும் அமித் ஷாஇதுகுறித்துஇங்கிருக்கும் தலைவர்களிடம் ஆலோசிப்பார்.அதன்பின்அடுத்த ஆண்டு மத்தியில், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் வேகமெடுக்கும் நிலையில்மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்துநிர்மலா சீதாராமன் விடுவிக்கப்பட்டுகளம் இறக்கிவிடப்படுவார். இவ்வாறுஅந்த வட்டாரங்களில் தெரி வித்தனர்.

தமிழகத்தை சேர்ந்தமத்திய அமைச்சர்
பெயர்: நிர்மலா சீதாராமன், 55
தந்தை:நாராயண சீதாராமன்
தாய்: சாவித்ரி
பிறந்த ஊர்:மதுரைதமிழகம்
பிறந்த தேதி:18.08.1959
மண நாள்: 12.09.86
கணவர்: டாக்டர் பரக்கல பிரபாகர்
வாரிசு: மகள்
படிப்பு: எம்.ஏ.எம்.பில்.,
 

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator