Tuesday 15 April 2014

2020 -ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கை கோள்: இஸ்ரோ திட்டம்

2020 -ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கை கோள்: இஸ்ரோ திட்டம்

சென்னை:வரும் 2020-ம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: வரும் 2017முதல் 2020-ம் ஆண்டிற்குள்ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கு செயற்கை கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாகஇரண்டாம் கட்டமாக சந்திராயன்-2 செயற்கை கோள தயாரிக்கப்பட்டு அவை நிலவில் தரையிறங்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 
தற்போதைய சூழ்நிலையில் ஜி.எஸ்.எல்.வியின் திறனை மேம்படுத்தும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2014 முதல் 2017-ம் ஆண்டிற்குள் நான்கு டன் அளவு அதி்கரிக்கப்பட உள்ளது.தொடர்ந்து 2020-ம் ஆண்டிற்குள் மேலும் ஆறு முதல் 10 டன் அளவு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிழய பேரிடர் தடுப்பது குறித்து கையாள்வதற்காக அனுப்பப்பட்ட கல்பனா, இன்சாட் 3-டி செயற்கை கோள் மிகவும் உதவிக்கரமாக செயல்பட்டு வருகிறது. அவை அனுப்பிய 400கக்கும் மேற்பட்ட புகைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கூறினார். 
இந்திய பகுதிகள் குறித்து ஆராய்வதற்காகஅனுப்பப்ட உள்ள ஐ.ஆர். என்.எஸ்.எஸ்1-பி வகை செயற்கை கோள்கள் அமெரிக்காவின் குளோபல் பொசிசன் முறைக்கு நிகரானதாக அமையும் என தெரிவித்தார். 
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கை கோள் திட்டமிட்டபடி சரியானபாதையி் செல்வதாகவும் , அதன் மொத்த பயண தூரமான 680 மில்லியன் கி.மீ தூரத்தில் தற்போது மூன்றில் ஒருபங்கு தூரத்தை கடந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator