Friday 17 October 2014

தாரா தேவி-இந்து மதத்திலும் பௌத்த மதத்திலும்

தாரா தேவி-இந்து மதத்திலும் பௌத்த மதத்திலும்
==========================================

ஸ்ரீ வித்யா லகு பூஜையில் ஷண்மத தரிசனத்தில் பௌத்தம் சேர்க்க பட்டுள்ளது. அதற்கு தாரா தேவியின் மூல மந்த்ரம் சொல்ல படும்.
அது பௌத்தர்களும் சொல்லும் மந்திரமே.

ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா ॐ तारे तुत्तारे तुरे स्वाहा

இங்கு தாரவின் அஷ்டோத்ரம் செர்க்க பட்டுள்ளது-

தாரா தேவியின் மந்த்ரங்கள் பல உண்டு. வலையிலிருந்து கண்டெடுக்க பட்ட உருப்படியான பிரயோகங்கள்.

தாரா தேவி உபாசனை சத்ரு ஜெயம் கடல் பிரயாணங்களை தரும் என்பர்.இயற்கை சீற்றங்களை தடுப்பவள் என்பர்.

இமயமலை சாரலில் இவள் ஒரு பரவலாக அறிய பட்ட தெய்வம். புத்தரும் கூட இவள் உபதேசம் உடையவரே. அதனாலோ என்னவோ பிற்காலங்களில் பௌத்தம் தாரா தேவியை வழி பட ஆரம்பித்தது(வெளிப்படையாக).

சென்ற வருடம் அமர் நாத்தில் நடந்த சேதம் இவள் சிலையை அகற்றிய பின்னரே நடந்தது என்பது நினைவிருக்கும்.

சில குரு நாதர்களுக்கு சில மந்திரங்கள் உபதேசம் இருக்காது. ஆனால் அவரிடம் ஒரு தீக்ஷை பெற்றவர்களின் யோக்ய தாம்சத்தை அவர் புரிந்து கொள்வார்.ஒரு வேளை அவர் சொல்லாத மந்த்ரங்களை சொல்ல நமக்கு தகுதியிருந்து நாம் அதை அவரிடம் காட்டி அனுமதி பெற்றும் கூட செய்யலாம்.ஒரு லெவலில் இன்னொரு குரு நாதர் உங்களை வழி நடத்தவும் செய்யலாம்.

சில மந்த்ரங்களை சொல்ல கூடாது என்று அவர் சொல்லி விட்டால் அவற்றை நாம் செய்யலாகாது.

இந்த மந்த்ரங்களை பகிர்வதன் நோக்கம் அனைவரையும் சுயமாச்சார்யார்களாக மாற்றுவது அல்ல. ஒரு தெரிந்து கொள்ளலுக்கு.

இரண்டு அடிப்படையில் இவை பிரிக்கப்பட்டுள்ளன.
இங்கு ஹும்ஃபள் என்பது ஹும்ஃபட் ஆகும். யஜுர் வேதத்தில் ஹும்ஃபட் என்பது ரிக் வேஏதத்தில் ஹும்ஃபள் என்றாகி வரும்.

இதில் வசிஷ்டர் ஒரு முறை தாராவின் மன்ற்றத்தை வெகு காலம் உபாசித்தும் அவருக்கு அது சித்தியாகவில்லை. பின்னர் த்ரீம் என்பதை ஸ்த்ரீம் என்று மாற்றி ஜபிக்க பணிக்க பட்டார். சித்தி ஆனது.

அவர் சொன்ன மந்த்ரம்

For achieving the perfection of tara ritual and obtaining the siddhi,

the mantra - Om hrim trim hum phal

chandas - akshobhaya rishi , brahathi chanda , tara devatha.

இதில் வரும் த்ரீம் முதல் த. தத்த பீஜம் மூன்றாவது த.

1) Tara - Trijadatrakshari and
2) Tara - Saptakshari

since the rituals are different for the two, I will outline them separately in detail after discussing the mantric variants in general.

The common mantric variants are as follows:

1) Om trim hrim hum hrim hum phal (this is the Saptakshari mantra which Lord Brahma has used for the upasana of Tara Ma) . The same mantra is used in the Saptakshari ritual mentioned above.

2) Aim hrim srim klim sau: hum ugratare hum phal

3) Om hum hrim klim sau: hum phal

( both these mantra variants are used by lord Vishnu to do upasana of Tara Ma)

4) Aim hrim srim klim h(stress)sau: hum ugratare hum phal

5) Om hum hrim klim hasau: hum phal (with a "hu"kara with the fifth beeja) 
(Both these mantras are again used by lord Brahma for upasanas)

6) Om hrim hum phal

7) Trim hum hrim hum phal

8) Trim hum phal klim aim

( among this the first two has been used by lord Brahma and the eighth one by lord Vishnu)

All the above 8 mantra variants are having

shakhti rishi:, gayatri chanda, tara devata

Dhayana shloka:
"shwetambaram sharada chandrakandim
saadbhushanaam chandrakalavadamsam
kartrim kapaalanvithapaanipadmaam
taaram trinethraam prabhajeyokhiladhaaidhaeeye"

with this dhaya shloka, with proper austeries, 4 lakh times japa, followed by homa of red lotus flowers dipped in mixture of milk and ghee for 40,000 times and do the sapakshari pooja (the one I mentioned earlier). He/she will get the mantra siddhi.

If the homa is done with payasa made of jaggery mixed with honey for 1008 times, he/she will be reaching number one positions in all vidyas.

மேலும் சில விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

தாரா தேவியை வணங்குவது வாதங்களில் ஜெயிக்க மற்றும் வெளி நாட்டு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பர். கடல் கடக்க வைக்கும்.

தசமகா வித்யாவில் வரும் ஒரு அவதார தேவியே தாரா தேவி என்பவள். அவள் யார்? அவள் மகா சக்தியின் மூன்றாவது கண்ணாக வந்தவளாம். அவளைப் பற்றி கூறப்படும் ஒரு கதை இது.

சிவ பெருமான் ஆலகால விஷத்தை தேவர்களைக் காப்பாற்ற உண்ட பின் அது தொண்டையில் தங்கி விட்டது. அந்த விஷத்தினால் அவர் மிகவும் அவதிப்பட்டார். அந்த விஷத்தின் கடுமையினால் உடல் முழுவதும் எரியத் துவங்கியது. சாப்பிட முடியவில்லை

ஆகவே தாரா தேவி அவரை தன் மடியில் குழந்தைப் போல படுக்க வைத்துக் கொண்டு தனது மார்பில் இருந்து பாலை குடிக்க விட்டாளாம் . அதை குடித்தப் பின்னரே அவர் சாதாரண நிலைக்கு வந்தாராம். 
கல்கத்தாவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபீத் என்ற ஊரில் உள்ள தாரா தேவியின் ஆலயத்தில் சிவபெருமான் தாராவின் மடியில் குழந்தைப் போல படுத்துள்ள உருவச் சிலை உள்ளதாம்.

அங்கு தாரா தேவியை 5000 வருடங்களுக்கு முதலே வழிபாட்டு வந்துள்ளனர் என நம்புகிறார்கள்.

அது போல முன்னர் இருந்த பெங்காலை ( இன்று மேற்கு வங்காளம் ) ஆண்டு வந்த ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து ஹிமாசலப் பிரதேசத்தில் வேட்டைக்குப் போனபோது , அங்கு அசதியால் ஒரு காட்டில் உறங்கிவிட்டார். அப்போது அவர் கனவில் பைரவர், ஹனுமான் மற்றும் தாரா தேவி தோன்றி தாரா தேவிக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆலயம் அமைக்குமாறு கூற அவர் அவளுக்கு அங்கு ஆலயம் அமைத்தாராம். ஆக அந்த இரண்டு ஆலயங்களுமே அதாவது மேற்கு வங்கம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாரா தேவியின் ஆலயங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

தாரா தேவிக்கு நிலா தார தந்திரா எனும் வித்தையின் அனைத்து மர்மங்களையும், மந்திரங்களையும், தந்திரங்களையும் மகாகால பைரவரே போதித்தாராம். அந்த தந்திர வித்தையின் மந்திரங்களை உள்ளடக்கியதே மகா வித்யாவின் ஒரு யந்திரம். தாரா தேவிக்கு நான்கு கைகள். ஒரு கையில் வாள், இன்னொன்றில் தாமரைப் பூ, மூன்றாவதில் கத்தரி மற்றும் நான்காவதில் கமண்டலம் உள்ள கோலத்தில் காட்சி தருகிறாள். காலடியில் ஒருவன் கிடக்க அது தன்னிடம் சரண் அடைந்தவர்களின் மனத்தைக் கட்டுப்படுத்தி தன் அடியில் அடக்கி வைப்பதை குறிப்பது என்கிறார்கள்.
பார்ப்பதற்கு தாரா தேவி எத்தனை கோபமானவளாகத் தெரிகிறாளோ அத்தனை கருணை மிக்கவள். ஞானத்தைத் தருபவள். அவள் அனைத்து கிரகங்களுக்கும் தலைவரான பிரஹஸ்பதியின் குருவாம். அவளுக்கு நான்கு உருவங்கள் உண்டாம். அவை :

1) லஷ்மியாக பூஜிக்கப்படும் தேவி
2) உக்ர தாரா 
3) மகா உக்ர தாரா மற்றும்
4) நீல சரஸ்வதி.

http://santhipriyaspages.blogspot.in/2010/08/dasa-mahavidyas-ten-aspects-of-sakthi_01.html

தாரா அஷ்டோத்ர சத நாமாவளி

ஓம் தாரண்யை நம
ஓம் தரலாயை நம
ஓம் தன்வ்யை நம
ஓம் தாராயை நம
ஓம் தருணவல்லர்யை நம
ஓம் தீர ரூபாதர்யை நம
ஓம் ச்யாமாயை நம
ஓம் தனுக்ஷீணபயோதராயை நம
ஓம் துரீயாயை நம
ஓம் தரலாயை நம

ஓம் தீவ்ரகமனாயை நம
ஓம் நீலவாஹின்யை நம
ஓம் உக்ரதாராயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் சண்ட்யை நம
ஓம் ஸ்ரீ மதேக ஜடாசிராயை நம
ஓம் தருண்யை நம
ஓம் சாம்பவ்யை நம
ஓம் சின்ன பாலாயை நம
ஓம் பத்ரதாரிண்யை நம

ஓம் உக்ராயை நம
ஓம் உக்ரப்ரபாயை நம
ஓம் நீலாயை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் நீல சரஸ்வத்யை நம
ஓம் த்விதீயாயை நம
ஓம் சோபனாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நவீனாயை நம
ஓம் நித்யநூதனனாயை நம

ஓம் சண்டிகாயை நம
ஓம் விஜயாராத்யாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ககனவாஹின்யை நம
ஓம் அட்டஹாஸ்யாயை நம
ஓம் கராளாஸ்யாயை நம
ஓம் சராஸ்யாதிதிபூஜிதாயை நம
ஓம் சுகுணாயை நம
ஓம் சுகுணாராத்யாயை நம
ஓம் ஹரீந்த்ரதேவ பூஜிதாயை நம

ஓம் ரக்தப்ரியாயை நம
ஓம் ரக்தாக்ஷ்யை நம
ஓம் ருதிராஸ்ய விபூஷிதாயை நம
ஓம் பலிப்ரியாயை நம
ஓம் பலிரதாயை நம
ஓம் துர்தாயை நம
ஓம் பலவத்யை நம
ஓம் பலாயை நம
ஓம் பலப்ரியாயை நம
ஓம் பலரதாயை நம

ஓம் பலராமப்ரபூஜிதாயை நம
ஓம் அர்த்தகே சேஸ்வர்யை நம
ஓம் கேசாயை நம
ஓம் கேசவாயை நம
ஓம் சவிபூஷிதாயை நம
ஓம் பத்மாலாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் காமாக்யாயை நம
ஓம் கிரிநந்தின்யை நம
ஓம் தக்ஷிணாயை நம

ஓம் தக்ஷõயை நம
ஓம் தக்ஷஜாயை நம
ஓம் தக்ஷிணேரதாயை நம
ஓம் வஜ்ரபுஷ்பப்ரியாயை நம
ஓம் ரக்தப்ரியாயை நம
ஓம் குசுமபூஷிதாயை நம
ஓம் மாஹேஸ்வர்யை நம
ஓம் மஹாதேவப்ரியாயை நம
ஓம் பஞ்சவிபூஷிதாயை நம
ஓம் இடாயை நம

ஓம் பிங்களாயை நம
ஓம் கஷும்னாப்ராண ரூபிண்யை நம
ஓம் காந்தார்யை நம
ஓம் பஞ்சம்யை நம
ஓம் பஞ்சானனாதி பரிபூஜிதாயை நம
ஓம் தத்ய வித்யாயை நம
ஓம் தத்ய ரூபாயை நம
ஓம் தத்யமார்கானுசாரிண்யை நம
ஓம் தத்வரூபாயை நம
ஓம் தத்வப்ரியாயை நம

ஓம் தத்வஞானாத் மிகானகாயை நம
ஓம் தாண்டவா சார சந்துஷ்டாயை நம
ஓம் தாண்டவப்ரியாகாரிண்யை நம
ஓம் தாளதானரதாயை நம
ஓம் க்ரூரதாபின்யை நம
ஓம் தரணிப்ரபாயை நம
ஓம் த்ரபாயுக்தாயை நம
ஓம் த்ரபாமுக்தாயை நம
ஓம் தர்பிதாயை நம
ஓம் த்ருப்திகாரிண்யை நம

ஓம் தாருண்ய பாவசந்துஷ்டாயை நம
ஓம் சக்தி பக்தானுராகிண்யை நம
ஓம் சிவாசக்தாயை நம
ஓம் சிவரத்யை நம
ஓம் சிவபக்தி பராயணாயை நம
ஓம் தாம்ரத்யுத்யை நம
ஓம் தாம்ர ராகாயை நம
ஓம் தாம்ர பாத்ரபோஜின்யை நம
ஓம் பலபத்ரப்ரேமரதாயை நம
ஓம் பலிபுக்யை நம

ஓம் பலிகல்பின்யை நம
ஓம் ராமரூபாயை நம
ஓம் ராமசக்த்யை நம
ஓம் ராமரூபானுகாரிண்யை நம
ஓம் ராமாயை நம
ஓம் ரதிரூபாயை நம
ஓம் தத்வமயை நம
ஓம் தாராதேவியை நம

உக்ரதாரா, நீலஸரஸ்வதி, ஏகஜடா என்ற 3 பெயர்களால் கூறப்படுபவள். தாரா கருநீல நிறத்தினள். தாராவின் கையில் உள்ள, கத்திரிக்கோல் அவளைக் காளியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. புத்த மதத்தைப் பின்பற்றும் திபெத்தியர்களுக்கு தாரா கருணைக் கடவுள். இரக்க குணமுள்ளவள். அண்ட சராசரங்களைத் தன்னுள் கொண்டுள்ளதால், கர்ப்பிணிப் பெண்ணைப் போல் சற்று மேடான வயிற்றை உடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆல கால விஷத்தை அருந்திய சிவனுக்கு தாயைப் போல் பாலூட்டிக் காப்பாற்றி, இறைவனுக்கும் தாயானவள்.

வாக்குத் திறமையை அளிப்பதில் வல்லவள். கவிதை நடையிலும் உரைநடையிலும் சிறப்பாக எழுதும் ஆற்றலைத் தருவதில் வல்லவள். தன்னை வழிபடும் உண்மையான பக்தனை மிகப்பெரிய பேராபத்திலிருந்தும் காப்பாற்றிப் பாதுகாக்கும் சக்தியினள். துர்வாஸர், வால்மீகி, பரத்வாஜர் ஆகியோர் தாராவை ஆராதித்து பெரும்பேறு பெற்றனர் என்று தாரா தந்திரம் கூறுகிறது. கைலாயமலை பரிக்ரமாவில், இரண்டாம் நாள் வரும் டோல்மாபாஸ் பகுதியின் காவல் தெய்வம் தாரா. அதனால் டோல்மாபாஸ் பகுதி தாரா பீடம் என்று அழைக்கப்படுகிறது. தாரா தேவியினது கோயில் இமாசலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள தாரா தேவி மலையில் உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள தாம்லுக் என்ற துறைமுக நகரிலும் தேவதச்சன் விஸ்வகர்மா கட்டிய கோயில் உள்ளது.

பௌத்தம் முழுக்க முழுக்க தாரா உபாசனையை கொண்ட்து.

பௌத்த்த்தில் வஜ்ராயனம் என்ற பிரிவு தந்த்ரா கொள்கைகளை முன்னிறுத்தும். ஆச்சார்ய ரஜ்னீஷ் எனப்படும் ஒஷோ இதைத்தன் கையாண்டார்.

புத்தரும் பூர்வாசிரமத்தில் இந்துதான் என்பதை மறந்து விட கூடாது. அவர்களின் குலாசாரப்படி அவருக்கு தாரா உபாசனை பிறப்புரிமை என்பதை நாம் நினைவு கூர்ந்தால் இது அதிசயமாக தெரியாது.

மேலும் புத்தர் தான் ஒரு மத்த்தை ஸ்தாபிக்க வேண்டி பிரயாசை பட வில்லை. அவர் செய்த உபாசனைகளை அவர் அறிவித்திருக்க வேண்டிய கட்டாயங்களுமில்லை.

பௌத்தத்தில் தாரா
==========================

தாரா அல்லது ஆர்ய தாரா திபெத்திய பௌத்தத்தில்வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். தாரா திபெத்திய தந்திர பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் நமது நற்செயல்களின் வெற்றியினால் கிடைக்கும் நன்மையின் அதிபதியாக கருதப்படுகிறார். ஒரு தந்திர தேவதையாக தாராவஜ்ரயான பௌத்தத்தின் திபெத்திய பிரிவினரால் வணங்கப்படுகிறார். கருணை மற்றும் சூன்யத்தன்மையில் சில அந்தரங்க மற்றும் ரகசிய குணங்களை புரிந்து கொள்ள திபெத்திய பௌத்தர்கள் தாராவை வணங்குகின்றனர். ஜப்பானின் ஷிங்கோன் பௌத்தத்தில் இவர் தாரானி பொசாட்ஸு என அழைக்கப்படுகிறார்.
உண்மையில் தாரா தேவி என்பது பொதுவியல்புகளை உடைய பல போதிசத்துவர்களின் ஒரு பொதுப்பெயரே ஆகும். பௌத்தத்தில் போதிசத்துவர்கள் பல்வேறு நற்குணங்களின் உருவகங்களாகவே கருத்தப்பட்டுவருகின்றனர். அந்த வகையில், ஒரே குணத்தில் பல்வேறு இயல்புகளை இந்த பல்வேறு தாராக்கள் வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்ளலாம்.
தாரா தேவின் புகழ்பெற்ற வடிவங்கள்:
• பச்சை தாரா, உயர்ந்த செய்லகளின் அதிபதி
• வெள்ளை தாரா, கருணை, நிண்ட ஆயுள் மற்றும் அமைதியுடன் தொடர்புள்ளவர்
• கறுப்பு தாரா, ஆற்றலுடன் தொடர்புடையவர்
• மஞ்சள் தாரா, செல்வ செழிப்புடன் தொடர்புடையவர்
• நீல தாரா, கோபத்துடன் தொடர்புடையவர்
• சித்தாமனி(चित्तामनि) தாரா, யோக தந்திரத்தில் வணங்கப்படும் ஒரு தாரா
• கதிரவனி(खदिरवनि) தாரா, தேக்கு வனத்தின் தாரா
இத்துடன் சேர்த்து 22 தாராக்கள் திபெத்திய பௌத்தர்களால் வணங்கப்படுகின்றனர்.

பௌத்தத்தில் தாரா தேவி[தொகு]

திபெத்திய பௌத்ததில் தாரா தேவி கருணை மற்றும் செயல்களின் போதிசத்துவராக கருதப்படுகிறார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் அம்சமாக கருதப்படுகிறார், சில கதைகளில் தாரா அவலோகிதேஷ்வரரின் கண்ணீர் துளிகளில் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.

தாரா ரட்சிப்பின் தேவியாக கருதப்படுகிறார். உயிர்களின் துன்பங்களை தீர்ந்து அவர்களை சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கிறார்.

தாராவின் தோற்றம் இந்து மதத்திலேயே நிகழ்ந்தது, இலட்சுமி, சரஸ்வதி, பார்வதி போல தாரா தேவியும் இன்றளவும் இந்து மதத்தில் வணங்கப்படுகிறார். 6ஆம் நூற்றாண்டில் தாரா பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது.

பிறகு தாரா, தந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்று, பிரசித்தியுடன் விளங்க ஆரம்பித்தார். தாராவின் வழிபாடு திபெத் மற்றும் மங்கோலியாவில் மிகவும் பரவலாக உள்ளது.

போதிசத்துவராக தோற்றம்[தொகு]

தாரா போதிசத்துவராகத் தோன்றியது குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அவலோகிதேஷ்வரர் உலக மக்களின் துன்பங்களை கண்டு கண்ணீர் துளி வடிந்தது எனவும், அந்த துளியே தாரா தேவியாக உருமாறியது எனவும் பொதுவாக நம்பப்படுகிறது.

இன்னொரு கதையில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது. யேஷே தாவா என்ற இளவரசி பல கோடி வருடங்களுக்கு முன்பு இன்னொரு பிரபஞ்சத்தில் இருக்கிறார். பல கல்பங்களுக்கு அவள் அவளுடைய உலகத்தின் புத்தரான "டோன்யோ துரூபா"வுக்கு பூஜைகள் செய்கிறாள். அவளுக்கு புத்தரிடமிருந்துபோதிசித்ததை குறித்து சிறப்பு நெறிமுறைகள் கிடைக்கின்றன. இதை அவள் செயது முடித்த பின், சில துறவிகள் அவளிடத்தில் வந்து அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டுமெனில், அடுத்த பிறவில் ஆணாக பிறக்க சிறிது புண்யங்களை அர்பபணிக்குமாறு கூறுகின்றனர்.

இதை கேட்ட இளவரசி, ஆண் பெண் பாகுபாடு என்பது போதிநிலைக்கு கிடையாது எனக் கூறுகிறாள். மிகச்சிலரே உயிர்களுக்கு பெண் வடிவில் உதவுகின்றனர் என சோகத்துடன் தெரிவிக்கிறார். எனவே எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஒரு பெண் போதிசத்துவராகவே பிறக்க வேண்டுமென உறுதிபூணுகிறார். பிறகு, ஒரு கோடிவருடங்கள்தியாயனத்தில் மூழ்குகிறார். அந்த ஒரு கோடி வருட தியானத்தின் பயனாக பல கோடி உயிர்கள் சம்சாரத்தில் இருந்து விடுபடுகின்றன. இந்த நற்செயலாம், அவ்வுலகத்தின் புத்தர் 'டோன்யோ துரூபா' அவள் போதிநிலை அடைந்து பல உலகங்களுக்கு தாரா தேவியாக இருப்பாள் என அவளிடத்தில் கூறுகிறார்

மந்திரங்கள்[தொகு]
கீழ்க்கண்ட மந்திரம் அனைத்து தாராக்களும் பொதுவான மந்திரமாகக் கருதப்படுகிறாது

ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா ॐ तारे तुत्तारे तुरे स्वाहा

வெள்ளைத் தாரா தேவிக்கு மேற்கூறிய மந்திரத்துடன் மேலும் சில சொற்கள் இணைக்கப்படுகின்றன

ஓம் தாரே துத்தாரே துரே மம ஆயு: புண்ய ஞான புஷ்டிம் குரு ஸ்வாஹா ॐ तारे तुत्तारे तुरे मम आयु: पुण्य ज्ञान पुष्टिं कुरु स्वाहा

தாராவின் பீஜாக்ஷரம் தாம்(तां) ஆகும்

தமிழ் நாட்டில் தாரா தேவி வழிபாட

தமிழ்நாட்டில் 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்தது. பௌத்தம் செல்வாக்கை இழந்து மறைந்த நிலையில், பல பௌத்தக் கோவில்கள் இந்துக் கோவில்களாக மாற்றம் பெற்றன. அவ்வாறே தாரா தேவி கோவில்கள் இந்து அம்மன் கோவில்களாக உருமாற்றம் பெற்றதாக நம்பப் படுகிறது. கிராமங்களில் வணங்கப்படும் திரௌபதியம்மன் கோவில்கள், பழங்காலத்தில் தாரா தேவியை குறித்தனவாக இருக்கும் என கருதப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கூட பழங்காலத்தில் பௌத்த தாரா தேவி கோவிலாக இருந்து பின்னர் இந்து கோவிலாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என அரசு சிற்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்குக் கருவறையில் முற்காலத்தில் இருந்த புத்த விக்ரஹமும் (தற்போது அருங்காட்சியகத்தில் உள்ளது) கோவில் பிரகாரத்தில் இருக்கும் புத்த பகவான் சிலைகள் போன்றவை ஆதாரமாக கூறப்படுகின்றன. மேலும்காஞ்சிபுரத்தில் உள்ள சில திரௌபதியம்மன் கோவில்களிலும் புத்த பகவான் சிலைகள் காணக் கிடைக்கின்றன.

ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்'s photo.
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்'s photo.
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்'s photo.
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்'s photo.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator