Tuesday 21 October 2014

”கங்கா ஸ்நானம் ஆச்சா?...” Sarma Sastrigal

"கங்கா ஸ்நானம் ஆச்சா?..."
நாளை காலை தீபாவளியன்று நாம் யாரை சந்தித்தாலும் குசலம் விசாரிப்பது இந்த வார்த்தைகளின் துவக்கத்தோடுதான்.

நமது இல்லத்தில் நாம் உபயோகப்படுத்தும் ஜலத்தில் கங்கை நிச்சயம் வருவாள் எனும் நம்பிக்கை காலம்காலமாக நமக்கு உள்ளது.

இந்த நேரத்தில் நான் சமீபத்தில் ரிஷிகேஷ் சென்றபோது எனக்கு ஏற்பட்ட எண்ண அனுபவங்கள் ஞாபகம் வருகின்றது.

அந்த தொகுப்பை சமீபத்தில் ஆச்சார்யாள் அனுக்ரஹத்துடன் வெளியான நூலிலிருந்து ஒரு சில வரிகள் :

ரிஷிகேஷ் கங்கை கரை. ஆனால் உடனே ஸ்நானம் செய்யாமல் அங்கு படித்துறையில் உட்கார்ந்தபடியே ஜீவநதியை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன். சற்றும் அலுப்பு தட்டவில்லை. மனத்தில் சொல்ல தெரியாத ஆனந்தம். பரவசம். பல எண்ண ஓட்டங்கள்.

ஒரு குழந்தை வேடிக்கை பார்ப்பது போல் நான் கங்கையை பார்த்துக்கொண்டு எத்தனை நேரம் படிகளில் உட்கார்ந்தேன் என்று ஞாபகம் இல்லை.

எதிரே அழகான மலைச் சாரல்; நம் ஊரில் கொலுவில் பொம்மைகளை அழகாக அடுக்கி வைத்த மாதிரி மலைகளின் அருகாமையில் எண்ணற்ற மரங்களின் வரிசைகள் தொடர்ந்து காணப்படுகின்றது. அதை ஒட்டி கங்கையின் ஓட்டம். கங்கா மாவின் ப்ரவாஹமும், காடு, மலை, மேடு, பள்ளங்களில் அவள் குதித்து ஓடும் தெய்விக அழகும் என்றும் மனதை விட்டு அகலாது. யுகம் யுகங்களாக இந்த கங்கையானது வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது பிரமிப்பாக உள்ளது.

நமது நாட்டின் வரலாற்றுக்கு சாட்சியாக அல்லவா அவள் இருக்கிறாள். தெய்விக தன்மையுடன், நமக்கு அருள் புரிய கங்கை அன்னையானவள் விச்சின்னமாக பூமியில் தனது பிரவாஹம் மூலம் தவழுகிறாள். கங்கையின் பிரவாஹத்தை பார்க்குபோது அது சனாதன தர்மத்தின் பிரதிபிம்பமாகவே எனக்கு தோன்றியது.

அந்த ஓட்டத்தின் இறுதி கட்டத்தில் '...யதா கச்சதி சாகரம்....' என்ற வாக்கியத்தின்படி இந்த நதியானது சமுத்ரத்தை அடைகிறது என்ற உண்மையை நினைக்கும்போது நமது வாழ்க்கையும் அப்படித்தானே என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் ஓட்டம் முடிந்தவுடன் நாமும் அந்த பரம்பொருளை அடையத்தானே ஆசைப்படுகிறோம்.

கங்கை அன்னை இமயத்திலிருந்து பூமியை நோக்கி வரும்போது எத்தனை தடங்கள்கள் அவளுக்கு? ஒன்றா, இரண்டா? எத்தனை உயரத்திலிருந்து பூமியை நோக்கி நமக்கு அருள் பாலிப்பதற்காக சிரமப்பட்டு வருகிறாள்! என்ன தயாள குணம்! பூமியநோக்கி மலைகளிருந்து கீழே வரும்போது எவ்வளவு சிரமங்கள். பெரிய பெரிய கற்கலின் குவியல்கள்; நதியின் பாதையை தடுத்து நிறுத்தும் வகையில் மரங்களின் கூட்டம், வழிநெடுக சிறுசிறு குன்றுகள், எத்தனை தூரம், அப்பப்பா... எல்லாவற்றையும் தாண்டி வளைந்து நெளிந்து அல்லவா அன்னை நமக்கு அருள் புரிய இங்கு வந்ததிருக்கிறாள்?

வாழ்க்கையில் எத்தனை தடங்கல்கள் இருப்பினும் நமது ஆன்மிக இலக்கை நொக்கி செல்லும் பாதையை நாம் கடந்து செல்ல முயற்சி செய்ய வேண்டும். இதைத்தானே கங்கை அன்னை தமது செய்கையின் மூலம் நமக்கு இங்கு போதிக்கின்றாள்.

நாம் ஏதாவது ஒரு வகையில் சமுதாய பொதுப் பணியில் ஈடுபட வேண்டாமா? அப்படி ஈடுபடும்போது தடங்கல்களை கண்டு அஞ்சலாமா? கூடாது. தளரவும் கூடாது; அவநம்பிக்கைக்கு சற்றும் இடமும் தரக்கூடாது.

கங்கையின் ஓட்டம் இந்த அணுகுமுறையைத்தானே நமக்கு எடுத்து கூறுகின்றது. கடவுளின் ஆசியும் விடாப்பிடியும் இருந்தால் நாம் தேர்ந்தெடுத்த நமது பாதையில் நம்மால் நிச்சயம் செல்ல முடியும்.

விடாமுயற்சிக்கு கங்கையின் ஓட்டம் ஒரு கர்ம சாட்சி.

யுகம் யுகங்களாக எண்ணற்ற முனிகளும், மகான்களும், ரிஷிகளும் தபஸ் செய்த புனித இடம் அல்லவா இந்த ரிஷிகேஷ் கங்கை கரை.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator