Monday 17 February 2014

கோழை குணம் மாற்று தோழா!

கோழை குணம் மாற்று தோழா!
*நம்புங்கள். ஆழமாக நம்புங்கள். நீங்கள் முன்னேறியே ஆக வேண்டும் என கடவுளே ஆணை பிறப்பித்து விட்டார்.
*கடவுளின் கையில், மனிதன் ஒரு கருவியாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான மகிழ்ச்சி பிறக்கும்.
*நீண்ட இரவு கழிந்து விட்டது. பகல் பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது, உங்களுக்கு வேண்டியதெல்லாம் உற்சாகம் மட்டுமே.
*எப்போதும் கடவுளை மட்டுமே சார்ந்திருங்கள். அப்போது தான் உங்களால் எதையும் எதிர்த்து நிற்கவும், சரியான பாதையில் செல்லவும் முடியும். 
*ஒழுக்க நெறியில் நில்லுங்கள். வெற்றி வீரனாகத் திகழுங்கள். முழுமனதுடன் கடமையில் ஈடுபடுங்கள். எல்லையற்ற துணிவுடன் செயலாற்றுங்கள்.
*வஞ்சனையால் ஒரு பணியையும் செய்ய இயலாது. அன்பாலும், உண்மையாக நடப்பதாலும் மட்டுமே நீங்கள் பேராற்றலைப் பெற முடியும்.
*இளைஞர்களே! நீங்கள் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். நாய்களின் குரைப்பைக் கண்டு நடுங்காதீர்கள். வாழைப்பூ போல பூமி நோக்கி பார்க்க வேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.
*உங்களுக்குள் எல்லா ஆற்றலும் குவிந்து கிடக்கிறது. நீங்கள் பலசாலி என்பதை மறந்து விடக்கூடாது. சிங்கத்தைப் போன்ற வீரதீரமுள்ளவனையே திருமகள் நாடி வருகிறாள்.
*உழைக்கத் தொடங்குங்கள். உலகில் வந்து பிறந்து விட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் நன்மையை விட்டுச் செல்லுங்கள்.
*உள்ளுக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை எங்கும் வெளிப்படுத்துங்கள். அதைச் சுற்றி ஒவ்வொன்றும் அதற்கு இசைவாக ஒழுங்குடன் நடக்கத் தொடங்கும். 
*எல்லா உயிர்களும் கடவுளின் அம்சம் என்பது உண்மை தான். இருந்தாலும், அனைத்திலும் மேலான, உயர்ந்த கோயிலாக மனிதன் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
*மனம் கட்டுப்படாமல் இருப்பவன், யாருமின்றி காட்டிலோ, குகையிலோ வாழ்ந்து கூட பயனில்லை. மனம் வசப்பட்டு விட்டால், இருக்கும் இடத்திலேயே நல்ல சூழ்நிலையை ஒருவனால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
*எதையும் சரியான முறையில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், உலகை அழகாகவோ, விகாரமாகவோ மாற்றும் சக்தி, மனதில் எழும் எண்ணத்திற்கு இருக்கிறது.
*உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை நம்புங்கள். உலகில் காணும் அனைத்தும் புனிதமானது, அழகானது, நன்மை தர வல்லது என்று முழுமையாக நம்புங்கள். 
*சுற்றியுள்ள சூழ்நிலை உங்களைப் பயமுறுத்தலாம். துன்பம் மலையளவு கூட இருக்கலாம். ஆனால், எதற்கும் பயப்படுவது கூடாது. காலத்திற்கு எல்லை கிடையாது. திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்காமல், முன்னேறிச் செல்லுங்கள்.
*எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறி விடுவீர்கள். வலிமையானவர்களாக உங்களை எண்ணிக் கொண்டால், வலிமை மிக்கவராக மாறி விடமுடியும்.
*ஆசை, கோபத்துக்கு அடிமையாக இருக்காதீர்கள். இவற்றுக்கு அடிமையாக இருப்பவன், உண்மையான சுதந்திரத்தையோ, இன்பத்தையோ அனுபவிக்க முடியாது.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator