Saturday 12 April 2014

இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் !

இட்லி, தோசை கடை மாவு:

ஒரு ஸ்லோ பாய்ஸன் !

என்ன தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டீர்களா,

ஆம் இது பெரிய உண்மை.

மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான்.

ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள்.

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை.

இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.

ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் கிரைண்டர் என்றானது.

அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.

முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும்.

பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதழ் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது.

முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது.

மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர்.

வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும்.

ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும்.

புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும்.

ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஆகிறது,

சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.

ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான்.

கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.

4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப வேண்டும்.

நகங்கள் வளர்க்கவே கூடாது.

ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது.

இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும்.

இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள்.

வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும்

ஆனால்
இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!

9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். 
அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள்.

இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை 
அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் 
இருக்காது என்பதற்காகத்தான்.

நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும்

அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும்,

ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.

கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது.

மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை.

தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும்.

இது பற்றிய முழு விபரங்களை காண:http://timesofindia.indiatimes.com/topic/search?q=idli-dosa+batter (நன்றி-உணவு உலகம்)

நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து.

இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும்.

அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.

இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.

தயவு செய்து இயன்றால் இதை பலருக்கும் பகிரவும், முடிந்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

ஆகவே, இந்த விழிப்புணர்வை உங்களால் முடிந்த அளவு
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாற்று கருத்து இருப்பினும் அதையும் இங்கே பகிருங்கள்.

நன்றி



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator