பெருமிதம் அடைகிறேன் ! :
இந்தியாவில் ஊழல் ஒழியுமா அதை ஒழிப்பது சுலபமா , ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு பயத்தையாவது உண்டாக்க முடியுமா என்று நேர்மைத் திறம் இருந்தாலும் நெஞ்சில் உரமின்றி இருக்கும் என் போன்றவர்களுக்கும் இன்னமும் உள்ள இந்நாட்டு இளைஞர்களுக்கும் உதாரணமாகத் திகழ்கிறார் நண்பர் திரு.Ravi Shankar A Nagarajan என்கிற வேலுபாய்அவர்கள் !!!
நாட்டில் எத்தனை எத்தனையோ வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்!! ஆனால் ஒரு தனிமனித ராணுவமாக இந்தியாவின் ஒரு மிகப் பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்த்த பெருமை அவருடையது!! அதுவும் எந்த வித வழக்கு வாய்தா என்று இல்லாமல் சாதாரணமாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் RTI சட்டத்தின் மூலம் !!!! இவர் போல உள்ளவர்கள் நம்மால் வணங்கப்பட வேண்டும்!! கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!! அச்சமே கண்டு அச்சப்படும் உண்மையான அஞ்சாநெஞ்சனாகிய இவர் என்னுடைய நண்பராக இருப்பதை இந்த சுதந்திர நாள் வரப்போகும் தருணத்தில் பெருமையாக உணர்கிறேன்!!! உண்மையிலேயே இவர் வேலுபாய்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!!
வேலுபாய்க்கு ஒரு சல்யூட்!!!! உங்களைப் போன்றவர்களால் மட்டுமே இந்த நாடு ஊழலிலிருந்து சுதந்திரம் பெரும் என்பதில் எந்த ஐயமுமில்லை!!!!










( hari krishnamurthy K. HARIHARAN)"think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''


No comments:
Post a Comment