Tuesday 7 October 2014

இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

J. Jayalalithaa


இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்று சற்று விவரமாக சொல்கிறேன்.
காலை ஒன்பது மணிக்கு நீதிமன்றத்துக்கு சென்றேன்.. கோர்ட் ஹால் 28 க்கு போன போது அங்கு போலீஸ் சூழ்ந்து இருந்தார்கள்.. என்ன விஷயம் என்று கேட்டதற்கு, ஸெக்யூரிடீ checks நடக்கிறது.. போலீஸ் மோப்ப நாய்கள் மற்றும் Bomb Squad செக் செய்து கொண்டு இருந்தார்கள்.. ஒன்றிரண்டு நிருபர்களும், வக்கீல்களும் வர ஆரம்பித்தனர்.. சரியாக 945 மணிக்கு சில வாக்குவாதங்களுக்கு பிறகு நானும் ஒரு அரசு வக்கீலும் உள்ளே நுழைந்தோம்.. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. ராம் ஜெத்மலானி, மும்பையில் இருந்து அமித் தேசாய், அட்வகேட் குமார், இன்னும் பலரும் வந்தனர்.. இன்று பப்லிக் ப்ராஸெக்யூடர் பவானி சிங்கும் வந்து விட்டார். சரியாக 10 30 மணிக்கு நீதிபதி வந்தார்... இந்த வழக்கு 73 ஆக இருந்தது.. முதல் நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு பிறகு இந்த வழக்கு வந்தது.. முதலில் இது அட்மிட் செய்யப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.. ராம்.. அதை நான் பார்த்து கொள்கிறேன்.. நீங்கள் உங்கள் வாதத்தை தொடங்குங்கள் என்று நீதிபதி கூறியதை தொடர்ந்து வாதத்தை துவக்கினார் ராம் ஜெத்மலானி. வாதத்தில் அந்த வழக்கு என்ன மாதிரி தன்மை, அது எப்படி ஆரம்பித்தது, எப்படி கர்நாடகத்திற்கு வந்தது பிறகு trial எப்படி போனது, வாதம், பிரதி வாதம் இவை பற்றி பேசிய பிறகு.. தீர்ப்பு, தண்டனை பற்றி வந்தார்.. தீர்ப்பில் எனென்ன சட்ட குளறுபடிகள் என்பதை எடுத்துரைத்தார்.. குறிப்பாக prosecution ஏ சொல்லாத பல விஷயங்களை நீதிபதி தானாகவே எப்படி அனுமானித்து கொண்டார், ஒரு prosecution witness போலவே நடந்து கொண்டதை சொன்னார்.. குறிப்பாக அவர் வீடு ரிபேர் கணக்கிடுவதில் சரியான தகவல் இல்லாததால் 20% குறைத்து கொண்டு மதிப்பிடுகிறேன் என்று சொன்னதை நினைவு கூர்ந்தார்.. கோர்ட் அதிர்ந்தது.. சிரிப்பால்.. .....உடனே அடுக்கடுக்காக தன்னுடைய பல வாதங்களை எடுத்து சொன்னார்.. income-tax சொன்ன கணக்கீடை எடுத்து கொள்ள மறுத்த ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி எப்படி இன்னொரு விஷயத்தில் தான் பேச்சுக்கு மாறாக செய்தார் என்பதையும் சுட்டி காட்டினார்.. இப்படி பல விஷயங்களையும் உச்ச நீதி மன்ற வழி முறையையும் எடுத்துரைத்த அவருக்கு பிறகு trial இல் ஜெ விற்காக வாதாடிய அமித் தேசாய் பல விவரங்களையும் தவறான முன்னுதாரணங்களையும் இந்த தீர்ப்பு செய்திருப்பதாக கூறி வாதாடினார். பிறகு மீண்டும் ராம் ஜெத்மலானி ஐந்து நிமிடங்கள் கேட்டார்.. அதற்குள் லன்ச் திமே வந்து விடவே.. லன்ச் ப்ரேக் என்று சொல்லி விட்டு மதியம் இரண்டரை மணிக்கு கோர்ட் கூடும் என்று சொல்லி விட்டு போனார் நீதிபதி.. அப்படியே உட்கார்ந்திருந்தோம்.. தண்ணீர் குடிக்க வழியில்லை.. சாப்பிடவில்லை யாரும்.. அப்படியே உட்கார்ந்து இருந்தோம்.. 245 மணிக்கு வந்தார் நீதிபதி..மதியம் சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டி காட்டி தன் வாதத்தை முடித்து கொண்டார் ராம் ஜெத்மலானி.. உடனே அடுத்து குற்றவாளி நான்காக குறிப்பிடப்பட்ட இளவரசிக்காக வாதாடினார் அவரது வக்கீல்.. அது முடிந்ததும் பப்லிக் prosecutor ஐ பார்த்தார் நீதிபதி.. அவர் எழுந்து நாங்கள் எழுத்து பூர்வமாக எங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை.. சில conditions உடன் ஜாமீன் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை தெரிவித்தார்.. சரி என்று தன் தீர்ப்பை உடனே தன்னுடைய உதவியாளர்களுக்கு சொல்ல ஆரம்பித்தார் நீதிபதி.. அவர்களும் டைப் செய்ய ஆரம்பித்தனர்.. ..தன் தீர்ப்பை சொல்லும் போது ஆரம்பத்தில் இருந்து கதை போல ஆரம்பித்தார்.. கர்நாடகத்திற்கு மாற்றியது, வழக்கு துவங்கியது, பல வருடங்கள் ஆனது, நீதிபதி தீர்ப்பு, தண்டனை வழங்கியது என்று சொல்லி கொண்டே போனவர் இது போன்ற வழக்குகளில் குறிப்பாக ஊழல் வழக்குகளில் உச்ச நீதி மன்றம் எனென்னவெல்லாம் சொல்லியிருக்கிறது என்று தொடர்ந்தார்.. அப்போதே சந்தேகம் வர ஆரம்பித்து விட்டு.. public prosecutor objection இல்லை என்றவுடன் செய்தியாளர்கள் மெஸேஜ் அனுப்புஆ தொடங்கி விட்டனர்.. ஜாமீன் கிடைத்தே விட்டது என்று.. ஆனால் நீதிபதியின் தீர்ப்பு போக்கு மாறி கொண்டே வந்தது..ஊழல் பொருளாதாரத்திற்க்கும் மனித உரிமைக்கும் எதிரானது என்றுதான் உச்ச நீதி மன்றம் பார்க்கிறது என்று சொன்னார்.. அப்போதே ஏதோ நடக்க போகிறது என்று தெரிந்தது.. தண்டனையையும் நிறுத்தி வைக்க முடியாது, ஜாமீன் வழங்கவும் இதில் முகாந்திரம் எதுவும் இல்லை என்று சொல்லி நிராகரித்து விட்டார்.. இதுதான் நடந்தது.. இதை சொன்னவுடன் நான் கோர்ட் ஹாலில் இருந்து உடனே வெளியேறி விட்டேன்.. ஒரு நொடி கூட அங்கு இல்லை.. காலையில் அவர் வரும் போதே ஏதோ ஒரு முடிவுடன் வந்தார் என்றுதான் தோன்றுகிறது.. தீர்ப்பு வழங்கும் போது தான் கொண்டு வந்த குறிப்புகள், புத்தகங்கள் இவற்றை பார்த்தேதான் டிக்‌டேட் செய்தார்.. அப்போ இது நிச்சயம் முடிவெடுக்க பட்டதுதானோ என்று தோன்றுகிறது..

 

RVR

__._,_.___

 


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator