ஒரு பத்து வயது குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடப்படும்போது
ஏன் இந்த குழந்தை கல்லூரி படிப்பை முடிக்கவில்லை
பத்து வயதாகியும் கல்லூரி படிக்காத இந்த குழந்தையின் பிறந்தநாள் எல்லாம் ஒரு கேடா
என்று கேட்பது எவ்வளவு "புத்திசாலித்தனமோ"
அதே விட பல மடங்கு "புத்திசாலித்தனம்"
இந்தியாவில் அனைவருக்கும் கல்வி, நலம், உரிமை, நிலம் இல்லை என்பதால் சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது என்று கூறுவது
-oOo-
இந்தியாவின் இன்னமும் மூன்று வேளை உண்ண முடியாதவர்கள் உள்ளார்கள்
இந்தியாவின் இன்னமும் பள்ளி செல்லாத குழந்தைகள் உள்ளார்கள்
இந்தியாவின் இன்னமும் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் இல்லை
இந்தியாவின் இன்னமும் அரசின் சேவைகள் முழுவதும் சென்று சேரவில்லை
இந்தியாவின் இன்னமும் பேரூந்து வசதியில்லாத கிராமங்கள் உள்ளன
இந்தியாவின் இன்னமும் மின்சார வசதியில்லாத கிராமங்கள் உள்ளன
இதெல்லாம் குறைதான்
நாம் செல்ல வேண்டியது தூரம் நிறையத்தான்
ஆனால்
இதற்கெல்லாம் சுதந்திரத்தை குறை சொல்வது என்ன நியாயம்
-oOo-
இந்த படத்தில் உள்ள கோப்பையை பாருங்கள்
பாதி நீர் உள்ளது
எனவே இந்த பாதி நிறைந்துள்ளது என்று கூறவேண்டுமா, அல்லது பாதி காலி என்று கூற வேண்டுமா ?
இந்த கேள்விக்கு விடையளிக்கும் முன்னர் நேற்று இந்த கோப்பை எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும்
நேற்று இந்த கோப்பை முற்றிலும் காலியாக இருந்திருந்து, இன்று பாதி நீர் இருந்தால், கோப்பை நிறைந்து கொண்டுள்ளது என்று அர்த்தம். எனவே கோப்பை பாதி நிறைந்துள்ளது
நேற்று இந்த கோப்பை முழுவதும் நீர் நிறைந்திருந்து, இன்று பாதி நீர் இருந்தால், கோப்பையில் நீர் குறைந்து கொண்டுவருகிறது என்று அர்த்தம். எனவே கோப்பை பாதி காலியாக உள்ளது
-oOo-
நீங்கள் கூறும் அத்தனை குறைகளும் 68 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாகத்தானே இருந்தது
இன்று தானே அவை குறைந்துள்ளன, குறைந்துகொண்டேவருகின்றன
68 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்படிக்க தெரிந்தவர்களை விட விட இன்று எழுதப்படிக்க தெரிந்தவர்கள் அதிகம்
68 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சத்தால் இறந்தவர்களை விட இன்று பஞ்சத்தால் இறந்தவர்கள் குறைவு
68 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ வசதி கிடைக்கப்பெற்றவர்களை விட இன்று மருத்துவ வசதி கிடைக்கப்பெறுபவர்கள் அதிகம்
68 ஆண்டுகளுக்கு முன்னர் பேரூந்து வசதி இருந்த கிராமங்களை விட இன்று பேரூந்து வசதி இருக்கும் கிராமங்கள் அதிகம்
68 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சார வசதி இருந்த கிராமங்களை விட இன்று மின்சார வசதி இருக்கும் கிராமங்கள் அதிகம்
இதை உணர்ந்து கொள்வது இவ்வளவு கஷ்டமா
-oOo-
எனவே கோப்பை பாதி நிறைந்துள்ளது, நிறைந்து கொண்டே வருகிறது. விரைவில் நிறைந்து விடும்
-oOo-
பத்து வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதில் அக்குழந்தை கல்லூரி செல்லவில்லை என்பது குறையல்ல. காரணம், குழந்தை கல்லூரி செல்ல இன்னமும் காலம் உள்ளது
-oOo-
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்










( hari krishnamurthy K. HARIHARAN)"think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''


No comments:
Post a Comment