Wednesday 1 October 2014

தமிழ் நம் உயிர் ; அதுபோல் வடமொழி நமது ஆன்மா !

சமஸ்க்ருதம் பற்றி கண்ணதாசன் -:

"தமிழ் உயிர் என்றால் வடமொழி நம் ஆன்மா "

எந்த மொழியையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது .

அது மட்டும் அல்ல ; அவன் தனக்கே துரோகம் செய்து கொள்கிறான் .

வெறுப்பினால் பிறமொழிகளைப் படிக்காது விட்டுவிடுகிறவன் , அற்புதமான கருவூலங்களை இழந்துவிடுகின்றான் .

வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம் 
.
தமிழைப் போலவே " தோன்றிய காலம் " தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன .!

வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக , இப்போது
" பகவத் கீதை " விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன் .

பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமணியைப் போல் சந்தக் கவிதைகளாக்கியுள்ளேன் .

இந்தச் ' சுயபுராணம் ' எதற்கு என்றால் பல மொழி கற்பதில் உள்ள சுகத்தைச் சொல்லவே !

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது . அவர்களுக்கு வடமொழிப் பயிற்சியும் இருக்குமானால் , மற்றவர்களைத் திகைக்க 
வைக்கலாம் ! சபையில் நிமிர்ந்தது நிற்கலாம் !

முட்டாள்தனமாக ' வடமொழி செத்தமொழி ' என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு , நான் என் காலத்தை வீணாக்கி விட்டேன் .
இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும் .
ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும் !

தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது வெத்து அரசியல் .
தமிழ் நம் உயிர் ; அதுபோல் வடமொழி நமது ஆன்மா !

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator