Wednesday 22 October 2014

பெரியவா பாத்துப்பா !


பெரியவா பாத்துப்பா !

(தீபாவளி போஸ்ட்)

கட்டுரை-கிருஷ்ணமூர்த்தி.

நன்றி-தினமணி.

kanchi

'தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. கோவில் கட்டட வேலை செய்யறவாளும், ஸ்தபதிகளும் ஊருக்கு போறதுக்கு ரெடியா நிக்கறா. ஆனா, அவாளுக்கு கொடுக்கறதுக்கு கைல பணம் இல்லை. எல்லா முயற்சியும் பண்ணிப் பார்த்தாச்சு. எங்கேயும் கிடைக்கல. உள் மனசு 'பெரியவா பாத்துப்பா'ன்னு சொல்றது, ஆனா வெளி மனசு வேலை செய்தவாளுக்கெல்லாம் பணம் கொடுத்தாத்தானே அவாளோட குழந்தைகளுக்கு டிரஸ், பட்டாசு, இனிப்பு, கார பதார்த்தங்கள் வாங்க முடியும்னு பதைபதைக்கிறது. அப்போ ஒரு போன் வரது, 'மாமி, டிரஸ்ட்ல பணம் போட்ருக்கேன், எடுத்துக்கோங்கோ'ன்னு. ஒரு நொடில நெருக்கடி தீர்ந்தது. அதுதான் பெரியவா. சன்யாசிகளே கங்கா ஸ்நானம் பண்ணி தீபாவளி கொண்டாடனும்னு அவர் சொல்லி இருக்கறச்சே, குடும்பஸ்தர்களை தவிக்க விட்ருவாரா என்ன?' என்று சிலாகிக்கிறார் ராஜலக்ஷ்மி விட்டல் மாமி.

rajalakshmiயார் இவர்? கோவில், ஸ்தபதி என்றெல்லாம் சொல்கிறாறே, அப்படியானால் இவர் ஏதேனும் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறாரா? யாருக்கு? சற்று விரிவாகவே இவரது கதையை பார்ப்போம்.

மாமிக்கு வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திருச்சியில் இருந்து முசிறி செல்லும் பாதையில் நொச்சியம் என்று வழங்கப்படும் மாதவப்பெருமாள் கோவில் என்கிற ஊரில் லலிதா பரமேஸ்வரிக்கு கோவில் எழுப்பிக் கொண்டிருக்கிறார். கணபதி, சுப்ரமண்யர், வேத வியாசர், ஆதி சங்கரர், மஹா பெரியவர் – இவர்களுக்கும் சன்னதிகள் உண்டு. அது சரி, இந்த வயதில் எதற்கு இப்படியொரு பகீரத பிரயத்தனம்?

'முதல்லேர்ந்து சொன்னாதான் புரியும். சொல்றேன் கேளுங்கோ. 1961ம் வருஷம். பூந்தமல்லி ரோட்ல எதோ ஒரு எடத்துல பெரியவா கேம்ப். என்னோட நாத்தனார் குடும்பத்துல எல்லாருக்கும் அவர் கிட்ட ரொம்ப பக்தி. நானும் அவரை தரிசனம் பண்ணனும்னு என் அப்பாவை அழைச்சிண்டு போனேன். மத்யான நேரம். அவர் பந்தலுக்கு கீழே உட்கார்ந்துண்டு இருந்தார். நான் ஒரு கம்பத்தை பிடிச்சு நின்னுண்டு அவரையே பார்த்துண்டு இருந்தேன். அவர் திடீர்னு எழுந்துண்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சார். என்னை தாண்டி போகும் போது 'நீ அமோகமா இருக்கப் போறே'ன்னு சொல்லிண்டே போனார். அப்போ எனக்கு அதோட அர்த்தம் தெரியலை. ஆனா, இப்போ புரியறது. அதுக்கப்றம் பெரியவா தன்னை எங்கிட்டேர்ந்து மறச்சுண்டுட்டா. குடும்பம், அகத்துக்காரர், குழந்தைகள் அப்டின்னே இருந்துட்டேன்.

அப்புறம் சில வருஷம் திருச்சில இருந்தோம். 1967-68ல மழையே இல்லை. ஜனங்கள் தண்ணிக்கு தவியா தவிச்சுது. லாரில தான் தண்ணி வரும். ஆடு, மாடுகளுக்கு அதுவும் கிடைக்கலை. விளைச்சல் இல்லை. விவசாயிகளும் ரொம்ப கஷ்டப்பட்டா. அப்போ, அரியூர் சுப்ரமண்ய கனபாடிகளோட இராமாயண பிரவசனம் வச்சேன். முதல் ஒன்பது நாள் மழைக்கான அறிகுறியே இல்லை. பத்தாவது நாள், இன்னைக்கும் மழை வரலைன்னா ராமனும் பொய், என்னோட பக்தியும் பொய், நான் இராமாயண உபன்யாசம் பண்றதையே விட்டுடறேன்னு அவர் சங்கல்பம் பண்ணிண்டார். அவர் ஊருக்கு கிளம்பற சமயம் வானம் பொத்துண்டு மழை கொட்டி தீர்த்தது. ராமன் தான் பொய் இல்லைன்னு நிரூபிச்சான்.

அதுக்கப்றம் நாங்க பெங்களூரு போய்ட்டோம். அப்போதான் மாமாவும் நானும் பெரியவாளுக்கு பிக்ஷை பண்ண ஆரம்பிச்சோம். அதுக்கு பின்னால ஒரு கதை இருக்கு. நான் என் நாத்தனார் கிட்ட நானும் உங்களை மாதிரி பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணனும்னு சொல்லுவேன். அவாளும், உனக்கு பெரியவா பக்தி இவ்வளவு இருக்கே, நிச்சயம் நடக்கும்னு சொல்லுவா. ஒரு நாள் ராத்திரி எனக்கு ஒரு கனவு வந்தது. வெள்ளை புடவை கட்டிண்ட ஒரு நடுத்தர வயசு மாதுவோட பெரியவா கதவை திறந்துண்டு உள்ளே வரா. ஆதிசங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் தான் அதுன்னு எனக்கு தெரியறது. அப்படின்னா, ஆதி சங்கரர் தான் இப்போ பெரியவாளா அவதாரம் பண்ணி இருக்கார்னு புரிஞ்சுது. நான் பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணனும்னு கேக்கறேன். அவர், எனக்கு வெறும் மோர் சாதம் போறும்னு சொல்றார். ஆனா, 1975க்கு அப்புறம் தான் நாங்க விடாம பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணினோம். அது பெரியவா 1994ல சித்தி ஆகற வரைக்கும் தொடர்ந்தது. அதுக்கப்றம் என்ன பண்றதுன்னு தெரியல. மத்தூர் சுவாமிகள் கிட்ட கேட்டேன். அவர், நீங்க இனிமே பெரியவா ஜெயந்தி கொண்டாடுங்கோன்னு சொன்னார். அது பெரியவா அனுக்ரஹத்துல இதுவரைக்கும் நடந்துண்டு வரது.

இதுக்கு நடுவுல 1986ல மைசூர் பேலேஸ்ல சீதா ராம பட்டாபிஷேகம் வடஇலுப்பை குமாரசாமி தீட்சிதரை வச்சு பண்ணினோம். அதுவும் பெரியவா ஏற்பாடு பண்ணினதுதான். ராமனோட சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் அமோகமா நடந்தது. நாங்க பிரசாதத்தையும் மத்த எல்லா சாமான்களையும் எடுத்துண்டு பெரியவாளை பார்க்க போனோம். அவர், 'என்ன, பரமேஸ்வரனுக்கு யக்ஞ சேஷத்தை கொண்டு வந்திருக்கியா'ன்னு கேட்டார். தான் சாக்ஷாத் ஈஸ்வரன்னு அவர் தன் வாயால சொன்னது எனக்கு பிரமிப்பா இருந்தது.

1988ல நடந்த அதிமஹா ருத்ரம் தான் என்னை அடியோட மாத்தினது. அதுல கொஞ்சம் கடன் ஆயிடுத்து. அப்போதான் நான் பெரியவாளை மனசுல நினைச்சுண்டு 'இன்னேலேர்ந்து என்னோட உடல், பொருள், ஆவி எல்லாமே உங்களை சேர்ந்தது. நான் உங்களோட அடிமை'ன்னு பிரதிக்ஞை எடுத்துண்டேன். அப்புறம் சில மாசத்துல கடனும் அடைஞ்சது.

பெரியவா சித்தி ஆனதுக்கு அப்பறம் முதல் ஜெயந்தி சென்னைல நடந்தது. அதுக்கு பின்னால திருச்சில பல இடத்துல பெரியவா ஜெயந்தி உற்சவம் பண்ணினோம். ஆனா, நமக்குன்னு ஒரு இடம் வேணும்னு தோணிண்டே இருந்தது. அப்போதான் கொள்ளிட கரைல இந்த இடத்தை பார்த்தேன். வாழை தோட்டம், தென்னை மரங்கள், மாடு, கன்னு குட்டிகள்னு ரொம்பவே பிடிச்சு போச்சு. பெரியவாளுக்குன்னு சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து வாங்கினோம். முதல்ல எனக்கு வேத பாடசாலை மட்டும்தான் மனசுல இருந்தது. அப்புறம் பெரியவாதான் கோசாலை, கோவில்னு விரிவு படுத்தி இருக்கா. இன்னும், ஏழைகளுக்கு அன்ன தானம், படிப்பு, நூலகம், மருத்துவம், அனாதை பிரேத சம்ஸ்காரம், திதி கொடுக்கற வசதி எல்லாம் பண்ணனும்னு ஆசை இருக்கு. எல்லாம் பெரியவா தானே பார்த்துப் பார்த்து நடத்திக்கறா. அடுத்த வருஷம் பெரியவா ஜெயந்தியை ஒட்டி லலிதாம்பிகா பட்டாபிஷேகம், கும்பாபிஷேகம் பண்ணலாம்னு சங்கல்பிச்சுண்டு இருக்கேன். எல்லாம் அந்த கைலாசபதி கைலதான் இருக்கு. உலகம் பூரா பெரியவாளை கொண்டாடனும்னு எனக்கு ஆசை. அது இப்போ நிறைவேறிண்டு இருக்கு. பெரியவா இங்க இருந்துண்டு தர்ம பரிபாலனம் பண்ணுவா. அவரோட அனுக்ரஹத்துல நாடு சுபிக்ஷம் அடையும். ஜனங்கள் சந்தோஷமா இருப்பா.

தீபாவளியை பத்தி ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன். அன்னிக்கு விடிய காலம்பற எழுந்து, எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர் போட்டு ஸ்நானம் பண்ணுங்கோ. அந்த நன் நாள்ல எல்லா ஜலத்துலையும் கங்கை வாசம் பண்றதா ஐதீகம். விளக்குகள் ஏத்தி வச்சு, புதுசு உடுத்திண்டு, எல்லாருக்கும் இனிப்பு வழங்கி உறவுகளோடையும், நட்புகளோடையும் தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்கோ. தீயது எல்லாம் அழிஞ்சு, தர்மம் நிலைச்சு வீடும், நாடும், லோகமும் நன்னா இருக்கணும்'னு பிரார்த்தனை பண்ணிக்குங்கோ. ராம், ராம்.

அவர் முடித்து விட்டார். ஆனால், அவருடைய பக்தி, அசைக்க முடியாத நம்பிக்கை, எடுத்த கார்யத்தை முடிப்பதில் உறுதி, அதற்கான தைர்யம், தெளிவான சிந்தனை, தீர்கமாக யோசித்து முடிவெடுப்பது, விவேகமான செயலாற்றல், மலர்ந்த முகம், கனிவான குரல், எல்லோரிடத்திலும் அன்பு, நகைச்சுவை உணர்வு, அசாத்திய ஞாபகத்திறன் தவறுகளை கண்ணியமான கண்டிப்புடன் திருத்தும் பக்குவம், இவை ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் நமக்கு நீங்கவில்லை.

94433 70605 என்ற எண்ணில் மாமியுடன் பேசலாம். அவரது ஆஸ்ரமம் திருச்சி நொச்சியத்தில் மாதவப் பெருமாள் கோயில் அருகே உள்ளது, 4/305, ஐயன் கால்வாய் தெற்குக் கரையில். 'Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust'. என்ற பெயரில் இந்தப் பணி நடைபெறுகிறது

பெரியவா பாத்துப்பா !    (தீபாவளி போஸ்ட்)    கட்டுரை-கிருஷ்ணமூர்த்தி.    நன்றி-தினமணி.    kanchi    'தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. கோவில் கட்டட வேலை செய்யறவாளும், ஸ்தபதிகளும் ஊருக்கு போறதுக்கு ரெடியா நிக்கறா. ஆனா, அவாளுக்கு கொடுக்கறதுக்கு கைல பணம் இல்லை. எல்லா முயற்சியும் பண்ணிப் பார்த்தாச்சு. எங்கேயும் கிடைக்கல. உள் மனசு 'பெரியவா பாத்துப்பா'ன்னு சொல்றது, ஆனா வெளி மனசு வேலை செய்தவாளுக்கெல்லாம் பணம் கொடுத்தாத்தானே அவாளோட குழந்தைகளுக்கு டிரஸ், பட்டாசு, இனிப்பு, கார பதார்த்தங்கள் வாங்க முடியும்னு பதைபதைக்கிறது. அப்போ ஒரு போன் வரது, 'மாமி, டிரஸ்ட்ல பணம் போட்ருக்கேன், எடுத்துக்கோங்கோ'ன்னு. ஒரு நொடில நெருக்கடி தீர்ந்தது. அதுதான் பெரியவா. சன்யாசிகளே கங்கா ஸ்நானம் பண்ணி தீபாவளி கொண்டாடனும்னு அவர் சொல்லி இருக்கறச்சே, குடும்பஸ்தர்களை தவிக்க விட்ருவாரா என்ன?' என்று சிலாகிக்கிறார் ராஜலக்ஷ்மி விட்டல் மாமி.    rajalakshmiயார் இவர்? கோவில், ஸ்தபதி என்றெல்லாம் சொல்கிறாறே, அப்படியானால் இவர் ஏதேனும் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறாரா? யாருக்கு? சற்று விரிவாகவே இவரது கதையை பார்ப்போம்.    மாமிக்கு வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திருச்சியில் இருந்து முசிறி செல்லும் பாதையில் நொச்சியம் என்று வழங்கப்படும் மாதவப்பெருமாள் கோவில் என்கிற ஊரில் லலிதா பரமேஸ்வரிக்கு கோவில் எழுப்பிக் கொண்டிருக்கிறார். கணபதி, சுப்ரமண்யர், வேத வியாசர், ஆதி சங்கரர், மஹா பெரியவர் – இவர்களுக்கும் சன்னதிகள் உண்டு. அது சரி, இந்த வயதில் எதற்கு இப்படியொரு பகீரத பிரயத்தனம்?    'முதல்லேர்ந்து சொன்னாதான் புரியும். சொல்றேன் கேளுங்கோ. 1961ம் வருஷம். பூந்தமல்லி ரோட்ல எதோ ஒரு எடத்துல பெரியவா கேம்ப். என்னோட நாத்தனார் குடும்பத்துல எல்லாருக்கும் அவர் கிட்ட ரொம்ப பக்தி. நானும் அவரை தரிசனம் பண்ணனும்னு என் அப்பாவை அழைச்சிண்டு போனேன். மத்யான நேரம். அவர் பந்தலுக்கு கீழே உட்கார்ந்துண்டு இருந்தார். நான் ஒரு கம்பத்தை பிடிச்சு நின்னுண்டு அவரையே பார்த்துண்டு இருந்தேன். அவர் திடீர்னு எழுந்துண்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சார். என்னை தாண்டி போகும் போது 'நீ அமோகமா இருக்கப் போறே'ன்னு சொல்லிண்டே போனார். அப்போ எனக்கு அதோட அர்த்தம் தெரியலை. ஆனா, இப்போ புரியறது. அதுக்கப்றம் பெரியவா தன்னை எங்கிட்டேர்ந்து மறச்சுண்டுட்டா. குடும்பம், அகத்துக்காரர், குழந்தைகள் அப்டின்னே இருந்துட்டேன்.    அப்புறம் சில வருஷம் திருச்சில இருந்தோம். 1967-68ல மழையே இல்லை. ஜனங்கள் தண்ணிக்கு தவியா தவிச்சுது. லாரில தான் தண்ணி வரும். ஆடு, மாடுகளுக்கு அதுவும் கிடைக்கலை. விளைச்சல் இல்லை. விவசாயிகளும் ரொம்ப கஷ்டப்பட்டா. அப்போ, அரியூர் சுப்ரமண்ய கனபாடிகளோட இராமாயண பிரவசனம் வச்சேன். முதல் ஒன்பது நாள் மழைக்கான அறிகுறியே இல்லை. பத்தாவது நாள், இன்னைக்கும் மழை வரலைன்னா ராமனும் பொய், என்னோட பக்தியும் பொய், நான் இராமாயண உபன்யாசம் பண்றதையே விட்டுடறேன்னு அவர் சங்கல்பம் பண்ணிண்டார். அவர் ஊருக்கு கிளம்பற சமயம் வானம் பொத்துண்டு மழை கொட்டி தீர்த்தது. ராமன் தான் பொய் இல்லைன்னு நிரூபிச்சான்.    அதுக்கப்றம் நாங்க பெங்களூரு போய்ட்டோம். அப்போதான் மாமாவும் நானும் பெரியவாளுக்கு பிக்ஷை பண்ண ஆரம்பிச்சோம். அதுக்கு பின்னால ஒரு கதை இருக்கு. நான் என் நாத்தனார் கிட்ட நானும் உங்களை மாதிரி பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணனும்னு சொல்லுவேன். அவாளும், உனக்கு பெரியவா பக்தி இவ்வளவு இருக்கே, நிச்சயம் நடக்கும்னு சொல்லுவா. ஒரு நாள் ராத்திரி எனக்கு ஒரு கனவு வந்தது. வெள்ளை புடவை கட்டிண்ட ஒரு நடுத்தர வயசு மாதுவோட பெரியவா கதவை திறந்துண்டு உள்ளே வரா. ஆதிசங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் தான் அதுன்னு எனக்கு தெரியறது. அப்படின்னா, ஆதி சங்கரர் தான் இப்போ பெரியவாளா அவதாரம் பண்ணி இருக்கார்னு புரிஞ்சுது. நான் பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணனும்னு கேக்கறேன். அவர், எனக்கு வெறும் மோர் சாதம் போறும்னு சொல்றார். ஆனா, 1975க்கு அப்புறம் தான் நாங்க விடாம பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணினோம். அது பெரியவா 1994ல சித்தி ஆகற வரைக்கும் தொடர்ந்தது. அதுக்கப்றம் என்ன பண்றதுன்னு தெரியல. மத்தூர் சுவாமிகள் கிட்ட கேட்டேன். அவர், நீங்க இனிமே பெரியவா ஜெயந்தி கொண்டாடுங்கோன்னு சொன்னார். அது பெரியவா அனுக்ரஹத்துல இதுவரைக்கும் நடந்துண்டு வரது.    இதுக்கு நடுவுல 1986ல மைசூர் பேலேஸ்ல சீதா ராம பட்டாபிஷேகம் வடஇலுப்பை குமாரசாமி தீட்சிதரை வச்சு பண்ணினோம். அதுவும் பெரியவா ஏற்பாடு பண்ணினதுதான். ராமனோட சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் அமோகமா நடந்தது. நாங்க பிரசாதத்தையும் மத்த எல்லா சாமான்களையும் எடுத்துண்டு பெரியவாளை பார்க்க போனோம். அவர், 'என்ன, பரமேஸ்வரனுக்கு யக்ஞ சேஷத்தை கொண்டு வந்திருக்கியா'ன்னு கேட்டார். தான் சாக்ஷாத் ஈஸ்வரன்னு அவர் தன் வாயால சொன்னது எனக்கு பிரமிப்பா இருந்தது.    1988ல நடந்த அதிமஹா ருத்ரம் தான் என்னை அடியோட மாத்தினது. அதுல கொஞ்சம் கடன் ஆயிடுத்து. அப்போதான் நான் பெரியவாளை மனசுல நினைச்சுண்டு 'இன்னேலேர்ந்து என்னோட உடல், பொருள், ஆவி எல்லாமே உங்களை சேர்ந்தது. நான் உங்களோட அடிமை'ன்னு பிரதிக்ஞை எடுத்துண்டேன். அப்புறம் சில மாசத்துல கடனும் அடைஞ்சது.    பெரியவா சித்தி ஆனதுக்கு அப்பறம் முதல் ஜெயந்தி சென்னைல நடந்தது. அதுக்கு பின்னால திருச்சில பல இடத்துல பெரியவா ஜெயந்தி உற்சவம் பண்ணினோம். ஆனா, நமக்குன்னு ஒரு இடம் வேணும்னு தோணிண்டே இருந்தது. அப்போதான் கொள்ளிட கரைல இந்த இடத்தை பார்த்தேன். வாழை தோட்டம், தென்னை மரங்கள், மாடு, கன்னு குட்டிகள்னு ரொம்பவே பிடிச்சு போச்சு. பெரியவாளுக்குன்னு சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து வாங்கினோம். முதல்ல எனக்கு வேத பாடசாலை மட்டும்தான் மனசுல இருந்தது. அப்புறம் பெரியவாதான் கோசாலை, கோவில்னு விரிவு படுத்தி இருக்கா. இன்னும், ஏழைகளுக்கு அன்ன தானம், படிப்பு, நூலகம், மருத்துவம், அனாதை பிரேத சம்ஸ்காரம், திதி கொடுக்கற வசதி எல்லாம் பண்ணனும்னு ஆசை இருக்கு. எல்லாம் பெரியவா தானே பார்த்துப் பார்த்து நடத்திக்கறா. அடுத்த வருஷம் பெரியவா ஜெயந்தியை ஒட்டி லலிதாம்பிகா பட்டாபிஷேகம், கும்பாபிஷேகம் பண்ணலாம்னு சங்கல்பிச்சுண்டு இருக்கேன். எல்லாம் அந்த கைலாசபதி கைலதான் இருக்கு. உலகம் பூரா பெரியவாளை கொண்டாடனும்னு எனக்கு ஆசை. அது இப்போ நிறைவேறிண்டு இருக்கு. பெரியவா இங்க இருந்துண்டு தர்ம பரிபாலனம் பண்ணுவா. அவரோட அனுக்ரஹத்துல நாடு சுபிக்ஷம் அடையும். ஜனங்கள் சந்தோஷமா இருப்பா.    தீபாவளியை பத்தி ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன். அன்னிக்கு விடிய காலம்பற எழுந்து, எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர் போட்டு ஸ்நானம் பண்ணுங்கோ. அந்த நன் நாள்ல எல்லா ஜலத்துலையும் கங்கை வாசம் பண்றதா ஐதீகம். விளக்குகள் ஏத்தி வச்சு, புதுசு உடுத்திண்டு, எல்லாருக்கும் இனிப்பு வழங்கி உறவுகளோடையும், நட்புகளோடையும் தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்கோ. தீயது எல்லாம் அழிஞ்சு, தர்மம் நிலைச்சு வீடும், நாடும், லோகமும் நன்னா இருக்கணும்'னு பிரார்த்தனை பண்ணிக்குங்கோ. ராம், ராம்.    அவர் முடித்து விட்டார். ஆனால், அவருடைய பக்தி, அசைக்க முடியாத நம்பிக்கை, எடுத்த கார்யத்தை முடிப்பதில் உறுதி, அதற்கான தைர்யம், தெளிவான சிந்தனை, தீர்கமாக யோசித்து முடிவெடுப்பது, விவேகமான செயலாற்றல், மலர்ந்த முகம், கனிவான குரல், எல்லோரிடத்திலும் அன்பு, நகைச்சுவை உணர்வு, அசாத்திய ஞாபகத்திறன் தவறுகளை கண்ணியமான கண்டிப்புடன் திருத்தும் பக்குவம், இவை ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் நமக்கு நீங்கவில்லை.    94433 70605 என்ற எண்ணில் மாமியுடன் பேசலாம். அவரது ஆஸ்ரமம் திருச்சி நொச்சியத்தில் மாதவப் பெருமாள் கோயில் அருகே உள்ளது, 4/305, ஐயன் கால்வாய் தெற்குக் கரையில். 'Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust'. என்ற பெயரில் இந்தப் பணி நடைபெறுகிறது


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator